சிருங்கி பற்பம்

 இதய நோய்களைச் சரி செய்யும் சிருங்கி பற்பமும், பிரண்டை உப்பும்
பிரண்டை உப்பு                            Pirandai Salt

நஞ்சுமுறிச்சான் கல் பற்பம்

சிருங்கி பற்பம்

 ஹீமோகுளோபின் அதிகரிக்க

மாதவிலக்கு பிரச்சினைகள்

 

 

மான் கொம்பு

இது, கலைக்கோடு என்றும் சிருங்கி என்றும் வழங்கப்படுகின்றது.

இதற்கு வெளிப்பிரயோகத்தில் துவர்ப்பி, தாதுவெப்பகற்றிச் செய்கைகளும், உட்பிரயோகத்தில் உடல் தேற்றி, குருதிப்பெருக்கடக்கி, இருதயத்திற்கும், நுரையீரலுக்கும் உரம் உண்டாக்கிச் செய்கைகளும் உள. இதன் குணத்தை கீழ்ச் செய்யுட்களால் அறியலாம்.

 

கலைமான் கொம்பின் குணம்

“அவயத்தின் வெப்ப மதியத்தி மேகங்

கவிழ்திரிதோ டம்பெருந்தா கங்க---ளிவைதா

நிலைக்குமோ மார்புநோய் நேந்திரநோய் நீங்குங்

கலைக்கொம்பாற் பேயுமிலைக் காண்.”

 

பொருளுரை: கலைமான் கொம்பினால் கைகால் எரிவு, அஸ்தி மேகம், முத்தோடம், பெருந்தாகம், மார்புநோய், விழிநோய், பிசாசம் ஆகிய இவைகள் நீங்கும் என்ப.

 

மான் கொம்பு

“சாடுவார் வாகடர்வெண் சாம்பராய்த் தேனுடன்கை

யாடுவார் கண்டா வவிழ்தமாய்----நாடி

யரலைமுதற் கொப்புளத்தை யாச்சியத்திற் காய்ச்சி

யிரலைமருப் பாற்பிணியை யே”

 

சுத்தி

மான்கொம்பைச் சிறுதுண்டுகளாக்கி, இரண்டிரண்டாய்ப் பிளந்து, அகத்தியிலைச் சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்துச் சாற்றை நீக்கிக் கொம்புத் துண்டுகளைக் கழுவி உலர்த்திக் கொள்ளவும். இங்கனம் ஏழு முறை செய்ய சுத்தியாம்.

 

உபயோகம்

சந்தனக் கல்லில் வெந்நீர் விட்டு, மான்கொம்பை மைபோலிழைத்து மேற்பூச, மார்புநோய், சுளுக்கு, அடிகாயம், தோல்வெடிப்பு, தலைநோய், நாட்பட்ட கர்ம நோயில் காணும் நமைச்சல், பிஜவீக்கம், நெறிக்கட்டு, கீல்வாயு முதலியன நீங்கும். வயதாகியும் ருதுவாகாத பெண்களுக்கு மான்கொம்பை இழைத்துக் கழற்சிக் காயளவு கற்கமெடுத்து நீராகாரத்தில் கரைத்து நாலு அல்லது ஐந்து தினம் கொடுக்க, பலனை அளிக்குமென்பர்.

 

மான் குழம்பு

“மானின் கொம்பு வளர்பெற ஆவினெய்

தேனில் நேர உரைத்துச் செலுத்திடக்

கான மாமுனி சொன்னதைக் கண்ணினில்

ஊனமாண படலங்க ளோடுமே”

 

பொருளுரை: கலைமான் கொம்பை ஆவின் நெய்யிலும், தேனிலும் நேர இழைத்துக் குழம்பாக வைத்துக்கொண்டு கண்ணில் விடப் படலங்கள் தீரும்.

 

சிருங்கி பற்பம்

“கலைக்கோடு பற்பம் கழறுங் காலை

முனிச்சா றதனில் மூழ்கச் செய்தே

அறுபது நாழிகை ஆகிய பிறகு

சுத்த நீரால் தூய்மை செய்தே

இதுபோ லெழுநாள் ஏகச் செய்தபின்

நிட்குடி யதனில் நீர்விட் டரைத்தே

கவசம் செய்தபின் காயவிட் டெடுத்தே

நூறுமுட்டை நுண்மையா யடுக்கி

வீறும் அங்கியை விதிப்படி அமைத்தபின்

ஆறி எடுக்க அமைந்திடும் வெண்மையாய்

வெந்த நீறு வெம்மை வினைநோய்

அகற்று மென்றே யறைந்தனர் பெரியோர்”

 

செய்முறை

சுத்தி செய்த கொம்புத் துண்டுகளுக்கு, ஏல அரிசியை வெந்நீர் விட்டு மைபோலரைத்து, இரண்டு நூற்கனம் பூசி, நிழலில் உலர்த்திச் சிறிது உலர்ந்தவுடன் தக்க வரட்டியிட்டுப் புடமிடவும், ஆறியபின் எடுத்து மாசு நீக்கிப் பார்க்க வெளுத்திருக்கும். கற்றாழைச் சாறு விட்டு அரைத்து, வில்லை தட்டிக் காயவைத்து, ஓட்டிலிட்டு மேலோடு மூடிச் சீலை மண் செய்து புடமிட்டெடுக்கவும். இவ்விதம் இருமுறை செய்தெடுக்கப் பற்பமாம்.

அளவு: 2.5 (195 மி.கி) முதல் 7.5 குன்றி (585 மி.கி) வரை

தீரும் நோய்: வெம்மை நோய்கள்.

 

பற்பம் (வேறு முறை)

சுத்திசெய்த மான்கொம்பைக் குப்பைமேனிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வேலிப்பருத்திச் சாறு இவைகளால் முறைப்படி அரைத்து, வில்லை செய்துலர்த்திச் சில்லிட்டுச் சீலை செய்து புடமிட்டெடுக்கக் காரம் பொருந்திய பற்பமாகும்.

