உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்
பிரண்டை உப்பு Pirandai Salt
அதிக உடல் எடை நம் அழகை எவ்வாறு பாதிக்கிறது…
அழகு பற்றிய விழிப்பு உணர்வு சிறியவர் முதல், பெரியவர் வரை அனைவருக்கும் நிறையவே உள்ளது. அழகிய முகம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடல் அமைப்பும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள்.
முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கூட, அவரது உடலானது அவரது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல், மிக அதிக எடையுடன் காணப்பட்டால், அவரது முகஅழகு யாராலும் பாராட்டப் படுவதில்லை.
எனவே ஒரு முழுமையான அழகு என்பது முகத்தோற்றத்தில் மட்டுமில்லாமல் உடல் அழகையும் பொறுத்தது ஆகும்.
எனவே அழகான உடலழகைப் பெறுவதற்கு வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையை வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளால் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்து, அழகான உடல் அழகைப் பெறலாம்.
அதிக உடல் எடை நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது…
உடல் எடைக் குறைவை விட உடல் எடை கூடுதலும் உடல் பருமனும் அதிக அளவில் மரணத்துக்குக் காரணமாய் இருப்பதோடு பின்வரும் தொற்றா நோய் கூட்டத்தையும் உருவாக்குகின்றன: இதயம் தொடர்பான நோய்கள் (மாரடைப்பு, பக்கவாதம்), நீரழிவு, தசை எலும்புக் கோளாறுகள் (கீல்வாதம்), சிலவகையான புற்றுநோய்கள் (மார்பு, கர்ப்பப்பை, கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல்).
குழந்தை பருவத்திலிருந்தே உடல் எடை கூடுவதினால் ஏற்படும் பிரச்சினைகள்…
முன்பெல்லாம் பெரியவர்களிடம் மட்டும் காணப்பட்ட தொப்பையை இப்போது குழந்தைகளிடம் அதிகமாகவே பார்க்க முடிகிறது. குழந்தைப்பருவ உடல்பருமன், சுவாசப் பிரச்சினைகளையும், எலும்புமுறிவையும், அதிக ரத்த அழுத்தம், உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும். பிற்காலத்தில் உடல்பருமன், இதயநோய்கள், நீரிழிவு ஆகியவை ஊனங்களையும் அகால மரணங்களையும் உண்டாக்கலாம்.
இதைத்தவிர முன்பெல்லாம் பெண்குழந்தைகள் 15வயதில் தான் வயதிற்கு வருவார்கள், ஆனால் இப்போதெல்லாம் 10 வயதிலேயே பெண்குழந்தைகள் வயதிற்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.
உடல் எடை கூடுதல், உடல் பருமன் மற்றும் அதனோடு தொடர்புடைய தொற்றா நோய்கள் எல்லாம் தடுக்கக் கூடியவையே. ஆரோக்கியமான உணவு மற்றும் தொடர் உடல் செயல்பாடுகளின் மூலம் மட்டுமே உடல் எடை கூடுவதை தடுக்க முடியும்.
உடல் எடை கூடுவதினால் ஏற்படும் பிரச்சினைகள் பெண்களையே அதிகமாக பாதிக்கின்றன…
அதிக உடல் எடையும், உடல் பருமனும் இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சினைகளாக உருவாகி வருகின்றன. இந்தியக் குடும்ப சுகாதார மதிப்பிடல் படி 14% பெண்கள் (15-49 வயது) மற்றும் 9 % ஆண்கள் (15-49 வயது) 2005-06-ல் அதிக எடையுடன் அல்லது உடல்பருமனுடன் இருந்தனர். 2016-ல் இந்தக் கணக்கு தற்போது பலமடங்காக பெருகி இருக்கிறது. கிராமப் புறத்தை விட நகர்ப்புறத்தில் இது அதிகம். வேளாண்மை அல்லது உடல் உழைப்பு உடையவர்கள் நடுவில் உடல் பருமனுக்கான வாய்ப்பு குறைவு…
பெண்களின்
உடல் எடை அதிகரிப்பில் ஹார்மோன்களின் பங்கு…
பெண்களின் உடல்
எடை
அதிகரிப்பதற்கு ஹார்மோன்களே காரணமாகும் அவற்றில் சில:
1. தைராய்டு ஹார்மோன்:
தைராய்டு குறைபாடு குறிப்பாக பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு பொறுப்பாகும்.
