பக்கவாதம் சித்த மருத்துவம், பக்கவாதம் மூலிகை, paralysis cure treatment, paralysis cure in ayurveda, stroke cure medicine

 பக்கவாத நோயும், சித்த மருத்துவ முறைகளும்

 

இதைப் பக்ஷவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்றும் ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம். 

 

பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன.

1.       உடலின் வலது அல்லது இடது பக்கத்தையோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்கமுடியாமல் போய்விடுகிறது இது ஒரு வகை.

2.       ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்கமுடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும்.

3.       இரண்டு கால்களுமே அசைக்க முடியாமல் போவது மூன்றாவது வகையாகும்.

 

பக்கவாதத்திற்கு அடிப்படையான மூல காரணம்

பக்கவாதநோய் வரக்காரணம் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாக குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சியச் சிற்றின்பம், தொடர்ந்து போதைப் பொருள்களை உபயோகிப்பது, குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம்.

மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்புகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள் ஏற்பட்டு நரம்புகளை அழுத்துவதால் மூளையில் இரத்தக் குழாய்கள் உடைந்து போதல், அல்லது இரத்தம் உறைந்து கெட்டிப்படுதல், ஆகிய காரணங்களால் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் அதை நிர்வகிக்கக்கூடிய பகுதிகள் உணர்ச்சி குறைந்து திடீரென இந்நோய் தாக்கலாம். பிரதானமாக வர்மம் புள்ளிகளில் அடிபட்டுவிட்டால், அதை உடனே கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பக்கவாத நோய் பற்றிக்கொள்ள அதுவே காரணமாகலாம்.

த்ராம்போஸிஸ் என்று சொல்லப்படுகின்ற இரத்தத்தில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள் அல்லது பெரியகட்டிகள் இரத்த நாளங்களை அடைத்துவிடுவதால் மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் சில பாகங்கள் செயலிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். இது தவிர, நுண்ணுயிர்க் கிருமிகளாலும், இதய வால்வுகள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாலும் இரத்தம் அழுத்தம், நீரிழிவு, ரகசிய நோய்களாலும் வரலாம்.

 

நாள்பட்ட பக்கவாதத்திற்கு அதிக நாள் சிகிச்சை தேவை

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படு வதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.

பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.

பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

 

எளிய சிகிச்சை முறைகள்

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 தேக்கரண்டி வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கல் தீர்ந்த பின்பு, கேடடைந்து பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தந்து, வாதக் குற்றத்தைப் போக்கக்கூடிய உள் மருந்துகளைத் தரவேண்டும். அதற்கான எளிய சிகிச்சை முறைகளை அறிவோம்.

 

மூலிகை மருந்து

முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுகு, சுக்கு, மிளகு, பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.

 

சித்த மருந்துகள்

இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.

 

வெளிப்பூச்சு எண்ணெய்

அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர மூல வேரை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்து வந்தால் போதும்.

இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.

பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.

 

ஒத்தடம்

மேற்பூச்சுத் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டைகளாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.

பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம்.

பொதுவாக வாதநோய்க்குச் சிகிச்சை மேற்கொள்ளும்போது பத்தியம் மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.

வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளியை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற் கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.

முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.

வாதத்திற்குச் சிகிச்சை அளிப்பதில் மிகுந்த கவனம் தேவை. தழைபார், வேர்பார், மெல்ல மெல்ல பஸ்பம், செந்தூரம் பார் என்ற சித்தர்களின் மறைமொழிக்கேற்ப ஆரம்பத்தில் பாஷான மருந்துகளைப் பிரயோகிக்கக்கூடாது. தேவையானால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

அதோடு நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்.

அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ      

கரும்பு கோணிடில் கட்டி பாகாகலாம்

நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்யலாம்

என்ற சித்தர் பாடலைப் படிக்கும்போது வாத நோய்கள் என்பது தெளிவாகிறது. எனவே இவைகளுக்குச் சுயமருத்துவம் செய்து காலத்தை வீணாக்காமல் ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவத்தை நாடி சிகிச்சை மேற்கொண்டால் கண்டிப்பாக எல்லாவித வாத நோய்களையும் வெல்லலாம்.


பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த பழையபடி சராசரி  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி ஆரோக்கியமாக வாழ, சிகிச்சை மேற்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...

(குறிப்பு: 60 வயதிற்கு மேற்பட்டவர்களை சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வதில்லை)

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

பக்கவாதம் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  பக்கவாதம் Home Page-ற்கு செல்லவும்

பக்கவாதம் Home Page