சரியான
எடை குறைப்பு வழிமுறையை எப்படி கண்டறிவது…
ஒரு சிறு அலசல்…
இன்று நாம் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் எடை குறைப்பு வழிமுறைகள் சரியாக இருந்தால் மட்டுமே நம் முயற்சி வெற்றி
பெறும், ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் முறைகள் அனைத்துமே வெறும் நம்பிக்கையின்
அடிப்படையில் செய்யப்படுபவை, அல்லது வெறுமனே TV விளம்பரங்களை நம்பியோ செய்யப்படுபவை…
Magic Pill:
எடை குறைக்க நினைப்பவர்கள்
அனைவருமே அவர்கள் 100 கிலோவிற்கு மேல் இருந்தாலும் கூட எடை குறைக்க ஆரம்பித்த ஒரே மாதத்தில்
ஹ்ரிதிக் ரோஷன் மாதிரியோ, தீபிகா படுகோன் மாதிரியோ மாறி விட வேண்டும் என்று அவசரப்படுவார்கள்.
இதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பணத்தை தண்ணீராக செலவு செய்ய தயாராக
இருப்பார்கள். இந்த ஒரு மாத்திரையை சாப்பிட்டால் போதும் உங்களுக்கு உடல் எடை குறைந்து
விடும் என்றால் ஒரு மாத்திரைக்கு ஒரு இலட்ச ரூபாய் கூட கொடுக்க தயராக இருக்கிறார்கள்,
ஆனால் இந்த மாதிரி
எண்ணம் உள்ளவர்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் உலகில் இதைப் போல ஒரு மருந்து
இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதே, அப்படி இனிமேல் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை
நம் உடம்பு ஏற்றுக் கொள்ளாது.
எடை குறைப்பு
வழிமுறைகள்
நடைப்பயிற்சி:..
உடல் எடை குறைக்க
போகிறோம் என்று சொன்னாலே நம்மவர்கள் சொல்லும் முதல் ஐடியாவே நன்றாக நடந்தால் உடம்பும்,
தொப்பையும் குறையும் என்றுதான். நடந்தால் உடம்புக்கு நல்லதுதான், ஆனால் வருடக்கணக்கில்
எவ்வளவு தான் நடந்தாலும் உடம்பும் தொப்பையும் குறையாது என்பது நடந்து பார்த்தவர்களுக்கு
மட்டும்தான் தெரியும்… நடப்பதில் ஒரு எதிர்மறையான
விஷயம் என்னவென்றால், அதிக எடையுடன் இருந்து கொண்டு உடம்பை குறைக்க வேண்டும் என்று
நடைப்பயிற்சி மேற்கொண்டால் மூட்டு தேய்மானமும், மூட்டு வலியும் 100% உறுதி.
ஜிம்மிற்கு
போவது:
கொஞ்சம் இளம் வயதில்
இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் செய்ய நினைப்பது
அல்லது போக நினைக்கும் இடம் ஜிம். ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் ஜிம்மிற்கு போவார்கள்,
அடுத்தபடியாக ஜிம்மிற்கு போவதை விட்டவுடன் முதலில் இருந்ததை விட உடம்பும் தொப்பையும்
கூடி விடும்,
ஜிம்மிற்கு போனால்
நம் உடம்பில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜிம்மிற்கு போனால் உடல்
ஆரோக்கியத்திற்கு நல்லது, நமது உடலில் உள்ள தசைகள் எல்லாம் நல்ல டோன்-அப் ஆகும் எல்லாம்
உண்மைதான். ஆனால் உடல் குறையும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
பெரிய பெரிய தொழிற்சாலைகளில்
பேக்கிங் செக்சனில் பேல்-கட்டு என்று போடுவார்கள். உதாரணத்திற்கு ஒரு 100 கிலோ பஞ்சு
மூடையை அப்படியே லாரியில் அனுப்பினால் அதிகப்படியான இடமும், அதிக பொருள் செலவும் ஆகும்.
எனவே இப்போது அந்த 100கிலோ பஞ்சு மூடையை பேலிங்-கட்டு என்ற முறையின் மூலம் அப்படியே
10ல் 1 பங்காக அழுத்தி சுருக்கி விடுவார்கள். இப்போது கையாளுவதற்கும் எளிது, போக்குவரத்தில்
அனுப்புவதற்கும் எளிது.