பொதுவான அறிகுறிகள் சோர்வு, தாங்க
முடியாத குளிர்
நிலை,
உலர்ந்த சருமம்
மற்றும் மலச்சிக்கல் இவற்றால் உடல்
எடையை
அதிகரிக்கும். எடை
அதிகரிப்புக்கு உடலில்
குறையும். வளர்சிதை மாற்றத்தின் விகிதமும் ஒரு
காரணமாக உள்ளது.
2. ஈஸ்ட்ரோஜென்:
ஈஸ்ட்ரோஜென் பெண்களின் செக்ஸ்
ஹார்மோனாக உள்ளது.
மாதவிடாயின் போது,
ஈஸ்ட்ரோஜனின் அளவு குறிப்பாக குடலைச் சுற்றி
இருப்பதால், இது
உடல்
எடையை
அதிகரிக்கிறது.
மேலும்
கொழுப்பு செல்கள் கலோரிகளை கொழுப்பாக மாற்றுகிறது இதற்கு
ஈஸ்ட்ரோஜன் மற்றொரு ஆதாரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலும் உடல்
பருமன்
ஏற்படலாம்.
3. ப்ரோஜெஸ்டெரோன்:
மாதவிடாயின் போது,
உடலில்
புரோஜெஸ்ட்டிரோன் நிலை
குறைவாகக் காணப்படுகிறது. இந்த ஹார்மோன் குறைவான நிலையிலுள்ளதால் உண்மையில் இது
உடல்
எடையை
அதிகப்படுத்துகிறது.
இதனால்
பெண்கள் உடலில்
தண்ணீர் அதிகமாக இருத்தல் மற்றும் வீக்கத்தினையும் ஏற்படுத்துகிறது. இது
போன்ற
சமயத்தில் உங்கள்
உடலை
நீங்கள் கனமாக
உணருவீர்கள்.
4. டெஸ்டோஸ்டிரோன்:
சில பெண்கள் பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறியான (பி.சி.ஓ.எஸ்)
ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் இது
எடை
அதிகரிப்பு, மாதவிடாய் கோளாறுகள், முகப்பரு மற்றும் கருவுறாமைக்கு வழிவகுக்கிறது, மேலும்
இதனால்
டெஸ்டோஸ்டிரோனின் அளவும்,
அதிகரிக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் பெண்களின் தசைக்கு முக்கிய பொறுப்பாகும்.
மெனோபாஸ் காலத்தில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு
குறைகிறது, இதன்
விளைவாக இது
உடல்எடையை அதிகரித்து, வளர்சிதை மாற்ற
விகிதத்தை, குறைக்கிறது.
5. இன்சுலின்
ஹார்மோன் இன்சுலினை கணையத்தில் உள்ள
பீட்டா
செல்கள் மூலம்
உற்பத்தி செய்யப்படுகிறது. இன்சுலின் உடலில்
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் கட்டுப்பாட்டுட்ன் இருப்பதற்கு பொறுப்பாக உள்ளது.
இன்சுலின் உடலில்
குளுக்கோஸை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதிக
அளவு
இன்சுலின் கருவுறாமைக்கு வழிவகுக்கிறது. இரத்தமானது அதிகரிக்கவும், உடல்
எடையை
அதிகரிக்கவும் இன்சுலினுக்கு முக்கிய பங்களிக்கிறது.
6. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அல்லது
கார்டிசோல்:
எடை
அதிகரிப்புக்கு மற்றொரு காரணம்,
மன
அழுத்தம் ஹார்மோன், அல்லது
கார்டிசோலாக உள்ளது.
கார்டிசோல் உயர்
அழுத்தத்தை அதிகரித்து பசி
மற்றும் அடுத்தடுத்த எடை
அதிகரிப்பை
ஏற்படுத்துகிறது. மன
அழுத்தம் மற்றும் தூக்கம் இல்லாமை, இரத்தத்தில் அதிக
கார்டிசோல் போன்றவை இந்த
நிலைக்கு காரணங்களாக உள்ளன.
எனவே
இது
கார்டிசோல் உற்பத்தியை அதிகரித்து செலுத்தும் ஒரு
தீவிர
நிலையை
உருவாகிறது.
பெண்கள் உடல்
எடையினை எளிதாக
குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த
வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு
பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள்
எடையை
குறைக்க உதவும்!
உடல்
எடையைக் குறைப்பதற்கான உண்மையான வழிகள்:
நீங்கள் உண்மையிலேயே உங்கள் உடல்
எடையை குறைக்க விரும்புகிறீர்களா?
