மின்சாரத் தைலம்


பிரண்டை உப்பு                            Pirandai Salt

நஞ்சுமுறிச்சான் கல் பற்பம்

சிருங்கி பற்பம்

 ஹீமோகுளோபின் அதிகரிக்க

மாதவிலக்கு பிரச்சினைகள்

 
 

 மேற்கண்ட சிகிச்சைகள் மேற்கொள்ளவும், எங்கள் தயாரிப்பு பொருட்கள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
For Contact...  
 
 
மின்சாரத் தைலம்

மின்சாரத் தைலம் எப்படி செய்யலாம் என்றும் அதன் உபயோகம் எப்படி என்பதையும்  பார்க்கலாம்.


மின்சாரத் தைலம் என்பது என்ன?

மின்சாரத் தைலம் என்பது நாம் சாதாரணமாக தலைவலித் தைலங்கள் மற்றும் கை, கால் மூட்டு வலிகளுக்காக நாம் உபயோகப்படுத்தும்  அனைத்து வலி நிவாரண தைலங்களுக்கும் மூலப்பொருள் மற்றும் தாத்தா பாட்டியே இந்த மின்சாரத் தைலம் தான்.

முதலில் நாட்டு மருந்துக் கடையில் புதினா உப்பு (மென்த்தால் , MENTHOL  ) , ஓம உப்பு ( தைமால் ,  THYMOL ) , பச்சை கற்பூரம் இம்மூன்றையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும் . புதினா உப்பு மிக விலை அதிகம் 10 கிராம் அளவு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை பல இடங்களில் , பல விலையில் விற்கப்படுகிறது. தேவையான அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.
இந்த மூன்றையும் காற்றுப் புகாத ஓர் கண்ணாடி பாட்டிலில் போட்டு  நன்றாக 15 நிமிடம் குலுக்க உடனே புட்டியின் வெளிப்பகுதியில் குளிர்ச்சி தென்படும்.(அல்லது 3 பொருட்களையும் பாட்டிலில் போட்டு லேசாக குலுக்கி விட்டு 1 நாள் அப்படியே வைத்து விட்டால் தைலமாக மாறிவிடும்) அதே நேரத்தில் உள்ளே உள்ள மூன்று பொருளும் சேர்ந்து திரவ நிலைக்கு வந்துவிடும் . இதுவே மின்சாரத் தைலம்.

இந்த மின்சாரத் தைலம் மிகக் காரமானது (காட்டமானது). இதைத் தலைவலி மற்றும்  வலியுள்ள கால் மூட்டுக்கள் , இடுப்பு ,கை மூட்டுக்கள் , புஜம் போன்ற இடங்களில் ஓரிரு சொட்டுக்கள் எடுத்து தேய்க்க உடனே வலி பறந்தோடும்.( ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே தேய்க்க வேண்டும் , வலி இல்லையானால் கடும் எரிச்சல் ஏற்படும்எனவே கவனம் தேவை.)

குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்.

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 10 சொட்டுக்கள் கலந்து உபயோகிக்க சாந்தமாக வேலை செய்யும். சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப் பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்

மேலும் ஒரு குச்சியில் மின்சாரத் தைலத்தை தொட்டு உதறிவிட்டு  ஒரு வெற்றிலையில் அந்தக் குச்சியில் லேசாக ஒட்டிக் கொண்டு மிச்சம் இருக்கும் தைலத்தை தடவிக் கொடுக்க ஆஸ்துமா உடனே கட்டுக்குள் வரும். இதை அடிக்கடி பிரயோகம் செய்யக் கூடாது .

பல்வலிக்கு மின்சாரத் தைலம்:

மிக முக்கியமான உபயோகத்திற்கு வருவோம் .பல்வலி என்றால் என்ன என்று பல்வலி வந்தவர்களைக் கேட்டால் தெரியும் . அவ்வளவு அவஸ்தை கொடுக்கும் பல்வலி இந்த மின்சாரத் தைலத்தைக் கண்டால் பறந்தோடும் . நீங்கள் தேய்க்கும் பற்பொடி எதுவானாலும் அதில் பத்து சொட்டு மின்சாரத் தைலத்தை விட்டு பல் தேய்த்துக் கொண்டு வர உங்கள் ஆயுளுக்கும் பல்வலி வராது . பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது, இருந்தாலும்  மின்சாரத் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு  மின்சாரத் தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள் . பக்க வாதம் வந்து கை கால் செயலிழந்து போனவர்களுக்கு  மூட்டு வலித் தைலத்துடன் சேர்த்து வெளிப் பிரயோகமாகத்  தேய்துவிட அற்புதமாக குணம் அளிக்கும்.
மிக முக்கியமாக ஒன்றை கூற விட்டுவிட்டோம் . பல் ஏதாவது எதிர்பாராது பட்ட அடியினால் உடைந்துவிட்டாலோ வேருடன் வந்து விட்டாலோ அந்தப் பல்லை அதே இடத்தில் வைத்து பக்கத்து பல்லுடன் நூலை சேர்த்து கட்டி அசைய விடாமல் வைத்துக் கொண்டு அதன் வேர்ப்பாகத்தில் அல்லது உடைந்த இடத்தில் இந்த மின்சாரத் தைலத்தை ஒரு சொட்டு விட்டு வர பல் மீண்டும் ஒட்டிக் கொள்ளும் .பழைய வலு திரும்பும் வரை மின்சாரத்தைலம் கலந்த பல் பொடியை தேய்த்து வர பல் பழைய வலுவுடன் ஆகும்.அது வரை அதற்கு நேரடியாக அதிக பலமான  உபயோகம் கொடுக்காமல் இருந்தால் போதும் .
இந்த மின்சாரத் தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம். கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை  வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்

100 மில்லி மின்சாரத் தைலம் ஒரு குடும்பத் தேவைக்கு ஒரு வருடத்திற்கு போதுமானது. மின்சாரத் தைலம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் மின்சாரத் தைலம் தயாரிக்க தேவைப்படும் 3 பொருட்களும் கொரியரில் அனுப்பப்படும்

தொடர்புக்கு:
K7 Herbo Care,
SS Colony North Gate,
Madurai-10.
Call & Whatsapp: 9629457147
Call 2: 9025047147