எலும்புகளின் நண்பன் பிரண்டையின் பயன்கள்
எலும்புகளின் நண்பன் பிரண்டையின் பயன்கள் நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில் உடலில் இருக்கிற ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எலும்பு தேய்ந்து வரும். இதுபோலவே போதுமான அளவு சூரியக்கதிர் படாமல் அலுவலகத்திற்கு உள்ளேயே அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் கொஞ்சம் வேகமாகவே வரும். போதுமான சூரியன் இல்லாது தோல் எப்படி வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய முடியாதோ அது போலவே உடலுக்குத் தேவையான எலும்பின் பலமும் சூரிய ஒளி இல்லாமல் குறைந்துபோகும். மேலை நாடுகளில் குறிப்பாக குளிர் பிரதேசங்களில் குளிர்காலங்களில் வாழ்கிறவர்களுக்கு சூரிய ஒளி இல்லாது மனச்சோர்வு ஏற்படுவது போலவே எலும்புகளுக்கும் போதுமான அளவு வலு இல்லாமல் இருக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு இயற்கையாகவே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு கால் எலும்புகள் வளைந்து இருப்பதும் அது தானாகவே கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுவதும் சகஜம். விளையாட்ட...