நிலாவரை உப்பு


நிலாவரை உப்பு – மருத்துவ பயன்கள்நில ஆவாரை இலைகள் பேதி, மூலம், வாத, பித்த கப நோய்களைக் குணப்படுத்தும். மலமிளக்கும்; வாயு, கீல்வாயு, பக்க வாதம், சூலைநோய், நரம்பு இசிவு ஆகியவற்றை குணமாக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.
நில ஆவாரை, நில வாகை, ஆலகாலம்  போன்ற முக்கிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன. இவை காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் வளரும் நிலாவாரையே சிறந்தது என்று அறியப்பட்டுள்ளது. நிலாவரைக்கு மற்றொரு மாற்று பெயராக திருநெல்வேலி சென்னா என்றும் அழைக்கப்படும்.

நில ஆவாரையை மூட்டுவலிகளை நீக்கவும், மூலநோயை நிவர்த்திக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும் முக்கிய மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

நிலாவரை சூரணத்தை பொதுவாக 3_5 கிராம் வரை பயன்படுத்தலாம்.

நிலஆவாரை அதனுடன் நாம் சேர்த்து சாப்பிடும் அனுமான முறைகளுக்குத் ஏற்றாற் போல மருத்துவ குணங்கள் வேறுபடும். வெவ்வேறு முறைகளின் மூலம் வெவ்வேறு நன்மைகளைப் பெற முடியும். 

நிலாவரை இலைச்சூரணத்தை 5 கிராம் அளவில் எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதை குறையும். காய்ச்சல், மூலவாயுக்கள், வயிற்று உப்பிசம், வயிற்றுவலி, மலச்சிக்கல் தீரும்.

நிலாவரை சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  இரத்த சுத்தியாகும். இரத்த விருத்தியாகும். உடம்பு பெருக்கும்.

சரியான வயது வந்த பெண்கள் பூப்படையாமல் இருந்தால், நிலாவரை சூரணத்தை தினசரி 5 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் பூப்பு அடைவார்கள்.

நிலாவரை சூரணத்தைக் குப்பைமேனி இலைச் சாற்றில் 5_10 கிராம் வரை சேர்த்துச் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று வேளை மருந்திலேயே தேள் கொட்டிய விஷம் நீங்கிவிடும்.

நிலாவரை சூரணத்தை வெந்நீரில் 5 முதல் 10 கிராம் வரை கலந்து சாப்பிட்டால், ஈஸ்னோஃபிலியா, இருமல் தீரும்.

நிலாவரை சூரணத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் சாப்பிட்டால் சில விஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். விஷங்களுக்கு மருந்து சாப்பிடும்போது புளியில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.

நிலாவரை சூரணத்தை பசுவின் கோமியத்துடன் கலந்து  சாப்பிட்டால் சொறி, சிரங்கு, பெருவயிறு, மகோதரம், நீராமை நோய்கள் நீங்கும். புளி இல்லாத பத்திய உணவு சாப்பிடவேண்டும்.

நிலாவரை சூரணத்தை தினமும் 5_10 கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், நீர்த்துப்போன இந்திரியம் கெட்டிப்படும். போக சக்தி அதிகரிக்கும்.

நிலாவரை சூரணத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்து  சாப்பிட்டுவந்தால் தேகம் வலிமைபெறும். நல்ல பசி உண்டாகும்.

நிலாவரை சூரணத்தை தும்பைச்சாற்றில் குழைத்துச் சாப்பிட்டால் ரத்தசோகை நோய் நீங்கும்.

நிலாவரை சூரணத்துடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இளமை நீடிக்கும்.

நிலாவரை சூரணத்தை மாதுளம் பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டால் உடம்பில் கெட்ட வாடைகள் இருக்காது.

நிலாவரை சூரணத்தை திராட்சைப் பழச் சாறுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி உண்டாகும். பலன் கிடைக்க தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

நிலாவரை சூரணத்தை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடம்பு பூரிப்பு அடையும். சர்க்கரையுடன் இச்சூரணத்தைச் சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.

நிலாவரை சூரணத்தை வெள்ளாட்டுப் பாலில் சேர்த்துச் சாப்பிட்டால், விந்து ஊறும், விந்து கெட்டிப்படும்.

