மூல நோய் என்றால் என்ன, பைல்ஸ், பைல்ஸ் என்றால் என்ன, மூலம் வகைகள், வெளி மூலம் என்றால் என்ன,

 21 வகையான மூலநோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகளும்!

 

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிறது? இதைச்சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

மனித உடலில் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மல வாயில் எரிச்சல், நமைச்சல், அரிப்பு சில நேரங்களில் வலி முதலிய செய்கைகளை உண்டாக்குவது மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.

மலம் கழிக்கச் செல்லும் போது மலத்தை இறுகச் செய்து மலம் போக முடியாத அளவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும். நாமே முயற்சி செய்து மலத்தை வெளியாக்க முயலும்போது நீர் வறண்டு மலம் தீய்ந்து இறுகி இரத்த நாளங்களைக் கீறி அதிலிருந்து கசியும் இரத்தத்தோடு மலம் கழியும்.

மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயில் வலி, கடுப்பு, எரிச்சல், நமைச்சல், அரிப்பு வீக்கம் முதலியவற்றையும் உண்டாக்கும்.

நோய் வரும் வழி:

* கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போது அவை மலக்குடலின் கீழ் பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச் செய்து இந்த நோயினை உண்டாகும்.

* கிழங்கு வகைகளை அதிகம் உட்கொள்வதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும், உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்வதாலும் மூலநோய் வரலாம்.

* மலவாயை உறுத்தும்படி எப்போதும் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யானை, ஒட்டகம் இவற்றில் சவாரி செய்வதாலும், உண்ட உணவு செரிக்காமல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை உட்கொள்வதாலும் வரலாம்.

* யோக நிலையில் தன்னுடைய உடலின் தன்மைக்கும், வன்மைக்கும் அதிகமாக நிலைத்திருந்தல் காரணமாகவும், அதிக நேரம் மூச்சை அடக்குவதன் காரணமாகவும் இந்த நோய் வரக்கூடும்.

* பெண்கள் கருத்தரித்துள்ள போது குழந்தை வளர வளர கீழ்க்குடல் அழுத்தப்படும் போதும், ஒரு சிலருக்கு வயிறு பெருத்து பெருவயிறு நோய் முதிர்ந்து பெரியதாகும் போது இந்நோய் உண்டாவதும் உண்டு.

* சில நேரங்களில் தாய் தந்தையருக்கு இந்த நோய் இருந்தால் அப்பெற்றோர்களின் உடல் வாகைப் பொறுத்து அவர்களின் சந்ததியினருக்கும் இந்த நோய் வரலாம்.

* மேலும் பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகத்து மூச்சூடு உண்டாகி மலத்தை வெளியில் போகாதபடி அடக்கி மலவாயில் அனலை அதிகம் உண்டாக்கி இந்த நோய் உண்டாகும்.

* மேலும் வாயுவைப் பெருக்கக் கூடிய உணவுகளாலும், செயல்களாலும் மலப்பாதை கெட்டு மலத்தை இறுகச்செய்து மலம் வெளி வராதபடி செய்யும்.

* மலவாய் எரிச்சல், விந்து கெடுதல், வயிறு இரைதல், வயிறு நொந்து கழிதல், பசியின்மை, புளிஏப்பம், நீர்வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல் போன்ற நிலைகளை உண்டாக்கும்.

* மூலநோயானது மனரீதியாகவும் பாதிப்படையச் செய்யும். மனந்தளரும், அடிக்கடி கோபம் கொள்ளச் செய்யும். தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் சீறிவிழச் செய்யும். முகம் வேற்றுமை அடையும் முகத்தில் விளக்கெண்ணெய் பூசியது போலிருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலநோய் உண்டானவர்களுக்கு ஆரம்பக் காலத்தில் அறியலாம்.

அவையாவன:

சீழ் மூலம்:

மலவாயிலிருந்து வருவது: சீழ்ஒழுகுவது.

புண் மூலம்:

மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.

தீ மூலம்:

மலவாயிலிருந்து சூட்டுடன் எரிச்சல் கூடி கழிவது.

நீர் மூலம் :

மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.

முளை மூலம்:

மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.

சதை மூலம்:

காய்போல முளை கடுப்போடு வெளியாவது.

வெளுப்பு மூலம்:

மோர்போல் வெளுத்து சிறுகச்சிறுக வெளியாவது.

காற்று மூலம்:

அடிக்கடி காற்று பிரிவது போல் வெளியாவது.

பெருமூளை மூலம்:

கீழ்க்குடல் கருணைக் கிழங்கின் முளை போல் ஆடுவது.

 

யூகிமுனி சிந்தாமணி என்னும் நூலில் மூல நோயை இருபத்தோரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.

அவை:

1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)

நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வறண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிரிதல், மலவாயில் நுரையுடன் கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.

2 செண்டு முளை (செண்டு மூலம்)

செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள்ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்குள் போகாமல் கடினத்துடன் வறண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலியை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டுப்படும் மலவாயில் வலி ஏற்படும்.

