Posts

தேனும் இலவங்கப் பட்டையும் .!

தேனும் இலவங்கப் பட்டையும் .!
இதன் மருத்துவ குணங்களை சொல்லி தீராது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்!!.
உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!
அதிகபட்ச மாற்றம் என்னவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இதயம் தொடர்பான நோய்களுக்கு அற்புதமான மருந்து தேனும் இலவங்கப் பட்டையும்
இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

ஆண்மைக் குறைவை நீக்கும் அருகம்புல்:

ஆண்மைக் குறைவை நீக்கும் அருகம்புல்:
இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள்  கண்டறிந்திருக்கிறார்கள். 
சர்வரோக நிவாரணி
புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர்  cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம்,  தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை .  தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது.
அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா  வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
உடலினுள் ஏற்படும் இரத்த கசிவுகளுக்கு
சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் இரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்றுப் போக்கு,  கண்பார்வை கோளா…

கருப்பை பிரச்சினைகள் தீர கல்யாணமுருங்கை

கருப்பை பிரச்சினைகள் தீர கல்யாண முருங்கை 
கல்யாண முருங்கை (முள் முருங்கை) கருப்பைக் குறை நீக்கி என்பதால் தான் கல்யாண முருங்கை என்ற பெயர் பெற்றுள்ளது. இந்தியாவிலும் மற்றும் அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இதன் இலை துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.
கருப்பைக் குறை நீக்கியாகவும், கபம், இருமல், கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் புண் , வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்ட செய்யும் தன்மை உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பெண் மலடு நீங்க
மலட்டுத்தன்மை நீங்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் விட்டு வதக்கி சாப்பிட்டு வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். பருவமடையாத பெண்களுக்கு கருப்பை குறைபாட்டை நீக்கி மாதவிலக்குத் தூண்டல் செய்யும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.
சூதக வலி
மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள், அதிக ரத்தபோக்கு இருப்பவர்கள், கல்யாண முருங…

திரிபலாதி தைலம்

முடி கொட்டுவதை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர திரிபலாதி தைலம்
முடி கொட்டுவதை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர திரிபலாதி தைலம் Triphladhi thailam   (ref-ஸஹஸ்ரயோகம் - -தைலப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       90 கிராம்
2.தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     90 கிராம்
3.நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 90 கிராம் 4.சீந்தில்கொடி – குடூசி   90  கிராம்
5.தாழம் விழுது – கேதகீ மூல -90 கிராம்
6.வேங்கை – அஸன  -90  கிராம்
7. சித்தாமுட்டி வேர் – பலாமூல                          90 கிராம்
8.ஆமணக்கு வேர் – எரண்ட மூல                   90  கிராம்
9.முடக்கத்தான் வேர் – இந்த்ரவல்லி                 90 கிராம்
10.தண்ணீர் – ஜல   -12.800 லிட்டர்
இவைகளைக் கொதிக்கவைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்
1. நல்லெண்ணெய் – திலதைல            800 கிராம்
2.கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ  800 கிராம்
3.நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ      800 கிராம் 
4. பசுவின் பால் – கோக்ஷீர               1.600 கிலோ கிராம்
இவைகளைச் சேர்த்து அதில்
1.கோஷ்டம் –…

உடல் கழிவுகளை வெளியேற்ற கரும்பு சாறு...

கரும்புச்சாறு அடிக்கடி குடிப்பவர்களா நீங்கள் ???  எனில் உடல்கழிவுகளை சரியாக வெளியேற்றுகிறீர்கள் என்று அர்த்தம்... நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தே சாப்பிடுகிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? 
நீங்களே படியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
உடலிலிருந்து நச்சுக்கள் (Toxins) வெளியேறும்
*கரும்பு சாறு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. 
*உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
Best Energy source for Body and Mind
*அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். 
*உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடைய…

கட்டுக்கொடி மூலிகை இயற்கை வயாகரா...

கட்டுக்கொடி மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள்...
கட்டுக்கொடி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி உமிழ்நீரை பெருக்கும். கட்டுக்கொடி இலையை கொட்டைப் பாக்களவு எடுத்து உண்டுவர சீதபேதி, மூலக்கடுப்பு குணமாகும். 
நீரிழிவு குணமாக
கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து இவற்றை சம அளவு எடுத்து காலை மாலை என இருவேளை உண்டுவர நீரிழிவு நோய், களைப்பு, அதீத தாகம், தேக எரிச்சல் குணமாகும். இரண்டையும் சூரணமாகவும் கலந்து சாப்பிடலாம். 
பெரும்பாடு தீர
கட்டுக்கொடி இலையை அரைத்து ஓரு எலுமிச்சை பழ அளவுக்கு எடுத்து தயிருடன் கலந்து பெண்களுக்கு கொடுக்க பெரும்பாடு தீரும். கட்டுக்கொடி இலையில் சாறு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து அப்படியே வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். 
விந்து கட்ட, ஆண்மை பெருக 
இந்த அல்வா போன்ற ஜெல்லை அதிகாலை வேளையில் சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீத கழிச்சல் குணமாகும். விந்தானது கட்டும். மூலநோய் குணமாகும். ஆண்மை பெருகும். நீர்கடுப்பு, உடல்சூடு, உடல் எரிச்சல் சரியாகும்.
இரத்தப் போக்கை நிறுத்த
கட்டுக்கொடி இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஓரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர அதிகப்படியான உத…

வாழை என்ற `வைத்தியர்'

வாழை என்ற `வைத்தியர்' !
அன்றாட உபயோகத்திற்கு மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம், வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்...
* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் பட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
* காயங்கள், தோல் புண்கள்- தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.
* சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் குணமாகும்.
* சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.
* குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்…