சொரியாசிஸ் நாட்டு மருத்துவம், சொரியாசிஸ் பாட்டி வைத்தியம்
சோரியாஸிஸ்க்கான வீட்டு வைத்தியங்கள் சரும நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சோரியாஸிஸ்தான். சோரியாஸிஸ் என்பது சருமத்தில் சில இடங்களில் மட்டும் திட்டுத்திட்டாக தடிப்பது. இந்த இடங்கள் வறண்டு போவதுடன் தனியாக தெரியும். இதில் உள்ள மற்றொரு பிரச்சினை இது ஒரு இடத்தில் வந்துவிட்டால் தொடர்ந்து அருகில் உள்ள இடங்களுக்கு பரவும். ஆனால் சோரியாஸிஸ் மற்றவர்களுக்கு பரவாது. பாதிக்கப்பட்டவரின் உடலில் மட்டுமே பரவக்கூடியது. Remedies for Psoriasis சோரியாஸிஸ்-ஐ உடனடியாக சரி செய்ய இயலாது, ஆனால் சில மூலிகைகள் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தலாம். சோரியாஸிஸ்க்கு எந்த மருந்தை உபயோகப்படுத்துவதாய் இருந்தாலும் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் தவறான சோரியாஸிஸ் சிகிச்சை பல ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும். இங்கே சோரியாஸிஸ்க்கான சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம். சோற்றுக் கற்றாழை கற்றாழை சாறை தினமும் மூன்றுமுறை சருமத்தில் தடவுவது சோரியாஸிஸ்க்கு சிறந்த சிகிச்சையாகும். இது தடித்த பகுதிகளில் உள்ள சிவப்பு நிறத்தையும், அரிப்பையும் குறைக்குமென ஆய்வுகள் கூறுகி...