மூல நோய்க்கு மருந்து, மூல நோய் வராமல் தடுக்க, மூல நோய் மருந்து, மூல நோய் மருத்துவம், மூல நோய் மருந்துகள், மூல நோய்க்கு மருத்துவம்

 மூலம் நோய்க்கு எளிய மருந்து

 

இந்த நோய் வர காரணங்கள்:

1) பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும்,

2) உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும் ,

3) ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது.

4) உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,

5) அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன்றும்.

6) அதிக உடலுறவு ,அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.

 

மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறுகின்றனர். 

 வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1-   உள் மூலம்- ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.

2-   வெளி மூலம்- ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது

3-   இரத்த மூலம்- மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது. 

 

மூல நோயின் அறிகுறிகள்: மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம் போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும், மயக்கம் உண்டாகும் .

மூல நோய் வராமல் தடுக்க:

1) உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள், தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2) அடிக்கடி நீர் அருந்தவேண்டும், தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும், மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது, தினமும் நடைப்பயிற்சி அல்லது எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.

3) உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்தல் வேண்டும். கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.

மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:

1-   பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.

2-   மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து, அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

3-   வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)

4-   நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் . இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.

 

மூல நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் உள் மூலம், வெளி மூலம், பவுத்திரம் ஆகிய நோய்களை சித்த, ஆயுர்வேத முறையில் ஆபரேசன் இல்லாமல் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

மூல நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, மூல நோய் Home Page-ற்கு செல்லவும்

மூல நோய் Home Page