மூல நோய்க்கு என்ன மருந்து, மூல வெடிப்பு

மூலத்துக்கு அனுபவ மருந்து 


தேவையான மருந்துகள் 

1. சிலாசத்து 
2. நத்தை ஓடு 
3. காட்டு கருணை லேகியம் 
4. துத்தி சாறு 
5. குப்பை மேனி சாறு 
6. ஆமணக்கு எண்ணை  

செய்முறை 

1. சிலாசத்து பற்பம் : சிலாசத்தை முறையாக சுத்தி செய்து குப்பை மேனி சாற்றில் நெகிழ அரைத்து  வில்லை தட்டி காயவைத்து, நன்றாக காய்ந்ததும் அகலில் சீலை செய்து வரட்டியில் புடமிடவும்.  இவ்வாறாக மூன்று புடமிட்டு நெகிழ அரைத்து புட்டியில் அடைக்கவும்.

2. நத்தை ஓடு பற்பம் : நத்தை ஓடுகளை முறையாக சுத்தி செய்து முதலில் ஒரு பானையில் போட்டு புடமிட்டு நீற்றிகொள்ள வேண்டும். நீற்றிய சாம்பலை எடுத்து துத்தி இலை சாற்றில் நெகிழ அரைக்க வேண்டும். அரைத்து வில்லை தட்டி காயவைத்து, காய்ந்ததும் அகலில் அடுக்கி சீலை செய்து புடமிட பற்பமாகும். இப்படியாக மூன்று முறை புடமிட விபூதி போன்று வெண்ணிற பற்பம் கிடைக்கும். இந்த பற்பத்தை நெகிழ அரைத்து புட்டியில் அடைக்கவும். 

3. காட்டு கருணை கிழங்கு லேகியம்.

4. மேனி + துத்தி எண்ணை : குப்பை மேனி சாறு, துத்தி இலை சாறு, ஆமணக்கு எண்ணை மூன்றும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து பதமாக காய்ச்சி பத்திரப் படுத்தவும்.

அளவு மற்றும் அனுபானம் 
ஒரு வேளைக்கு : நத்தை பற்பம் 100 மில்லி முதல் 400 மில்லி கிராம் வரை 
சிலாசத்து பற்பம் 300 மில்லி முதல் 1 கிராம் வரை 
மேற்சொன்ன அளவில் சிலாசத்து பற்பம் + நத்தை ஓடு பற்பம் ஒன்றாக கலந்து ஒரு 21 நாட்களுக்கு  பொட்டலம் போட்டு கொடுக்க வேண்டும்.

காலை மற்றும் இரவு 
உணவுக்கு முன்பு நெய் அல்லது வெண்ணையில் சாப்பிடவேண்டும்.

காட்டு கருணை லேகியம் உணவுக்கு பிறகு 1/2 மணி நேரம் பிறகு பெரிய நெல்லை அளவு காலை மற்றும் இரவு சாப்பிடவும்.

மேனி + துத்தி எண்ணை இரவில் மட்டும் 5 முதல் 10 மில்லி வரை உணவுக்கு ஒரு மணி நேரம் பிறகு உள்ளுக்கு எடுக்க வேண்டும்.

பயன்கள் : மூத்திர எரிவு, நீர்கடுப்பு, மூலம், இரத்த மூலம், கடுப்பு கழிச்சல், ஆசனக் கடுப்பு, குடல் கிருமிகள், ஆசன வெடிப்பு, மலச்சிக்கல், நாள்பட்ட மலச்சிக்கல் மேலும் பல நோய்கள் தீரும் ...

மூலம் உள்ளவர்கள் காலைக்கடன் முடிப்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். இந்த எண்ணெயை குடித்த பிறகு ஒரு சிரமமும் இல்லாமல் சுகமாக இருப்பார்கள்.   

உடல் எடை, வயது, வாத, பித்த, சிலேத்துமம், ஆணா, பெண்ணா, வாழும் இடம் மேலும் பல விடயங்களை ஆராய்ந்து மருந்தின் அளவு கூட்டியும் குறைத்தும் கொடுக்க வேண்டும்.
 

மூல நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம் ஆகிய நோய்களை சித்த, ஆயுர்வேத முறையில் ஆபரேசன் இல்லாமல் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

மூல நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, மூல நோய் Home Page-ற்கு செல்லவும்

மூல நோய் Home Page