சீரான சிவப்பழகு கொடுக்கும் சீரகம் !!!
முகத்தில் ஒரு சிறிய கருப்பு புள்ளியை தேடினாலும் கண்டுபிடிக்கவே முடியாது. சீரான சிவப்பழகு கொடுக்கும் சீரகம் !!! சமையலறையில் இருக்கக்கூடிய சீரகம், வெந்தயம் இந்த இரண்டு பொருட்களை வைத்து நம்முடைய சரும அழகை மேம்படுத்திக் கொள்ள ஒரு சுலபமான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய முகத்தில் முகப்பரு, முகப்பரு வந்த இடத்தில் தழும்பு, பிக்மெண்டேசன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்கள், கருவளையம் இப்படி எந்த பிரச்சினைகள் இருந்தாலும் சரி இந்த குறிப்பை ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள்ஸ்பூன் சீரகம், 1 டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஒரு முறை கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இதை 8 மணிநேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு ஊற வைத்த தண்ணீரோடு அப்படியே இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இதை விழுது போல அரைத்து ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த இரண்டு பொருட்களும் சேர்த்து அரைத்து வடிகட்டிய சாறு தான் நமக்கு தேவை.) ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் ஒரு ...