நஞ்சுமுறிச்சான் கல் Remove Toxins or Venom from the Body, Elixir for children, Burning sensation, Acidity, Heartburn, Indigestion, Ashthma
நஞ்சுமுறிச்சான்
கல்
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
நஞ்சுமுறிச்சான்
கல்
நஞ்சுமுறிச் சான் கல்லால் நற்றா வரவிடவும்
நெஞ்சி லெழுந்துடிப்பும் நீங்கிடுமே: மிஞ்சிவரும்
வாந்தி யுடன்வீக்கம் மாசடைந்து வுள்ளிரணம்
சாந்த முறுமென்றே சாற்று
நஞ்சுமுறிச்சான் கல்லால் தாவர விடம், மார்புத் துடிப்பு, வாந்தி,
வீக்கம், தேகத்தினுள் அடங்கலாகிய எல்லா உறுப்புகளின் விரணம் குணமாகும் என்க…
நஞ்சுமுறிச்சான் கல்
தற்போதைக்கு
100 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ் சித்த மருந்து புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த
நஞ்சுமுறிச்சான் கல் என்ற அருமருந்து காலப்போக்கில் சித்த மருத்துவத்தின் பயன்பாட்டில்
இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது.
நஞ்சுமுறிச்சான்
கல்லின் மருத்துவப் பயன்கள் ஏராளம். தற்போதுள்ள
கால சூழ்நிலைக்கு நஞ்சுமுறிச்சான் கல் மிகவும் ஏற்றதாக உள்ளது.
நஞ்சுமுறிச்சான்
கல்லின் அறிவியல் பெயர் Hydrous
magnesium silicate.
நஞ்சுமுறிச்சான்கல்
கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில்
கிடைக்கிறது.
நஞ்சுமுறிப்பான்
கல் மற்ற மொழிகளில் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது:
English:
Serpentine Stone, Green Marble Stone
Telugu:
Salagrama Shila
Urdu: Hajr-us-sum, Fad Zahr Madani, Hajrul-ul-behr
நஞ்சுமுறிப்பான் கல் உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றுவதில் முதலிடம்
வகிக்கிறது.
Detoxification: தற்போதுள்ள
உணவுகள், காய்கறிகள் மற்றும் உணவு தயாரிப்பு முறைகளின் மூலமும் நம் உடலில் உரங்களும்,
பூச்சி மருந்துகளும், சுவையூட்டிகளும், வர்ணமூட்டிகளும் உணவை கெடாமல் வைத்திருக்கும்
பொருட்களின் (Preservatives) மூலமும் நச்சுக்கள் (Toxins) சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
இவையே இன்றைய பெரும்பாலான பெரிய நோய்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன.
நஞ்சுமுறிச்சான்
கல் பற்பத்தை மாதம் குறைந்தது ஒரு முறையாவது 2-3 நாட்கள் தினமும் இரண்டு வேளை
எடுத்துக் கொண்டு வந்தோமேயானால் நம் உடலில் சேரக்கூடிய நச்சுக்களை (Toxins) அவ்வப்போது
வெளியேற்றி காரணமில்லாத நோய்களின் பிடிகளிலிருந்து தப்பிக்கலாம்.
Free-Radicals: புற்றுநோய்க்கு ஆரம்பமாக இன்றைய மருத்துவர்கள்
மூல காரணமாக சொல்வது Free-Radicals ஆகும். நஞ்சுமுறிச்சான் கல் பற்பம்
நம் உடலில் உள்ள Free-Radicals-ஐ சமநிலைப்படுத்தி உடலை ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருகிறது.
உள்ளுறுப்புகளை சரி செய்கிறது: நஞ்சுமுறிச்சான் கல் நம் உடலை குளுமைப்படுத்தி, நரம்புகளை வலுப்படுத்துகிறது, இதயம் மற்றும் கல்லீரலை வலுப்படுத்துகிறது.
படபடப்பான நெஞ்சுத்துடிப்பை சரி செய்து பலவீனமான இதயத்தை வலுப்படுத்துகிறது. உள்ளுறுப்புகளில்
உள்ள இரணங்களையும், வீக்கங்களையும் சரி செய்கிறது.