அளவு: 2 (130 மி.கி) முதல் 3 அரிசி (195 மி.கி) எடை

இப்பற்பத்துடன் ¼ குன்றி (32 மி.கி) எடை பச்சைக் கற்பூரம் சேர்த்து, நெய்யில் குழைத்துக் கொடுக்கக் கொடூரமான மார்பு நோய்கள் நீங்கும்.

 


மேற்கண்ட சிருங்கி பற்பம் மற்றும் பிரண்டை உப்பு வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact... 

 

 
அலட்சியப்படுத்தக்கூடாத இதய நோயின் அறிகுறிகள்!

 லகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில்தான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அறிக்கை ஒன்று. 2016-ம் ஆண்டு வெளியான ஒரு புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு 33 விநாடிகளுக்கும் இந்தியாவில் ஒருவர் மாரடைப்புக்கு ஆளாகி இறந்து போகிறார். உண்மையில், மாரடைப்பு தவிர்க்கக்கூடியதே! இதய நோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததாலும் அல்லது அலட்சியப் படுத்துவதாலும் தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். அந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாம் தப்பித்துவிடலாம். என்னென்ன அறிகுறிகள் அவை? பார்ப்போம்...

உறங்குவதில் சிரமம்!

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராகப் படுக்கையில் படுத்திருக்கும்போது தூங்குவதற்குக் கடினமாக உணர்வார்கள். நுரையீரலில் கோர்த்திருக்கும் அதிகப்படியான நீர், புவியீர்ப்பால் கீழ்நோக்கி இழுக்கப்படும். பிறகு அந்த நீர் நுரையீரல்களுக்கு இடையே அதிகமாகப் பரவும். இதனால் தூங்குவது கடினமாக இருக்கும். இதற்காக தூக்க மாத்திரைகள் உட்கொள்ள ஆரம்பித்தால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்

வேகமாக எடை அதிகரித்தல்!

சாதாரணமாக ஒரு மனிதனுக்கு நிகழாத அளவுக்கு மிக வேகமாக எடை கூடும். இதயத்தில் நீர் கோர்த்தல் அல்லது இதய அடைப்பு போன்றவற்றால் இப்படி எடை அதிகரிக்கும். இரத்தக்குழாய்களில் கோர்த்துள்ள நீர், சுற்றியுள்ள திசுக்களிலும் சேர்ந்து எடை அதிகரிக்கும் வாய்ப்பைக் கூட்டும்.

கால் வீக்கம்

கால், பாதம் போன்ற இடங்களில் நீர் கோர்த்துக்கொள்ளும். இதனால் அந்த இடங்கள் வீக்கமடையும். இதன் காரணமாக, நரம்புகள் நம் வயதுக்கு ஏற்றபடி ஒத்துழைக்காது, வேலை செய்யாது

அடிவயிறு வீக்கம்

அடிவயிற்றில்  நீர் கோர்த்துக்கொள்ளும். கல்லீரலிலும், செரிமானத் தடத்திலும் ஏற்பட்டிருக்கும் அடைப்பு காரணமாக கடுமையான வலி ஏற்படும். இதற்கு நாம் உட்கொள்ளும் அதிகமான அளவு உப்புக்கூட காரணமாக இருக்கலாம்.

இருமல்

நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். இருமல் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதேபோல் மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற ஒலி கேட்கும்

சளி

நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும்.  இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும்.  

சோர்வு

இதயச் செயலிழப்பு அல்லது இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்கள் அதிகக் களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் கடுமையான சோர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுகிறது.

குமட்டல் மற்றும் பசியின்மை

கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளைச் சுற்றிக் கோத்திருக்கும் நீர், செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்

தலைச்சுற்றல்

இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.  

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய நோய்க்கான பொதுவான அறிகுறி. மிக எளிதான வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

வியர்த்தல்

எந்தவொரு காரணமும் இல்லாமல் கடுமையாக வியர்த்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்ஒருவேளை இது, மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

 
இதய வலி

இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும்.

சீரற்ற இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு சீரில்லாமல் இருப்பது இதயநோய்க்கான அறிகுறி. வழக்கத்துக்கு மாறாக, மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிக்கும்

தோல் நிற மாற்றம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் தோல் நீல நிறமாக மாறும். இதற்குசயனோஸிஸ்’ (Cyanosis) என்று பெயர். இது, அரிதாகச் சிலருக்கு ஏற்படலாம்.

வருமுன் காப்பதே எப்போதும் சிறந்தது. இதய நோய்கள் தாக்குவதற்கு முன்னரே சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீண்ட நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழலாம். ஆனால், அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், பாதிப்புகள் முற்றிவிடும். ‘இதயநோய் என்ற பிரமாண்டமான யானை வருவதற்கு முன்னதாகவே மணியோசையாக வரும் இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும். உரிய சிசிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது இதயத்தை இதமாக வைத்திருக்கும்; வலுவாக்கும்

இதய சம்பந்தபட்ட நோய்கள் வராமல் தடுக்கவும், இதயத்தை பலமாக்கவும், வந்துவிட்ட இதய நோய்களை குணமாக்கவும் பிரண்டை உப்பையும் மற்றும் சிருங்கி பற்பத்தையும் 1 முதல் 2 மண்டலங்கள் சாப்பிட்டு வந்தால் முழுமையாக எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் குணப்படுத்தலாம்.

மற்றும் இதய நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள் சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் உள்ளன. 
 


மேற்கண்ட சிருங்கி பற்பம் மற்றும் பிரண்டை உப்பு வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...