காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது இந்த இடங்களில் அதிக வலி இருந்தால்….!

காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது இந்த இடங்களில் அதிக வலி இருந்தால்….! இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள்.பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. முடக்கத்தான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும். முடக்கத்தான் கீரை: முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச் சென்று விடும். சிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக் கொள்கிறோம். இது மிகவு...