எலும்புத் தேய்வு நோய்க்கு நிலாவரை சூரணம் மிக முக்கியமான மருந்தாகும். எலும்புத் தேய்வினால் ஏற்படும் வீக்கத்திற்கும், வலிக்கும் நிலாவரை சூரணம் நல்ல நிவாரணம் தருகிறது. கழுத்து எலும்புத் தேய்வு, முதுகு எலும்புத் தேய்வு, இடுப்பெலும்பு மூட்டுக்களில் தேய்வு, முழங்கால் மூட்டுக்களில் எலும்புத் தேய்வு, கணுக்கால்களில் வீக்கம், வலி ஆகியவற்றிற்கும் மூட்டு வாதத்திற்கும் நிலாவரை சூரணத்தை சாப்பிட்டு வர நல்ல பலனைப் பெறலாம். இந்தச் சூரணம் சாப்பிடுவதால் எலும்பு மூட்டுகளுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையை உற்பத்தி செய்து நோய் நிவாரணம் பெற உதவுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இச்சூரணத்தை 5_10 கிராம் அளவில் எடுத்துத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வரவேண்டும்.


நிலாவரை உப்பு 1

நிலாவரை உப்பு 2

நிலாவரை உப்பு 3


மண்டலக் கணக்கில் இந்த நிலாவரை கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், மிக எளிதாக இடுப்பு மூட்டு வலி, நரம்பு வலி, கழுத்து வலி, கால் மூட்டுக்களில் ஏற்படும் வலி வீக்கங்கள் அனைத்தும் குணமாகும்.

நிலாவரை சூரணம், முடக்கத்தான் இலைச் சூரணம், உத்தாமணி இலைச்சூரணம் ஆகிய மூன்றையும் ஒரு கைப்பிடியளவில் எடுத்து, 500 மில்லி தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரை எரித்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 3_6 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பாரிச வாயுக்கள் குணமாகும்.

சுகபேதிக்கு : ரோஜா மொட்டு 25 கிராம், நிலாவரை இலை 15 கிராம், சுக்கு 10 கிராம், கிராம்பு 5 கிராம் இவைகளைச் சிதைத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, பெரியவர்களுக்கு 120 மில்லி, சிறுவர்களுக்கு 60 மில்லி, ஒரு வயதுக் குழந்தைக்கு 15 மில்லி வீதம் கொடுத்தால், சுகபேதியாகும். இவ்வாறு கொடுத்து பேதியாவதால் களைப்பு இருக்காது. குடல் மாசு நீங்கும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். கண்கள் குளிர்ச்சியடையும்.

கடுக்காய்த்தோல் 5 கிராம், நிலாவரை இலை 10கிராம், ரோஜா மொட்டு சுக்கு 5 கிராம் இவை நான்கையும், நசுக்கி 250 மில்லி தண்ணீரில் முதல் நாள் இரவு ஊறப்போட்டு, அடுத்த நாள் காலையில் அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி ஆறியபின் குடிக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று முறை மலம் வெளியாகும். இத்துடன் மூட்டுக்களில் உண்டாகித் தேங்கியுள்ள வாயு நீர் வெளியாகி விடும். மூட்டுக்களில் அதிகம் வீக்கம் உள்ளவர்கள் வாரம் ஒருமுறையும், லேசான வீக்கம் உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறையும் இக்கஷாயத்தைத் தயாரித்து சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும்.

நிலாவரை, மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், வேப்பங்கொழுந்து வகைக்கு 50 கிராம் சூரணித்து, காலை, மாலை 10 கிராம் அளவில் சாப்பிட்டால், பதினைந்து தினங்களில் பித்த வாயு நீங்கும். மூளைக்கோளாறு உள்ளவர்களின் மூளை தெளிவடைந்து இயல்பு நிலைக்கு வரத்துவங்கும். தேவைப்பட்டால் மீண்டும் தயாரித்துச் சாப்பிடலாம்.

நிலாவரை சமூலத்தை வேகவைத்து, ஆறியபின் பால் கொடுக்கும் தாய்மார்களின் முலைகளில் வைத்துக் கட்டிக் கொண்டாலும், பூசிக் கொண்டாலும் மூன்று தினங்களில் பால் சுரப்பு அதிகரிக்கும்.