விஷமுறிப்பு மருந்து: நஞ்சுமுறிச்சான் கல்லை
பாம்பு கடிகளுக்கும், விஷத் தேள் கடிகளுக்கும் விஷமுறிவு மருந்தாக ஆயுர்வேத-யுனானி
மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
செரியாமை, நெஞ்செரிச்சல்:
நஞ்சுமுறிச்சான் கல் உணவு சாப்பிட்டபின் சரியான செரிமானம் இல்லாமல் இருப்பவர்களுக்கும்,
அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்களுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. பொதுவாக அசிடிட்டி
பிரச்சினை இருப்பவர்கள் நெஞ்செரிச்சலாக இருக்கும் போது மெடிக்கல் ஸ்டோர்களில் விற்கப்படும்
கெமிக்கல் பவுடர்களையே வாங்கி உபயோகப் படுத்துவார்கள். இதன் மூலம் வரும் பக்க விளைவுகள்
எண்ணிலடங்காதது. நெஞ்செரிச்சலுக்கு நஞ்சுமுறிச்சான் கல் பற்பத்தை உபயோகிக்கும் போது அசிடிட்டியையும்
சரி செய்து பக்க விளைவாக உடலுக்கு அளவில்லாத நன்மைகளை மட்டுமே செய்கிறது.
உடலை வலுப்படுத்த, சக்தியை அதிகப்படுத்த: உடலில் ஏற்படும் தசைப் பிடிப்புகளை சரி
செய்கிறது. உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்கிறது. நீண்ட நாட்களாக உள்ள காய்ச்சலை
சரி செய்கிறது, உடலை வலுப்படுத்துகிறது, ஆண்களின் உடலில் விந்தின் சக்தியை அதிகப்படுத்துகிற்து.
குடலில் வாயு சேர விடாமல் தடுக்கிறது, அதிகப்படியான வாயுவை வெளியேற்றுகிறது. சாதாரண
வயிற்றுப் போக்கையும், கிருமிகளின் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப் போக்கையும் சரி செய்கிறது.
குழந்தைகளின் உடல் நலம்: குழந்தைகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறமாகப்
போகும் வயிற்றுப் போக்கை நிறுத்துகிறது. குழந்தைகளுக்கு நஞ்சுமுறிச்சான் கல் பற்பத்தை கொடுக்கும்
போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக கூடுகிறது,
தொற்றுநோய்களுக்கு எதிரான மருந்து: சுற்றுப்புறத்தில் பெரிய அளவில் தொற்று
நோய்கள் பரவும் போது நஞ்சுமுறிச்சான் கல் பற்பத்தை நோய் தடுப்பு மருந்தாக (Preventive
Medicine) பயன்படுத்தி பெரியவர்களும், குழந்தைகளும் நோய்களின் பிடியின் சிக்காமல் தப்பித்துக்
கொள்ளலாம்.
சித்த வைத்திய நூல்களில் நஞ்சு முறிச்சான் கல்லைப் பற்றி தகவல் கீழ்வருமாறு:
வைத்திய வித்வன்மணி திரு.சி.கண்ணுசாமிப்பிள்ளை அவர்களின் சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம் (தாது-ஜீவ வர்க்கம்) நூலில் இருந்து பெறப்பட்டது.
நஞ்சுமுறிச்சான் கல்
நஞ்சுமுறிச் சான் கல்லால் நற்றா வரவிடவும்
நெஞ்சி லெழுந்துடிப்பும் நீங்கிடுமே: மிஞ்சிவரும்
வாந்தி யுடன்வீக்கம் மாசடைந்து வுள்ளிரணம்
சாந்த முறுமென்றே சாற்று
நஞ்சுமுறிச்சான்
கல்லால் தாவர விடம், மார்புத் துடிப்பு, வாந்தி, வீக்கம், தேகத்தினுள் அடங்கலாகிய எல்லா
உறுப்புகளின் விரணம் குணமாகும் என்க…
செய்கை: அந்தர்ஸ்நிக்தகாரி, விஷநாசகாரி
உபயோகிக்கும் முறை: தினந்தோறும் உண்ணும் பதார்த்தங்களினாவது
அல்லது தேகத்தின் அசௌகரியத்தின் நிமித்தம் கொண்ட அவிழ்தங்களினாவது படிப்படியாக தேகத்தில்
சேர்ந்துள்ள தாவரத்தின் விஷங்களையும், ஜீவராசிகளின் பற்கடியால் நேர்ந்த விஷங்களையும்
முறிக்கும்படியான ஓர் சக்தி இந்த கல்லிற்குண்டாதலால் இதனை நஞ்சுமுறிச்சான் கல் என்று
கூறியிருக்கின்றனர்.
