பக்கவாதம் என்றால் என்ன, ஸ்ட்ரோக் என்றால் என்ன, paralysis in tamil, stroke cure treatment, cure stroke paralysis

பக்கவாதம் கழுத்தின் இரண்டு பக்கங்களின் வழியாகத் தலைக்குச் செல்லும் கழுத்துத் தமனிகள், இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லுகின்றன. பெரிதாக உள்ள இந்த இரண்டு தமனி இரத்தக் குழாய்களும் படிப்படியாக பல கிளைகளாகப் பிரிந்து நுண்ணிய இரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லாத் திசுக்களுக்கும், அவை செயல்படத் தேவையான பிராணவாயுவையும், பிற ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன. இதனால் மூளையின் அனைத்து பாகங்களும் முறையாகச் செயல்படுகின்றன. இப்படி மூளைக்குச் செல்லும் இந்த பெரு மற்றும் சிறு இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் குறையும் போதோ அல்லது தடைபடும் போதோ, மூளையின் திசுக்களுக்குத் தேவையான பிராண வாயுவும், பிற ஊட்டச்சத்துகளும் கிடைப்பது தடைபடுகிறது. இதனால், அவை செயல் இழக்கத் துவங்குகின்றன. மூளையில் செயல் இழந்த அந்த பகுதியின் தாக்கம், உடல் இயக்கத்தையும் பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் (Stroke) ஏற்படுகிறது. “ஸ்ட்ரோக்” என்றால் கிரேக்க மொழியில், “தடைபடுதல்” என்று பொருள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால், இப்பாதிப்பை STROKE என்கிறோம். தமிழில் இதை, “பக்கவாதம்” என...