பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?, பக்கவாதத்தை தடுக்கும், பக்கவாதத்தை தடுக்க

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?


 
இரத்த அழுத்தம் அதிகமானால்…
இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும். 
பக்கவாதமும் ஏற்படும்.

பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது இரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது.

மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். இரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. 
 
மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது. அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது.

மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் இரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல் நிலையும் ஆரோக்கியமாகவே இருக்கும். எந்த நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக இல்லையோ அந்த நரம்பு எந்த உடல் உள் உறுப்புகளுக்கு தொடர்பு உடையதோ அந்த உறுப்புகள் பாதிப்பு அடையும். அந்த உறுப்பு எந்த நோய்க்கு தொடர்பு உடையதோ அதை சார்ந்த நோய்களும் உருவாகும்.

இரத்த அழுத்தம் அதிகம் ஆனால் இரத்த குழாய்கள் சுருங்கி விடுவதோடு இரத்த ஓட்டம் தடைபடவும் செய்யும். இதன் காரணமாக இதயம், சிறுநீரகம் போன்றவைகள் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும்.

உடலில் ஒரு பக்கம் பாதிப்பு அடைவதால் தான் பக்கவாதம் என சொல்கிறோம். மூளையின் இடது பக்கம் பாதிப்பு ஏற்பட்டால் வலது கை, கால் பாதிப்பு அடைவதோடு பேச முடியாத நிலையும் ஏற்படுகிறது.
 

பக்கவாதத்துக்கு முக்கியக் காரணம்:
 
  அதிக உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை, கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ணுதல், சர்க்கரை நோய் உடலில் அதிக அளவு காணப்படுதல், அடிக்கடி கோபம் ஏற்படுதல் அதிகமாக டென்ஷன் ஆகுதல், இரவில் அதிக நேரம் தூக்கமின்மை, அதிக நாள் கொண்ட மலச்சிக்கல் மற்றும் மூளைக்குச் செல்ல கூடிய இரத்தக் குழாய்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வந்து விடுகிறது.

ஒருவருக்கு பக்கவாதம் வந்து விட்டால் அவருக்கு 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை தந்தால் அவரை விரைவில் குணப்படுத்தலாம். பக்கவாதம் வந்தவரின் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதா அல்லது இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என அறிந்து சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தவுடன் எந்த உணவு பொருளை தவிர்க்க வேண்டுமோ, அவற்றை தவிர்த்தல் நலம் தரும்.
 

👉 பக்க வாதம் நோய் வராமல் இருப்பதற்கு முதலில் உணவுப் பழக்கத்தை சரியான முறையில் முறைப்படுத்த வேண்டும். 

👉உடலுக்கு அதிக கொழுப்பு சத்தை தரும் உணவை தவிர்க்க வேண்டும். 

👉மலச்சிக்கல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். 

👉அதிக உயர் இரத்த அழுத்தம் இல்லாமல் இரத்தத்தின் அளவு சரியான முறையில் வைத்து கொள்ளவும். 

👉உடலில் இரத்த அளவு முறை கூடுதலாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம், குறைவாக இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் ஆகும். இந்த இரு வகை பிரச்சினைகளுமே உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியவையாகும்.
 

தடுப்பதுதான் எப்படி?

இக்கொடிய நோயை வரவிடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். 
அதற்கு என்ன செய்யலாம்?

இரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். இரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். 
 
இதைத் தவிர்க்க ஊறுகாய், கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள்.

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.
 

இரத்தக்கொழுப்பு கவனம்!

இரத்தத்தில் கொழுப்பு மிகுந்தால், அது இரத்தக் குழாய்களை அடைத்து பிரச்சினை பண்ணும். ஆகவே, கொழுப்பைக் கட்டுப்படுத்த வேண்டியது அடுத்த கட்ட நடவடிக்கை. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, பால், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, பால்கோவா, பாமாயில், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகிய உணவுகளை ஓரங்கட்டுங்கள்.

பீட்சா, பர்கர் போன்ற விரைவு உணவுகள்... கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பாதாம்கீர், சாக்லெட் போன்ற பேக்கரி பண்டங்கள்... பூந்தி, லட்டு, ஜிலேபி, அல்வா போன்ற இனிப்பகப் பண்டங்கள்... மிக்ஸர், முறுக்கு, வேர்க்கடலை, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சமோசா, வடகம் போன்ற நொறுக்குத் தீனிகள்... டின்களில் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.
 

நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருங்கள் 
 
பக்கவாதம் வருவதற்கு நீரிழிவு (சர்க்கரை நோய்) ஒரு முக்கியக் காரணம் . முக்கியமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் பாதிப்பு அதிகம். மற்றவர்களோடு ஒப்பிடும்போது சர்க்கரை நோயுள்ள ஆண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 5 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயுள்ள பெண்களுக்குப் பக்கவாதம் வருவதற்கு 12 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, சரியான மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
 

எடையைப் பராமரியுங்கள்

சமச்சீரான உணவு சாப்பிடுதல், குறிப்பாக சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு சாப்பிடுதல், எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் உங்கள் உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரியுங்கள்.
 

