மாதவிடாய் பிரச்சினைகள்... Mensus Problems
மாதவிடாய்
பிரச்சினைகள்...
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா?
பிரண்டை உப்பு Pirandai Salt
நஞ்சுமுறிச்சான் கல் பற்பம்
சிருங்கி பற்பம்
ஹீமோகுளோபின் அதிகரிக்க
மாதவிலக்கு பிரச்சினைகள்
"எனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது... இது சரிதானா?''
"எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ?''
"ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... எனக்குக் கண்டபடி மாறுதே...’’
-இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன.
இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `தீட்டு (அசுத்தம்)’ என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, மாதவிடாய் என்பது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.
ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய இளம் பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
"சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வர வேண்டும்?''
"பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் இரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”
"ஒழுங்கற்ற மாதவிடாய், எதன் அறிகுறியாக இருக்கும்? அவை என்னென்னப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?''
“பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian
Syndrome - PCOS): ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்கா விட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில் கூட பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் பருவம் அடைந்த பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், இந்தப் பிரச்னை உருவாகும். உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்துவிடலாம்.
தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும். இதில், ஹைப்போதைராய்டிஸ்ம் (Hypothyroidism) முக்கியமான ஒரு பிரச்னை. வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hyper cholesterolemia) ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்னைகளையும் இது ஏற்படுத்தும்.
ஹார்மோன் - இம்பேலன்ஸ் (Hormone imbalance) :
புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் அதை வெளிக்காட்டும்.
பெரிமெனோபாஸ் (Perimenopause):
பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.
“எதனால் ஏற்படுகிறது?”
அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். அலுவல்ரீதியான அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்சினை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.
புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை ஏற்படும். இவர்கள், சரியான உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது.
திடீரென்று உடல் எடை குறைப்பது, உடல் எடை அதிகரிப்பது, உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, மாதவிடாய்ப் பிரச்னையை ஏற்படுத்தும்.
மாதவிடாயை
சரியாக மாதம் ஒரு முறை வருமாறு ஒழுங்குபடுத்தும் சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள் (For
Amenorrhoea Problems)
மற்றும்
ஒழுங்கான
மாதவிடாயில் ஏற்படும் சூதகவலி மற்றும் குறைவாக இரத்தம் போதல் அல்லது கூடுதலாக இரத்தம்
போதல் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகள் (For Dysmenorrhoea
Problems)
மற்றும்
மேற்கண்ட சித்த, ஆயுர்வேத மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...