இதய படபடப்பு சித்த மருத்துவம்
இதய படபடப்பு, இரத்த அழுத்தம் குணமாக, இந்த மூலிகைகள் மட்டுமே கூட போதுமே… அதிகப்படியான மன உளைச்சல் காரணமாக, நம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயப் படபடப்பு , மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இது போன்ற பிரச்சினைகளை குணமாக்க, இயற்கையான சிறப்பான சில மூலிகைகள் உள்ளது. வெண்தாமரை மலர் செந்தாமரை மற்றும் வெண்தாமரை என்று இரண்டு வகையான தாமரை மலர்கள் இருந்தாலும், மருத்துவத்திற்கு உகந்தது வெண்தாமரை. இந்த வெண்தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி, அதனுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து அதிகாலை எழுந்ததும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகள் குணமாகும். செம்பருத்தி மலர் செம்பருத்தி மலர்களின் இதழை வெண்தாமரை மலர்களைப் போல காலையில் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெங்காயம் வெங்காயத்தில் பலவகை உண்டு. அதில் சிறிய வெங்காயம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. எனவே தினமும் காலையில் சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் மற்றும் இரத்த