அல்லது மற்றவர்கள் சொன்னார்கள்
என்பதற்காக உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்து
கொள்ளுங்கள்…
மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக
மட்டும் உங்களுடைய முயற்சியை ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களால் எப்போதுமே உடல்
எடையைக் குறைக்க முடியாது…
ஏனென்றால் உடல் குறைப்பு முயற்சி
என்பது ஒரு தவம் போல…
எல்லோருக்கும் அங்கே வரம்
கிடைப்பதில்லை…
நிறைய பேர் பாதி வழியிலேயே முயற்சியை
கைவிட்டு திரும்பி விடுகிறார்கள்…
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களின்
முதல் எண்ணமே இந்த முயற்சியை ஆரம்பித்த உடனேயே (சினிமாவில் ஒரே பாட்டில் ஒரு ஏழை
பணக்காரன் ஆவது போல) ஒரு மாதத்திலேயே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது போல
ஆரம்பிப்பார்கள்.
முதலில் நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் பல வருடங்களாக கூட்டிய எடையை கண்டிப்பாக ஒரே
மாதத்தில் குறைக்க சாத்தியமே கிடையாது, அப்படி சாத்தியப்பட்டாலும் உங்கள் கொழுப்பு
குறையும் வேகத்தில் உங்கள் தோல் சுருங்காது, அப்படி ஒருவேளை ஒரே மாதத்தில் எடை
குறைந்தால் தோல் எல்லாம் வயதானவர்களுக்கு போல் சுருங்கி தொங்க ஆரம்பித்து விடும்.
எனவே உடல் எடையை குறைக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள் முதலில் அவசரப்படாதீர்கள், நிதானமாக இருங்கள். உங்கள் எடை
குறைப்பிற்கான கால அளவை குறைந்தது 6மாத காலமாக நிர்ணயம் செய்யுங்கள்.
போலியான எடை குறைப்பு
நிறுவனங்களையும், எடைகுறைப்பு மருந்துகளையும் நம்பாதீர்கள்…
உடல் எடை என்பது நம் உடலில் இருக்கும்
கூடுதல் நீரினாலும், அதிகப்படியான கொழுப்பினாலும் ஆனது.
இதில் நம் உடலில் உள்ள கூடுதல் நீரை
வெளியேற்றுவதற்கு வெறும் 10நாட்கள் மட்டும் கூட போதுமானது, நமது உடலில் உள்ள
கொழுப்பை வெளியேற்றத்தான் அதிக நாட்கள் பிடிக்கும்…
மேற்கண்ட நிறுவனங்களும் மருந்துகளும்
உங்கள் உடம்பின் நீரை மட்டுமே வெளியேற்றிவிட்டு, நாங்கள் ஒரு வாரத்தில் 5கிலோ
குறைத்தோம், 10கிலோ குறைத்தோம் என்று கூறுவார்கள்…
ஆனால் அதற்கு பிறகு எடை குறையவே
குறையாது…
உண்மையான எடை குறைப்பு என்பது நம்
உடலின் அதிகப்படியான கொழுப்பை முழுவதுமாக
வெளியேற்றுவது மட்டுமேயாகும்…
ஒரு சிலர் என்னுடைய தொப்பை மட்டும்
குறைய வேண்டும், என்னுடைய தொடை மட்டும் குறைய வேண்டும், என்னுடைய கை மேற்பகுதி
மட்டும் குண்டாக இருக்கிறது அதை மட்டும் குறைக்க வேண்டும், ஆனால் உடல்
குறையும்போது என்னுடைய கன்னம் மட்டும் குறையக் கூடாது என்பார்கள். (டெய்லரிடம்
துணியைக் கொடுத்து விட்டு என்னுடைய மேல்சட்டை இந்த அளவு, என்னுடைய கால்சட்டை இந்த
அளவு என்பது போல).
சரியான முறையில் உடல் எடை குறைப்பு
நடந்தால் நம் cheek bones கண்டிப்பாக வெளியே தெரியும், அது மட்டுமே உண்மையான உடல்
குறைப்பு.
உடல் எடை குறைய வேண்டும் என்று
நினைப்பவர்கள் ஒரே ஒரு மருந்து மட்டுமே நம் உடல் எடை குறைய உதவிடும் என்ற
நம்பிக்கையை கை விட வேண்டும். மருந்துகள் உங்கள் எடை குறைப்பிற்கு உதவ மட்டுமே
செய்யும், அதற்கு தேவையான மற்ற அடிப்படை தேவைகளை நாம்தான் நம் உடலுக்கு செய்ய
வேண்டும்.