புகைப்பழக்கம் வேண்டாமே!

புகைப்பிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையிலையில் இருக்கும் நிகோடின் இரத்தக்குழாய்களைத் தாக்குகிறது. அவற்றை உள்ளளவில் சுருங்க வைக்கிறது. இரத்தக்கொழுப்பு படிவதற்கு வழி அமைக்கிறது. எனவே, புகைப் பிடித்தலுக்கு உடனே ‘நோ’ சொல்லுங்கள்.
 

மது அருந்தாதீர்கள்!

மது அளவுக்கு மீறினால் கல்லீரலில் கொழுப்பு சேரவும், இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியவும் ஊக்குவிக்கிறது. இதனால் மது குடிப்போருக்கு சீக்கிரத்தில் பக்கவாதம் வந்துவிடுகிறது. எனவே, மதுவைக் குடிக்காதீர்கள். 
 
 
என்ன உடற்பயிற்சி செய்யலாம்!

பக்கவாதத்தைத் தடுப்பதில் உடற்பயிற்சிகளின் பங்கும் நிறைய உண்டு.  உங்களுக்கு வசதிப்பட்ட ஒரு பயிற்சியை மேற்கொள்ளலாம். எந்தப் பயிற்சியை எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

⭐சுலப நடை - தினமும் 45 நிமிடங்கள்.

⭐வேக நடை - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.

⭐மெல்லோட்டம் - மணிக்கு 3 கி.மீ. வேகம். தினமும் 30 நிமிடங்கள்.

⭐ஓடுதல் - மணிக்கு 3.5 கி.மீ. வேகம்.தினமும் 15 நிமிடங்கள்.

⭐டென்னிஸ் - தினமும் 35 நிமிடங்கள்.

⭐நீச்சல் - தினமும் 40 நிமிடங்கள்.

⭐சைக்கிள் ஓட்டுதல் - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.
 
 

மன அமைதி முக்கியம்!

தவறாமல் செய்யும் தியானம், யோகா  இரண்டும் மன உளைச்சலையும் மனப்பதற்றத்தையும் தவிர்ப்பதால், இவர்களுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோல் சர்க்கரை நோயும் கட்டுப்படும். இதய நோய் வருவதற்கு யோசிக்கும். பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படும்.தொடர் மருத்துவப் பரிசோதனை வயது காரணமாகவோ, பரம்பரை ரீதியாகவோ, சர்க்கரை நோய், இதய நோய், பருமன், ரத்தக் கொழுப்பு அதிகம் போன்ற காரணத்தாலோ பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடலை மாஸ்டர் செக்கப் செய்து கொள்ளுங்கள்.கடைசியாக ஒன்று...

உங்களுக்கு இருக்கிற உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், இரத்தக் கொழுப்பு போன்றவற்றுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். இவற்றை இடையில் நிறுத்திக்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, நீங்களாக அளவைக் குறைத்துக்கொள்வதோ கூடாது. இப்படிச் செய்வது ஆபத்தை நீங்களே வரவழைத்துக்கொள்ள வாய்ப்பாகிவிடும். எனவே, சிகிச்சையில் அலட்சியம் வேண்டாம். பக்கவாதத் தடுப்புக்குத் தொடர் சிகிச்சை அவசியம்.

உடலில் இரத்த அழுத்த அளவு மாறுபடுவதற்கு மனமும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது நம் மனதில் மன அழுத்தம் அதிக அளவில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மனம் பலமாக இருந்தால் தான் உடலும் பலமாக இருக்கும். மன அமைதியைத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் மன அமைதியுடன் வாழ முடிகிறதா? என்றால் இல்லையே.

ஏன் என்றால் சிலருக்கு வீட்டில் பிரச்சினை, சிலருக்கு அலுவலகத்தில் அதிகபடியான டென்ஷன், சிலருக்கு மனதில் எப்போதும் தேவையில்லாத விஷயங்களை யோசித்து மனதில் குப்பை போன்று பல்வேறு விஷயங்களை தேக்கி வைத்து இருப்பார்கள். மனதில் நல்ல விஷயங்களையும் நல்ல செய்திகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களையும் கருத்துகளையும் மட்டுமே மனதில் வைத்துக் கொண்டால் போதும். மன அமைதியுடன் வாழலாம்.

அதே போல் பிறருக்கு வாழ்க்கையில் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்ந்தாலே மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கும்.
 

பெண்கள் கவனம்!

இந்த நோய் ஆண்களுக்குத்தான் அதிகம் என்று முன்பு சொன்னார்கள். இப்போதோ பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு தாராளமாக இருக்கும். இது இவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுத்துக்கொள்ளும். ஆனால், மாதவிலக்கு நின்றபிறகு, பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது. ஆகவே, எச்சரிக்கை தேவை❗

 பக்கவாதத்திற்கான சிகிச்சை முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, சிகிச்சை மேற்கொள்ள

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

பக்கவாதம் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  பக்கவாதம் Home Page-ற்கு செல்லவும்

பக்கவாதம் Home Page