பவுத்திரம் அறிகுறிகள், பவுத்திரம் மூலம், பவுத்திரம் அறுவை சிகிச்சை, பவுத்திரம் கட்டி, பௌத்திரம் அறிகுறிகள், பௌத்திரம் என்றால் என்ன
பவுத்திர மூலம் என்றால் என்ன? பவுத்திர மூலம் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோலின் இடையே உருவாகும் ஒரு அசாதாரண சிறிய பாதை ஆகும். குடல் சுரப்பியில் உள்ள சீழ் பவுத்திரத்திற்கு வழிவகுக்கிறது. குடல் கால்வாய் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் இடையில் உள்ள குழாய் ஆகும், இந்த குழாய் உள்ள பகுதியில் எண்ணிலடங்கா சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் ஏற்படும் தொற்று, சீழ் ஏற்படுத்தும், இது கால்வாய் வழியாக, ஆசன வாய் நோக்கி செல்லும்போது, அசாதாரண பாதையை திறந்தபடியே விட்டு செல்கிறது. நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை? ஆசனவாய் திறப்பை சுற்றிலும் வலி மற்றும் எரிச்சல் இருப்பது இதன் பிரதான அறிகுறிகளாகும். ஓரிடத்தில் அமரும்போது அல்லது நகரும்போது அல்லது குடல் இயக்கத்தின்போது, இடையறாது வலியில் துடிப்பது; சீழ் வெளியேற்றம் அல்லது ஆசன வாய் அருகில் துர்நாற்றம், மலத்தில் இரத்தம் அல்லது சீழ் வருதல்; ஆசனவாய் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது சிவந்து காணப்படுதல்; காய்ச்சல் , உடல் சோர்வு , குளிர் மற்றும் உடல் நலமில்லாமல் இருப்பது போன்ற ஒரு பொதுவான உணர்வு, ஆகியவை கூட...