பொதுவாக மூலிகைகளிலிருந்து எடுக்கப்படும் சத்துவத்தை சித்த மருத்துவத்தில் உப்பு என்று அழைப்பதுண்டு, அனைத்து மூலிகைகளிலிருந்தும் உப்பு எடுக்க முடியும். குறிப்பிட்ட மூலிகை உப்பு என்பது அந்த மூலிகையின் தேவையில்லாத சக்கைகளை நீக்கி விட்டு அதிலுள்ள சத்தை மட்டும் எடுத்து உபயோகித்துக் கொள்வதாகும். இப்படி இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நிலாவரை உப்பு தற்போது உபயோகத்திற்கு கிடைக்கிறது. நிலாவரையின் மூலம் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் 300mg அளவு நிலாவரை உப்பு எடுத்துக் கொள்வதின் மூலம் கிடைக்கிறது.

உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகளை (Cholesterol) முழுமையாக கரைக்கும், உடல்பருமனை (Obesity) குறைக்கக்கூடிய தன்மை நிலாவரை உப்பிற்கு உண்டு. உடல்பருமன் என்பது நமக்கு ஒரு நாளிலேயோ, ஒருவாரத்திலேயோ, ஒரு மாதத்திலேயோ கூடுவது கிடையாது. சிறிது சிறிதாக ஏறிய உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்கமுடியும். நீங்கள் 100 கிலோ இருக்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு ஆறு மாத காலத்திற்கு இந்த 100 கிலோவை அதற்கு மேலும் கூடவிடாமல் அதே எடையிலேயே  தக்கவைக்க வேண்டும். 100 கிலோவை தக்க வைத்தபின்பு அந்த எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கக்கூடிய வேலைகளில் ஈடுபடவேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ குறைத்தால் கூட பத்து மாதத்திற்கு பத்து கிலோ குறைக்கலாம். சிறிதுசிறிதாக குறைத்து வரக்கூடியதுதான் உடல் எடையை குறைக்குமே ஒழிய, சடாரென்று குறையும் எடை அதே வேகத்தில் ஏறக்கூடிய வாய்ப்பும் உண்டு. ஏனென்றால் நம் உடம்பு 70% நீராலானது, சில மருந்துகளை கொடுக்கும் பொழுது அதாவது பேதி மருந்துகளைக் கொடுக்கும் பொழுதும், கொழுப்பைக் குறைக்கக்கூடிய மருந்துகளைக் கொடுக்கும் பொழுது சடாரென்று 4 கிலோ, 5 கிலோ குறையும், மறுபடியும் 10 கிலோ ஏற ஆரம்பித்துவிடும்.

எனவே கெமிக்கல் முறைகளின் மூலமாக உடல் எடையை குறைக்காமல் பசியோடு இருந்து பழகுங்கள் அதாவது உணவு உண்பது என்பது பசிக்கு சாப்பிடுவதாக மட்டுமே இருக்க வேண்டும், அந்தப் பசி இருக்கும் பொழுதே அரை வயிறாக சாப்பிடுவது, ஓரளவு சாப்பிடுவது, வயிறு முட்ட சாப்பிடாமல் இருப்பது இவற்றையெல்லாம் நாம் பழக்கப்படுத்தும்பொழுது உடல்பருமனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கக்கூடிய சூழல் உருவாகும். எந்த அளவிற்கு இன்றைக்கு இருக்கக்கூடிய பட்டை தீட்டிய அரிசி வகைகளைக் குறைத்துவிட்டு, நார்ச்சத்துள்ள சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி இவற்றையெல்லாம் பிரதான உணவாக மாற்றும் பொழுதும், கூடவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை அதிகமாக எடுத்துக்கொள்வதனால் கண்டிப்பாக உடல் பருமனிலிருந்து விடுபட முடியும். மிக எளிமையான விசயம் ஆனால் பழக்கப் படுத்துவதில் தான் நம் எடை ஏறுவதும் இறங்குவதும் இருக்கிறது. ஆக நான் சொன்னதைத் தொடர்ந்து செய்து வாருங்கள், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்து, அத்துடன் இயற்கையான மருந்துகளையும் சாப்பிட்டு வந்தால் உடல்பருமன் என்பதை குறைப்பது சாத்தியமே.


 மேற்கண்ட நிலாவரை உப்பு வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Nilavarai Salt and also For Contact...