மேற்சொன்னது தான்
நாம் ஜிம்மிற்கு போகும் போதும் நடக்கிறது. நீங்கள் எடையைத் தூக்கி பலவிதமான உடற்பயிற்சிகள்
செய்யும் போது, உங்கள் உடம்பில் உள்ள தொங்கிப் போன சதைகளும், கொழுப்பும் அனைத்தும்
இறுக்கமடைந்து (கொழுப்பு இறுக்கமடைகிறது, அவ்வளவுதான். வெளியேறுவதில்லை) அழகான தோற்றமடைகிறது,
ஆனால் எடை மட்டும் குறையாது, எடை அதிகரிப்பு வேண்டுமானால் நடக்கும். ஜிம்மிற்கு போகும்
போது நாம் செய்யும் உடற்பயிற்சிகளின் காரணமாக அதிகப்படியான கலோரிகள் வெளியேறும், அதை
ஈடு செய்வதற்காக நாமும் அதிகப்படியாக சாப்பிட்டு பழகி இருப்போம். திடீரென்று ஜிம்மிற்கு
போவதை நிறுத்தி விடுவோம், ஆனால் அதிகமாக சாப்பிடுவதை மட்டும் நிறுத்த மாட்டோம். இவை
எல்லாம் நடக்கும் போது நம் உடலின் எடை திரும்பவும் அதிகரிக்க மட்டுமே செய்யும்.
உடல்
குறைப்பு கெமிக்கல் பவுடர்கள்:
எளிதான முறையில்
உடல் குறைக்க விரும்பும் நம்மவர்கள் நாடும் மற்றொரு விஷயம் இந்த கெமிக்கல் பவுடர்களையே.
அந்த குறிப்பிட்ட
கம்பெனியின் பவுடரை மட்டும் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு விட்டு, அடுத்த இரு வேளைகளும்
சாப்பாட்டை பாதியாக குறைத்தும் சாப்பிடச் சொல்லுவார்கள்.
80 கிலோவில் இருந்து
60 கிலோவாக குறைக்க விரும்பும் நபர் மேற்சொன்ன பவுடரை இருமாதங்கள் சாப்பிட்டு பிறகு
விட்டு விட்டால் அடுத்து கண்டிப்பாக 100 கிலோவாக மாறிவிடுவார். (சந்தேகம் இருந்தால்
இந்த பவுடர் வாங்கி சாப்பிட்டவர்களை கேட்டு பாருங்கள்). இரண்டு மாதங்கள் இந்த பவுடரை
வாங்கி சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் எடை குறைகிறதோ இல்லையோ கண்டிப்பாக பர்ஸில் உள்ள
பணம் மட்டும் குறையும்.
கொழுப்பு
டயட்டின் மூலம் எடை குறைக்கலாம்:
கொழுப்பு உணவுகளும்,
மாமிசமும் மட்டும் சாப்பிட்டால் இரு மாதங்களில் உடல் எடை கண்டிப்பாக உடல் எடை குறையும்
என்று சொல்லுகிறார்கள். உடல் எடையும் குறைகிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால்
இரு மாதங்களுக்கு பிறகு என்ன நடக்கும்.. நாம்
சாப்பிட்டு பழகிய உணவிற்கு மீண்டும் திரும்பி வரும்போது உடல் எடை மறுபடியும் முதலில்
இருந்ததை விட கூடி விடுகிறது. ஒரு புலியை இரண்டு மாதங்களுக்கு புல் தின்ன வைத்தாலும்,
ஒரு பசுமாட்டை இரண்டு மாதங்களுக்கு மாமிசம் தின்ன வைத்தாலும் கண்டிப்பாக இரண்டுமே உடல்
எடை குறைந்து மெலிந்து விடும், ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
எந்த டயட் முறையை
நாம் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற முடியுமோ அதே டயட் முறையை வைத்து நம் உடல் எடையை
குறைப்பதே புத்திசாலித்தனம்.