இது பார்வைக்கு
சலவைக் கல்லைப் போலும் இடையில் பச்சை சாறலுடனும் மஞ்சள் புள்ளி விழுந்திருக்கும். இதனுடன்
வேப்பிலை கூட்டி அரைத்து சிறிது நேரம் சென்ற பின் வாயிலிட்டு சுவை பார்க்க கசப்பு மாறியிருக்கும்.
இத்தகைய கல்லே சரியானது என்றுணர்க.
இந்த கல்லை இடித்து
தூள் செய்து கல்வத்தில் போட்டு பன்னீர், தாழம்பூ கியாழம் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை
விட்டு ஒரு வாரம் அரைத்து வருக அல்லது பன்னீரில் 4-நாளும் தாழம்பூ கியாழத்தில் 4-நாளுமாக
அரைத்து அரைத்து மெழுகுபதத்தில் 2,3 குன்றி எடையுள்ள மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திப்
பத்திரப்படுத்துக. வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2-வேளை பொடித்துச் சர்க்கரை,
பால், சர்பத் முதலியவைகளில் கலந்து கொடுக்க எல்லாத்தேகிகளுக்கும் பொருந்தும். இன்னும்
விஷங்களினால் உண்டான பல பிணிகளையும் குணமாக்கும். ஆத்ம சக்தியை அதிகப்படுத்தும்.
இருதயம், ஈரல்,
நுரையீரல், இரைப்பை, சிறுநீரகம் முதலிய உறுப்புகளையும் பலப்படுத்துவதுமன்றி அங்குள்ள
விரணங்களையும் மாற்றும். மேலும் வாந்தி, மார்பு எரிச்சல், நெஞ்சுத் துடிப்பு முதலியவற்றை
குணப்படுத்தும். கால பேதங்களால் விஷக்காற்று ஆக்கிரமித்து உண்டாக்கும் பல தொற்று வியாதிகள்
பரவுங் காலங்களில் இம் மாத்திரையை உட்கொண்டுவர முற்றிலும் அத்தகைய நோய்கள் அணுகாவண்ணம்
தடுக்கும். குழந்தைகள் பச்சை நிறமாக கழியும் பேதிகளுக்கு இந்த மாத்திரை அதிக நன்மையை
தரும். இதனுடன் இதர சரக்குகளை கூட்டி உபயோகப்படுத்துவதுண்டு. எங்கனமெனில்..
க்ஷய நிவாரண மாத்திரை
நஞ்சுமுறிச்சான்கல்
தோலா ¾ (கால்ரூபா) கற்பூரமணி தோலா-1, முத்துச்சிப்பி தோலா ¾, நற்பவளம் தோலா-3/4, மூங்கிலுப்பு
தோலா-1-1/2. அசல் சீந்தில் சர்க்கரை தோலா-2 இவைகளை கல்வத்தில் போட்டு 10-பலம் அப்பட்டமான
பன்னீரை சிறுகச் சிறுக விட்டரைத்து மெழுகு பதத்தில் கடலை பிரமாணம் மாத்திரைகள் செய்து
நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
வேண்டும்போது வேளைக்கு
ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளை கொடுத்து அரை ஆழாக்கு காய்ச்சிய பசுவின் பாலில் போட்டு
கலக்கி கொடுத்துவர க்ஷய ரோகத்தில் காணுகின்ற சுரம், இருமல், உள்ளுறுப்பு விரணம், மூளை
பலவீனம் முதலியவை போம்.
Registered Office Address Only
Whatsapp & Call 2: +91-9629457147.
For Postal Contact Only
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001,
Tamilnadu, India.
Whatsapp & Call 1: +91-9025047147.
Whatsapp & Call 2: +91-9629457147.