சைனஸ் பாட்டி வைத்தியம்
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் சைனஸ் பிரச்சினையானது இப்போது பெரும்பாலானோரை தாக்கும் ஒரு நோயாகும். அதுவும் குறிப்பாக பனிக்காலத்தில் இதனால் பலர் அவதிப்படுகின்றனர். இது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது. சைனஸ் என்றால் என்ன? மனிதனுடைய முகத்தின் பக்கம் உள்ள மண்டை ஓட்டு பகுதியில் குழிகள் போன்ற பள்ளங்கள் மூக்கின் இரு பக்கம், நெற்றி மற்றும் புருவம் ஆகிய பகுதிகளில் உள்ளன. இவையே சைனஸ் என்று அழைக்கப்படுகிறது. சைனஸ் என்பது வியாதியின் பெயர் அல்ல, சைனுசைட்டீஸ் என்பதே நோயின் பெயரை குறிப்பிடுகிறது. இதனையே சித்தர்கள் பீனிசம் என்று கூறினார்கள். சைனஸ் குழி அமைப்பின் வேலை என்ன? இந்த சைனஸ் குழிகள் நாம் உள் இழுக்கும் சுவாச காற்றை உடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப சமப்படுத்தி நுரையீரலுக்கு அனுப்பி வைப்பது. சைனஸ் பகுதி தனது வேலையை செய்ய தவறினால் சுவாசிக்கின்ற சூடான காற்று, தூசுக்கள் நேரடியாக நுரையீரல் சுவாச குழாய்களை பாதித்து புண்கள் உண்டாக்கி நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்தும். சைனஸ் ஏன் பாதிப்பு அடைந்து சைனுசைட்டீஸ் உண்டாகிறது? குளிர்ச்சியான பானங்கள் அதிகமாக குடிப்பது, அ...