எடை குறைப்பு
மையங்களுக்கு செல்வது:
இன்று எந்த எடை
குறைப்பு மையங்களின் விளம்பரங்களை பார்த்தாலும், நாங்கள் ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில்,
ஒரு மாதத்தில் இவ்வளவு எடை குறைத்தோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் ஒரு மணி
நேரத்தில் உடல் எடையை குறைக்க முடியுமா? அது சாத்தியமா? அப்படியே உடலின் எடை குறைந்தாலும்
அது ஆரோக்கியமான உடல் குறைப்பா? என்பதைப் பற்றி நாம் யாரும் யோசிப்பதே இல்லை…
80 கிலோ உள்ள ஒரு
நபரின் எடையில் 10 கிலோ வரை நீர் எடையை ஒரு வாரத்தில் குறைக்க முடியும். ஆனால் கொழுப்பு
எடையை குறைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் இது போன்ற நிறுவனங்கள் வெறும் நீர்
எடையை மட்டும் (நீராவி குளியல் முறையின் மூலம்) ஒருவரின் உடலில் இருந்து குறைத்து விட்டு,
நாங்கள் எடையை குறைத்து விட்டோம், எடையை குறைத்து விட்டோம் என்று விளம்பரம் செய்கிறார்கள்.
120 எடை உள்ள நபரின் எடையை 100 கிலோவாக்கி விட்டு எங்கள் நிறுவனம் எடையை குறைத்து விட்டோம்
என்று விளம்பரத்தில் சொல்லுகிறார்கள், 20 கிலோவை
குறைக்க முடிந்தவர்கள் அந்த குறிப்பிட்ட நபரை ஏன் சரியான தோற்றத்திற்கு கொண்டு வர முடிவதில்லை,
ஏனென்றால் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக வெளியேற்றாமல் ஒருவரை சரியான தோற்றத்திற்கு
கொண்டு வர முடியாது.
எடை குறைப்பிற்கு
அறுவை சிகிச்சை:
நவீன மருத்துவத்தில்
அதிக உடல் எடையை குறைக்கிறோம் என்று சொல்லி குறிப்பிட்ட நபரின் இரைப்பையில் பாதியை
வெட்டி எடுத்து விடுகிறார்கள், இந்த முறையின் மூலம் உடல் எடை வேண்டுமானால் குறையலாம்.
ஆனால் அந்த குறிப்பிட்ட நபருக்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு விதமான ஆரோக்கியம் தொடர்பான
பிரச்சினைகள் வரும் என்பதை பற்றி எந்த மருத்துவர்களும் சொல்லுவதில்லை.
அறுவை சிகிச்சையின் மற்றொரு வழி:
எந்த இடத்தில்
கொழுப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில், கட்டிடத்திற்கு பிளான் போடுவது போல வரைபடம்
எல்லாம் போட்டு அந்த இடத்தில் உள்ள கொழுப்பை லிப்போசக்சன் என்ற முறையின் மூலம் உறிஞ்சி
எடுப்பது. ஆனால் இந்த முறையின் மூலம் எடுத்த கொழுப்பை நமது உடம்பு மீண்டும் நிரப்பி
விடும். (ஆற்றில் ஒரு இடத்தில் மண்ணை தோண்டி எடுத்தால் அந்த இடம் பள்ளமாகவேவா இருக்கும்?
ஆற்று நீர் எப்படி அடுத்த இடத்தில் இருக்கும் மண்ணை அந்த பள்ளத்தில் கொண்டு வந்து நிறைத்து
விடுமோ, அதே போலவே நம் உடலிலும் நடக்கிறது)
இயற்கையான
முறையில் உடல் எடையை குறைப்பது:
உடல் எடையை குறைக்க
நினைப்பவர்களுக்கு முதலில் தேவை அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமே. என்ன நடந்தாலும் எவ்வளவு
நாட்களானாலும் அது வரையிலும் உடல் எடையை குறைப்பதில் உறுதியான எண்ணம் வேண்டும். உடல்
எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் அவசரப் படக்கூடாது. நம் உடலின் மெட்டபாலிசம் மிகவும்
மெதுவானது தான். ஒரு மாதத்தில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற அதிக ஆசைப்படுபவர்களுக்கு
நான் சொல்வது என்னவென்றால், உங்களுடைய உடல் எடை ஒரே மாதத்திலோ, ஒரே வருடத்திலோ அதிகரித்தது
கிடையாது. எனவே ஒரே மாதத்தில் குறைக்கவும் அவசரப்படக் கூடாது.
