மூங்கில் அரிசிமூங்கில் அரிசி... இயற்கையின் அற்புதக் கொடை!

*நெல் போலவே இருக்கும்.

*பழங்குடி மக்களின் முக்கிய உணவு.

*60 வயதான மரத்தில்தான் கிடைக்கும்.

*உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்.

வாழையடி வாழையாக வாழ்க... மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்கஎன மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன.
அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்... தன் வாழ்நாளை முடிக்கும்போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் மூங்கில் அரிசி என அழைக்கப்படுகிறது.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு. பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது.

போர் வீரர்களுக்கான உணவு!

இது குறித்து, சித்த மருத்துவரிடம் கேட்டபோது, “ஆக்சிஜனை அதிகமாக வெளியிடும் மரம் மூங்கில். மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். அந்தக் காலத்தில் அரசர்கள், போர் தளபதிகள், வீரர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டிருக்கிறார்கள். வீரியமான உணவுகளில் இன்றும் மூங்கில் அரிசி இடம் பெறுகிறது. இதில் மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தையமின், ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது. உடம்புல இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி இந்த அரிசிக்கு உண்டு.  பசியைக் குறைக்கும். ஆற்றலைப் பெருக்கும். உடல் எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க  உதவும். இதைச் சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி எல்லாம் சரியாகும். இதை, தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றோடு கலந்து சமைத்து சாப்பிடலாம். தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு சுகமளிக்கும்என்றார்.

மூங்கில் அரிசி கஞ்சி!

மூங்கில் அரிசிய ஊற வெச்சி, ஒண்ணு ரெண்டா இடிச்சு கொதிக்கிற உலையில கொட்டி கலக்கி வேக விடணும். நல்லா கொதிச்சி, வாசம் வந்ததும் இறக்கி, ஆற வெச்சா கஞ்சி தயார். அதைக் குடிச்சா அவ்ளோ பிரமாதமா இருக்கும். பொதுவா மூங்கில் அரிசி உடம்புக்கு சூடு. அதனால கர்ப்பிணி பெண்களும் சூட்டு உடம்புக்காரங்களும் தவிர்க்கிறது நல்லதுஎன்றார்
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.
ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசிவகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.
மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில்நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

மூங்கில் அரிசி வாங்க மற்றும் மேலும் அதிக உபயோகமான மூலிகை பொருட்களை பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்

K7 Herbo Care,
S.S.Colony North Gate,
Madurai-625016, 
Tamilnadu, India.
Call : +91-9025047147.
Whatsapp & Call : +91-9629457147. 
www.k7herbocare.com


பிரண்டை உப்பு                                             Pirandai Salt


மேற்கண்ட மூலிகைகள்வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact... 

Keywords for மூங்கில் உப்பு:


மூங்கில் அரிசி, மூங்கில் அரிசி சாதம் செய்முறை, மூங்கில் அரிசி விலை, மூங்கில் அரிசி பாயாசம், மூங்கில் அரிசி கிடைக்கும் இடம், மூங்கில் அரிசி பயன்கள், மூங்கில் அரிசி தோசை, மூங்கில் அரிசி இட்லி, ஊளைச் சதை குறைய, ஊளைச் சதை குறைக்க சில வழிகள், ஊளைச் சதையை குறைக்க, கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு, கொழுப்பை குறைப்பது எப்படி, கொழுப்பை குறைக்க, கொழுப்பை கரைக்கும் உணவுகள், கொழுப்பை கரைக்க, கொழுப்பை குறைக்கும் உணவு, கொழுப்பை குறைக்கும் வழிகள், கொழுப்பை குரைக்க, கொழுப்பை கரைப்பது எப்படி, முதுகெலும்பு வலி, முதுகெலும்பு வலி நீங்க, முதுகெலும்பு பலம் பெற, மூட்டில் நீர், கழுத்து வலி, கழுத்து வலி மருந்து, கழுத்து வலி உணவு, கழுத்து வலி குணமாக, கழுத்து வலி நீங்க, கழுத்து வலி வர காரணம், கழுத்து வலி மருத்துவம், கழுத்து வலி மயக்கம், கழுத்து வலி காரணங்கள், கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள், கால்சியம் உள்ள உணவுகள், கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், கால்சியம் உணவு, கால்சியம் நிறைந்த உணவுகள், நார்ச்சத்து உணவுகள், நார்ச்சத்து உணவுகள் எவை, நார்ச்சத்துள்ள உணவுகள், நார்ச்சத்து மிகுந்த உணவுகள், நார்ச்சத்து, நரம்பு தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி என்றால் என்ன, நரம்பு தளர்ச்சி நோயின் அறிகுறிகள், நரம்பு தளர்ச்சி அறிகுறிகள், நரம்பு தளர்ச்சி அறிகுறி, நரம்பு தளர்ச்சி நீங்க உணவுகள், நரம்பு தளர்ச்சி காரணம், நரம்பு தளர்ச்சி மருந்துகள், நரம்பு தளர்ச்சி குணமாகும், நரம்பு தளர்ச்சி சித்த மருத்துவம்,