3. பெருமுளை (முளை மூலம், பெரு மூலம்)

முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போல் மலவாயில் தோன்றி எரிச்சல் உண்டாகி தடித்து அடிவயிறு கல் போலாகும். மலவாய் சுருங்கி அரிப்பு உண்டாகும். இந்த மூலநோயில் இரத்தம் வெளியாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.

4. சிறுமுளை (சிற்று மூலம்)

சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதிலிருந்து இரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூலத்தில் உண்டாகும்.

5. வறள் முளை (வறள் மூலம்)

வறள் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளியாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்தமும் துளித்துளியாக விழும். உடல் வெளுக்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறி தென்படும்.

6. குருதிமுளை (இரத்த மூலம்)

இரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும் போதெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவது போல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.

7. சீழ்முளை (சீழ் மூலம்)

சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எரிச்சலும் உண்டாகும். மலம் போவதற்குமுன் சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணுக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.

8. ஆழிமுளை (ஆழி மூலம்)

ஆழி மூல நோயில் மலவாயில் வள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளையாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமும் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடைப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இது போன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காணலாம்.

9. தமரகமுளை (தமரக மூலம்)

தமரக முளை நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாமரைப் பூப்போல பெரிதாய் காணும். இரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப்பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியின்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டாகும்.

10. வளிமுளை (வாத மூலம்)

வாத மூலநோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண் டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும். இது போன்றவை இவ்வகை மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.

11. அழல் முளை (பித்த மூலம்)

பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட்டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதியாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோபம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டாகும்.

12. ஐயமுளை (ஐய மூலம்)

ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எரிச்சல், கடுப்பு உண்டாகும். சீழும், தண்ணீரும் கலந்தாற்போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

13. முக்குற்ற முளை (தொந்த மூலம்)

தொந்த மூலநோயில் மலவாய் இறுகி முளையானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்தது போல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட்கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறிகள் இந்த நோயில் உண்டாகும்.

14. வினை முளை (வினை மூலம்)

வினை மூல நோயில் உணவு செரியாமை, புளிஏப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூலநோயில் உண்டாகும்.

15. மேகமுளை (மேக மூலம்)

மேக மூல நோயில் ஆண்குறியில் வெள்ளை விழும். முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தியதாக இருக்கும். இதுபோன்ற குணங்களை கொண்டிருக்கும்.

16. குழி முளை (பவுத்திரம்)

குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலராது. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொண்டு போகும். சீழும் கசியும். கை, கால்களை வீங்கும் பவுத்திரம் உண்டாகும். முளையானது சேவல் கோழியின் கொண்டையைப் போன்ற வடிவம்போல் சிவந்து காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூலநோய்க்கு உரியவையாகும்.

17. கழல் முளை (கிரந்தி மூலம்)

கழல் முளை நோயில் ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எரிச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மலமிறங்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உரியதாகும்.

18. அடித்தள்ளல் முளை (குத மூலம்)

அடித்தள்ளல் மூலநோயில் மலவாயிலில் மூங்கில் குருத்தது போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்புசம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட்கை உண்டாகும். தொடைகள் வலிக்கும். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.

19. வெளிமுளை (வெளிமூலம்)

வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப்புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பில் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறிகுறிகள் உண்டாகும்.

20. சுருக்கு முளை (சுருக்கு மூலம்)

சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குட ல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்கமுண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண்டாகும்.

21. சவ்வு முளை (சவ்வு மூலம்)

சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்தத்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எரியும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூலநோயில் உண்டாகும்.

இந்த 21 வகையான மூலநோய்களில் 12 வகையான நோய்கள் எளிதில் தீரக்கூடியவை.

1. நீர் மூளை
2. பெருமுளை
3. வறல் முளை
4. குருதி முளை
5. வளி முளை
6. தீமுளை
7. மேக முளை
8. குழி முளை,
9. கழல் முளை
10. புறமுளை
11. சுருக்கு முளை
12. சவ்வு முளை,

மேற்காணும் யாவும் எளிதில் தீரக்கூடியவை.

1. செண்டுமுளை
2. சிறு முளை
3. சீழ் முளை,
4. ஆழி முளை
5. வினை முளை
6. ஐயமுளை
7. குதமுளை
8. முக்குற்ற முளை
9. தமரச முளை

போன்ற மேற்காணும் மூலங்கள் எளிதில் தீராதவையாகும்.

ஒவ்வொரு வகையான மூலத்திற்கும் மருந்துகளை சித்தர்கள் தங்களது பாடலின் மூலம் எழுதி வைத்து சென்றுள்ளனர். தேர்ந்த, தகுதியான மருத்துவரை அணுகி மருந்து பெற்று மூல நோயில் இருந்து முற்றிலுமாக குணம் பெற முடியும்.

 

மூல நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம் ஆகிய நோய்களை சித்த, ஆயுர்வேத முறையில் ஆபரேசன் இல்லாமல் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

மூல நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, மூல நோய் Home Page-ற்கு செல்லவும்

மூல நோய் Home Page