அர்ப்பணிப்பு உணர்வுடன்
உடல் குறைப்பை ஆரம்பித்தாலும் நீங்கள் என்ன முறையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதும்
முக்கியம். இங்கு உடல் குறைப்பும் முக்கியம், ஆரோக்கியமும் முக்கியம். ஏனென்றால் உடல்
எடை குறைப்பை முடித்த பிறகு நீங்கள் ஆரோக்கியமானவராக, வலிமையானவராக உணர வேண்டும். நோயாளி
போல் உணர கூடாது.
இயற்கையாக என்றவுடன்
நேச்சுரல், ஹெர்பல் என்ற பெயர்களை எங்கு பார்த்தாலும் நம்பி விடாதீர்கள். ஏனென்றால்
நேச்சுரல் என்ற பெயரில் வரும் கெமிக்கல் பொருட்கள் ஏராளம், ஏராளம். பொறுமையாக சரியான
ஹெர்பல் பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து உடல் குறைப்பை ஆரம்பியுங்கள்,
இப்போது பிரண்டை
உப்பை வைத்து உடல் குறைப்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். பிரண்டை உப்பை ஏன் தேர்ந்தெடுக்க
வேண்டும் என்றால் நமக்கு அறிமுகமான நமக்கு கிடைக்கும் மூலிகைகளிலேயே கொழுப்பையும் மிக
நன்றாக குறைத்து கூடுதலாக 300 விதமான நோய்களையும் குணப்படுத்தக்கூடிய மூலிகை சார்ந்த
பொருள் எதுவென்றால் அது பிரண்டை உப்பு மட்டுமே.
பிரண்டை உப்பும்
சரியான தயாரிப்பாக இருக்க வேண்டும். ஆன்லைனிலும், ஒரு சில நாட்டு மருந்து கடைகளிலும்
பிரண்டையையும், கடலுப்பையும் சேர்ந்து தயாரித்த பிரண்டை சாம்பலை (பிரண்டை பற்பம்) வைத்துக்
கொண்டு 100கிராம் ரூ.200/- அல்லது ரூ.300/- என்று விற்கிறார்கள். இந்த பிரண்டை சாம்பலை
சாப்பிட்டு பிரண்டை உப்பின் பயன்களை அடைய முடியாது.
இப்போது நீங்கள்
மற்றொரு விஷயத்தை புரிந்து கொள்ளுவதும் முக்கியம், பிரண்டை உப்பும் ஒரு Magic Pill
கிடையாது. பிரண்டை உப்பு உங்கள் உடலில் நன்றாக செயல்பட்டு உடல் எடையை குறைக்க கூடுதலாக
சில விஷயங்களையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
1. பிரண்டை உப்பு
உடல் குறைப்பு விஷயத்தில் முழுமையாக நன்றாக செயல்பட நார்ச்சத்து மிகவும் முக்கியம்.
எனவே உடல் குறைப்பிற்காக பிரண்டை உப்பு சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக நார்ச்சத்து உள்ள
பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. ஒவ்வொரு வேளை
சாப்பாட்டிற்கு பிறகும் அரைமணி நேரம் கழித்து கண்டிப்பாக க்ரீன் டீ நல்ல சூடாக எடுத்துக்
கொள்ள வேண்டும்.
3. உடல் எடை குறைக்க
நினைப்பவர்களுக்கு திரிபலா சூரணமும் மிக நல்ல ஒரு கூடுதல் மூலிகை மருந்து.
4. மிகத் தீவிரமாக
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குக்குலு மாத்திரைகளையும் தினமும் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
5. உடல் எடை குறைக்க
நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் சாப்பாடு சாப்பிடாமல் இருக்கக் கூடாது. கண்டிப்பாக
3 வேளையும் பசியெடுக்கும் போது சாப்பிட வேண்டும். ஆனால் சாப்பாட்டில் கார்போஹைடிரேட்
அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு
நீங்கள் ஒரு வேளை உணவாக இதற்கு முன்னால் ஒரு அரை கிலோ அளவு சாப்பிட்டு கொண்டிருந்தீர்கள்
என்றால் அந்த அரை கிலோவில் அரிசி சாதத்தின் அளவு 300கிராமாக இருக்கக் கூடிய பட்சத்தில்,
இனிமேல் நீங்கள் எடுக்கப் போகும் உணவில் அரிசி சாதத்தின் அளவு 150கிராமிற்கு மேல் இருக்கக்
கூடாது, மீத பங்கு பழங்களாகவும், காய்கறிகளாகவும், மாமிசமாகவும் இருக்கலாம்.
