மூல நோய்க்கு பன்றி இறைச்சி

 மூலத்திற்கு பன்றிக் கறி சாப்பிடலாமா?

 

மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லாதது. மருந்தினால் சாதாரணமாக இதை குணப்படுத்த முடியும். ஏனென்றால், மூலம் என்பது ஒரு உறுப்பு சார்ந்த நோயல்ல. அது உடல் இயங்கியல் சார்ந்த பிரச்சினையின் குறிகுணம். எந்த நோய் ஏற்பட்டாலும் எப்படி அதை சரி செய்யலாம் என மனம் சிந்திக்கும். ஆனால் மூல நோய் வந்துவிட்டால் பிரமை பிடித்ததுபோல
மனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டு எந்த சிந்தனையும் செய்யத் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கத் தோன்றும்.

‘‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’’

என்கிறார் வள்ளுவர். நோய் என்னவென்று ஆராய்ந்து பின் நோய்க்கான காரணம் இன்னதென்று அறிந்து அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே இது. மூலத்தின் அடிப்படைக் காரணங்களை அடியோடு களைவதன் மூலம்மூலநோயை ஒழிக்கலாம். மூலநோய் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணங்களாக, மலச்சிக்கல், மிகுந்த உடல் சூடு, மரபு முதலியவற்றை முன்பே கூறியிருந்தேன். எனவே அனைவருமே, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை மிகுதியாக ஏற்படும் உணவுப் பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும். (உணவு மற்றும் செயல்களில் ஏற்படும் மாறுபாடுதான் நோய்க்குக் காரணம் என்பது இந்நேரம் உங்களுக்கும் புரிந்திருக்கும்).

 

மூல நோய் தீர்க்கும் யோகாசனங்கள்:
‘நீண்ட நாட்கள் யோகாசனம் செய்து அதனால் மூலநோய் ஏற்பட்டு என்னிடம் வந்த நோயாளியை பார்த்திருக்கிறேன்’னு சொன்னீங்களே டாக்டர் னு பதட்டப்பட வேண்டாம். தகுந்த ஆசிரியரின் உதவியோடு கற்றுக்கொண்டு செய்தால் நோய் சரியாகும். சர்வாங்காசனம், தடாசனம், சுப்தவஜ்ராசனம், பச்சிமோத்தாசனம், சூர்ய நமஸ்காரம், ஹாலாசனம், திரிகோணாசனம் போன்ற ஆசனங்கள் மலச்சிக்கல் மற்றும் மூலநோயாளிகளுக்கு பயன்படும்.

என்னுடைய மற்றொரு பதிவில் ஒரு அறிமுகத்திற்காகத்தான் சில மருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டேனே தவிர, சிகிச்சை எடுத்துக்கொள்ள அல்ல. சித்த மருத்துவத்தில் மூலநோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருந்தாலும் அருகில் உள்ள தகுதியான சித்த மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று அவர்கள் கொடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்.

மூலம்:
சேர்க்க வேண்டிய
உணவுகள்

நார்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள் கீரைகள் (துத்திக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, தாளிக்கீரை, அறுகீரை) காய்கறிகள் (வெண்டை, கோவை, அத்தி)

 • பழங்கள்
 • கருணைக்கிழங்கு
 • பன்றி இறைச்சி
 • விலாங்கு மீன்
 • நிறைய நீர் அருந்த வேண்டும்

தவிர்க்க வேண்டியவை:

 • அதிக காரம், புளிப்பு உடைய உணவுகள்
 • கோழிக்கறி
 • முட்டை
 • துரித உணவுகள்
 • மசாலா பொருட்கள்
 • எண்ணெயில் பொரித்த உணவுகள்
 • கருணை தவிர்த்த மற்ற கிழங்குகள்

செயல்கள் :
தவிர்க்க வேண்டியவை

 • ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்
 • அதிகமாக வாகனத்தில் பயணித்தல்
 • சரிவர கற்காமல் ஆசனங்கள் செய்தல்
 • உடல் வெப்பத்தை அதிகரிக்கும் செயல்கள்
 • அடிக்கடி பட்டினி கிடத்தல்

யோகாசனம்:

 • சர்வாங்காசனம்
 • தடாசனம்
 • சுப்தவஜ்ராசனம்
 • பச்சிமோத்தாசனம்
 • ஹாலாசனம்
 • திரிகோணாசனம்
 • மச்சாசனம்
 • வஜ்ராசனம்
 • ஒட்டக ஆசனம்
 • சூரிய நமஸ்காரம்
 •  
 • மூல நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம் ஆகிய நோய்களை சித்த, ஆயுர்வேத முறையில் ஆபரேசன் இல்லாமல் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

  K7 Herbo Care,

  13/A, New Mahalipatti Road,

  Madurai-625001.

  CELL & Whatsapp 1: +91-9629457147

  CELL & Whatsapp 2: +91-9025047147

   

  மூல நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, மூல நோய் Home Page-ற்கு செல்லவும்

  மூல நோய் Home Page