இதய நோய்களைச் சரி செய்யும் சிருங்கி பற்பமும், பிரண்டை உப்பும், மருதம்பட்டை உப்பும்
பிரண்டை உப்பு Pirandai Salt
இது, கலைக்கோடு என்றும் சிருங்கி என்றும் வழங்கப்படுகின்றது.
இதற்கு வெளிப்பிரயோகத்தில் துவர்ப்பி, தாதுவெப்பகற்றிச் செய்கைகளும், உட்பிரயோகத்தில் உடல் தேற்றி, குருதிப்பெருக்கடக்கி, இருதயத்திற்கும், நுரையீரலுக்கும் உரம் உண்டாக்கிச் செய்கைகளும் உள. இதன் குணத்தை கீழ்ச் செய்யுட்களால் அறியலாம்.
கலைமான் கொம்பின் குணம்
“அவயத்தின் வெப்ப மதியத்தி மேகங்
கவிழ்திரிதோ டம்பெருந்தா கங்க---ளிவைதா
நிலைக்குமோ மார்புநோய் நேந்திரநோய் நீங்குங்
கலைக்கொம்பாற் பேயுமிலைக் காண்.”
பொருளுரை: கலைமான் கொம்பினால் கைகால் எரிவு, அஸ்தி மேகம், முத்தோடம், பெருந்தாகம், மார்புநோய், விழிநோய், பிசாசம் ஆகிய இவைகள் நீங்கும் என்ப.
மான் கொம்பு
“சாடுவார் வாகடர்வெண் சாம்பராய்த் தேனுடன்கை
யாடுவார் கண்டா வவிழ்தமாய்----நாடி
யரலைமுதற் கொப்புளத்தை யாச்சியத்திற் காய்ச்சி
யிரலைமருப் பாற்பிணியை யே”
சுத்தி
மான்கொம்பைச் சிறுதுண்டுகளாக்கி, இரண்டிரண்டாய்ப் பிளந்து, அகத்தியிலைச் சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்துச் சாற்றை நீக்கிக் கொம்புத் துண்டுகளைக் கழுவி உலர்த்திக் கொள்ளவும். இங்கனம் ஏழு முறை செய்ய சுத்தியாம்.
உபயோகம்
சந்தனக் கல்லில் வெந்நீர் விட்டு, மான்கொம்பை மைபோலிழைத்து மேற்பூச, மார்புநோய், சுளுக்கு, அடிகாயம், தோல்வெடிப்பு, தலைநோய், நாட்பட்ட கர்ம நோயில் காணும் நமைச்சல், பிஜவீக்கம், நெறிக்கட்டு, கீல்வாயு முதலியன நீங்கும். வயதாகியும் ருதுவாகாத பெண்களுக்கு மான்கொம்பை இழைத்துக் கழற்சிக் காயளவு கற்கமெடுத்து நீராகாரத்தில் கரைத்து நாலு அல்லது ஐந்து தினம் கொடுக்க, பலனை அளிக்குமென்பர்.
மான் குழம்பு
“மானின் கொம்பு வளர்பெற ஆவினெய்
தேனில் நேர உரைத்துச் செலுத்திடக்
கான மாமுனி சொன்னதைக் கண்ணினில்
ஊனமாண படலங்க ளோடுமே”
பொருளுரை: கலைமான் கொம்பை ஆவின் நெய்யிலும், தேனிலும் நேர இழைத்துக் குழம்பாக வைத்துக்கொண்டு கண்ணில் விடப் படலங்கள் தீரும்.
சிருங்கி பற்பம்
“கலைக்கோடு பற்பம் கழறுங் காலை
முனிச்சா றதனில் மூழ்கச் செய்தே
அறுபது நாழிகை ஆகிய பிறகு
சுத்த நீரால் தூய்மை செய்தே
இதுபோ லெழுநாள் ஏகச் செய்தபின்
நிட்குடி யதனில் நீர்விட் டரைத்தே
கவசம் செய்தபின் காயவிட் டெடுத்தே
நூறுமுட்டை நுண்மையா யடுக்கி
வீறும் அங்கியை விதிப்படி அமைத்தபின்
ஆறி எடுக்க அமைந்திடும் வெண்மையாய்
வெந்த நீறு வெம்மை வினைநோய்
அகற்று மென்றே யறைந்தனர் பெரியோர்”
செய்முறை
சுத்தி செய்த கொம்புத் துண்டுகளுக்கு, ஏல அரிசியை வெந்நீர் விட்டு மைபோலரைத்து, இரண்டு நூற்கனம் பூசி, நிழலில் உலர்த்திச் சிறிது உலர்ந்தவுடன் தக்க வரட்டியிட்டுப் புடமிடவும், ஆறியபின் எடுத்து மாசு நீக்கிப் பார்க்க வெளுத்திருக்கும். கற்றாழைச் சாறு விட்டு அரைத்து, வில்லை தட்டிக் காயவைத்து, ஓட்டிலிட்டு மேலோடு மூடிச் சீலை மண் செய்து புடமிட்டெடுக்கவும். இவ்விதம் இருமுறை செய்தெடுக்கப் பற்பமாம்.
அளவு: 2.5 (195 மி.கி) முதல் 7.5 குன்றி (585 மி.கி) வரை
தீரும் நோய்: வெம்மை நோய்கள்.
பற்பம் (வேறு முறை)
சுத்திசெய்த மான்கொம்பைக் குப்பைமேனிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வேலிப்பருத்திச் சாறு இவைகளால் முறைப்படி அரைத்து, வில்லை செய்துலர்த்திச் சில்லிட்டுச் சீலை செய்து புடமிட்டெடுக்கக் காரம் பொருந்திய பற்பமாகும்.
அளவு: 2 (130 மி.கி) முதல் 3 அரிசி (195 மி.கி) எடை
இப்பற்பத்துடன் ¼ குன்றி (32 மி.கி) எடை பச்சைக் கற்பூரம் சேர்த்து, நெய்யில் குழைத்துக் கொடுக்கக் கொடூரமான மார்பு நோய்கள் நீங்கும்.
To Buy the Herbals and also For Contact...
To Buy the Herbals and also For Contact...
இதய அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம், இதய நோய், இதய அடைப்பு வர காரணம், இதய அடைப்பு அறிகுறிகள், இதய பலவீனம் அறிகுறிகள், இதய வால்வு அடைப்பு நீங்க, இதய நோய் வருவதற்கான காரணங்கள், இதய பிரச்சனை அறிகுறிகள், இதய அடைப்பு வர காரணம், இதய அடைப்பு நீங்க இயற்கை மருத்துவம், இதய அடைப்பு நீங்க சித்த வைத்தியம், இதய அடைப்பு சிகிச்சை, இதய அடைப்பு, இதய அடைப்பு அறிகுறிகள், இதய அடைப்பு என்றால் என்ன, இதய அடைப்பு வராமல் இருக்க, இதய பிரச்சனை அறிகுறிகள், இதய படபடப்பு வர காரணம், இதய படபடப்பு சித்த மருத்துவம், இதய பலவீனம் குணமாக, இதய படபடப்பு, இதய படபடப்பு நீங்க, இதய நோய்க்கு என்ன மருந்து சாப்பிடலாம், இதய நோய் அறிகுறிகள், இதய நோய்க்கு சித்த மருத்துவம், இதய நோய் குணமாக, இதய நோய்க்கு இயற்கை மருத்துவம், இதய நோய்க்கு மருந்து, இதய நோய்க்கு ஆயுர்வேத மருத்துவம், பைபாஸ் அறுவை சிகிச்சையை தவிர்ப்பது எப்படி?, பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன, பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்,