6. உடல் எடை குறைக்க
நினைப்பவர்கள் கண்டிப்பாக தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். RO,
Mineral Water, Cane Water போன்ற தண்ணீர் வகைகளை குடிக்கவே கூடாது.
மேற்சொன்ன அனைத்தையும்
ஒருவர் தீவிரமாக பின்பற்றி வந்தால் அவருடைய உடல் எடையை பொறுத்து 3-6 மாதங்களுக்குள்
கண்டிப்பாக உடல் எடை குறைந்து அழகான தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் பெறலாம்.
கெட்ட கொழுப்பு அறிகுறிகள், கெட்ட கொழுப்பு குறைய, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க, கொலஸ்ட்ரால் பரிசோதனை, நல்ல கொழுப்பு எது, நல்ல கொழுப்பு உணவுகள்
உடல் மெலிய பாட்டி வைத்தியம், இடுப்பு சதை குறைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம்
தொப்பை குறைய முத்திரை
தொப்பை குறைய யோகாசனம்
தொப்பை குறைய சீரகம்
தொப்பை குறைய இயற்கை வைத்தியம், தொப்பை குறைய பாட்டி வைத்தியம், தொப்பை குறைய உணவு முறைகள், தொப்பை குறைய மூலிகை மருத்துவம்,
கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்
கொழுப்பை கரைக்கும் மூலிகை
கொழுப்பு கட்டி, கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய மருந்து, கொழுப்பு கட்டி அறிகுறிகள், கொழுப்பு கட்டி கரைப்பது எப்படி, கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை, கொழுப்பு கட்டி வர காரணம், கொழுப்பு கட்டியை கரைப்பது எப்படி
எடை குறைப்பு அறுவை சிகிச்சை
எடை குறைப்பு இரகசியங்கள்
உடல் எடை குறைக்க பாட்டி வைத்தியம், உடல் எடை குறைய பாட்டி வைத்தியம், உடல் எடை குறைக்கும் பானம், உடல் எடையை குறைக்கும் பானம்
உடல் பருமனை குறைக்க வழிகள், உடல் பருமன் குறைய என்ன வழி,
தொப்பை கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க, தொப்பை குறைய பாட்டி வைத்தியம், வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க, அடிவயிறு கொழுப்பு குறைய
உடல் எடை குறைய உடற்பயிற்சி, எடை குறைப்பு உடற்பயிற்சி, உடல் எடை குறைக்க உடற்பயிற்சி, உடல் எடை குறைக்கும் உடற்பயிற்சி, உடல் எடை குறைக்கும் உடற்பயிற்சிகள்
உடல் எடை குறைய குடம்புளி
உடல் எடை குறைய கொய்யா இலை
உடல் எடை குறைய கற்றாழை
உடல் எடை குறைய கடுக்காய்
உடல் எடை குறைய கொள்ளு
உடல் எடை குறைய ஆளி விதை, உடல் எடையை குறைக்கும் ஆளி விதை
உடல் எடை குறைய டிப்ஸ், உடல் பருமன் குறைய டிப்ஸ், எடையை குறைக்க டிப்ஸ்
உடல் எடையை விரைவில் குறைக்க, உடல் எடையை விரைவாக குறைக்க, உடல் எடை விரைவில் குறைய,
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி, உடற்பயிற்சி இல்லாமல் எடை எப்படி குறைக்க
உடல் எடை குறைய தேன்
உடல் எடை குறைய சீரகம்
உடல் எடை குறைய மருத்துவம், உடல் எடை குறைய வீட்டு மருத்துவம், உடல் எடை குறைக்க மருத்துவம், உடல் எடையை குறைக்க மருத்துவம், உடல் எடையை குறைக்கும் மருத்துவம், உடல் எடை குறைய இயற்கை மருத்துவம், உடல் எடை குறைய மூலிகை மருத்துவம்
உடல் எடை குறைய ஓமம்
எடை குறைய முத்திரை, உடல் எடை குறைய முத்திரைகள்