அடிப்படையில் சர்க்கரை நோய்க்கும்,
உடல் எடை கூடுவதற்குமான காரணம் நாம் சாப்பிடும் சாப்பாட்டை அப்படியே விழுங்கி
கூடுதலாக சாப்பிடும்போதே தண்ணீரும் குடிப்பதாகும். இந்த கெட்ட பழக்கத்தை மாற்றாமல்
நீங்கள் எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கவும் முடியாது,
சர்க்கரை நோயை சரி செய்யவும் முடியாது.
குடிக்கின்ற நீரும் எடை குறைப்பில்
முக்கியமானதாகும். இயற்கை வழியில் கிடைக்கின்ற குடிநீர் மட்டுமே உங்கள்
முயற்சிக்கு உதவும், கேன் தண்ணீர், RO தண்ணீர் இவை அனைத்தையும் கண்டிப்பாக
தவிருங்கள். வேறு வழியே என்றால் மட்டும் RO தண்ணீரை மண்பானை மற்றும் செம்பு
பானையில் ஊற்றி வைத்திருந்து விட்டு அதன் பிறகு பயன்படுத்துங்கள்.
சாப்பாடு சாப்பிடும் முறையை
கண்டிப்பாக மாற்றி விட்டு அடுத்தபடியாக நாம் மாற்ற வேண்டியது நம் உணவு முறையை,
ஏனெனில் சற்று யோசித்து பார்த்தால் நாம் சாப்பிடும் உணவில் வெறும் மாவுச்சத்தும்
புரோட்டினும் மட்டுமே உள்ளது.
ஆனால் தினமும் நம் சாப்பாட்டில்
4சத்துக்கள் இருக்க வேண்டும். 1.மாவுச்சத்து, 2.புரோட்டின்,
3.காரச்சத்து(Alakaline) 4.நார்ச்சத்து(Fibre)
மேற்கண்ட நான்கு சத்தில் நம் உடல்
எடையை குறைக்க தேவையான சத்து காரச்சத்தும், நார்ச்சத்துமே. ஆனால் அவை இரண்டையுமே
நாம் நம் உணவில் சேர்ப்பதே இல்லை அல்லது தேவைக்கும் மிகக்குறைவான அளவே
சேர்க்கிறோம். இவற்றை தேவையான அளவிற்கு சேர்க்காமல் நம்மால் எப்போதுமே உடல் எடையை
குறைக்க முடியாது.
ஒரு நாளைக்கு 10கிலோமீட்டர் வாக்கிங்
போவது, ஜிம்மில் போய் Workout செய்வது எல்லாமுமே உங்கள் உடலை வலுப்படுத்தவும்,
தற்காலிகமாக உடலை இறுக்கி வைத்திருக்க மட்டுமே உதவும்.
அடிப்படையான விஷயங்களை follow-up
செய்து விட்டு பிறகு ஜிம் அல்லது வாக்கிங் போனால் மட்டுமே பிரயோஜனப்படும்.
உடல் எடை குறைப்பிற்கு முயற்சி செய்ய
ஆரம்பித்து விட்டாலே சிறுதானியங்களுக்கு கண்டிப்பாக மாறி விடுங்கள். அடப்போங்க சார்
சிறுதானியம் என்றாலே வீட்டில் களியும் கூழும்தான் செய்ய முடியும் என்பவர்கள் விகடன்
பிரசுரத்தில் வெளியான “பசியாற்றும் பாரம்பரியம்” என்ற புத்தகத்தை வாங்கினால், ஒரு மாதத்தில்
90 வேளை சாப்பாடு சாப்பிடுகிறோம் என்றால் 90 வேளையும் விதவிதமான சுவையான ஆரோக்கியமான
உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்.
உடல் எடையை குறைக்கின்ற ஆர்வத்தில்
ஸ்டிராய்ட் மருந்துகளையும், கெமிக்கல் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்,
அவை உடனடியாக தீர்வை கொண்டு வந்தாலும் அவற்றின் பக்க விளைவுகள் என்றென்றைக்கும்
நம் உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் எப்போதும் இயற்கையான பொருட்களை
மட்டுமே பயன்படுத்துங்கள்.
மேற்கண்ட அடிப்படையான விஷயங்களை
மாற்றிவிட்டு அதற்கு பிறகு நீங்கள் சாப்பிடும் மருந்துகள் முழுமையாக உங்கள் உடலில்
வேலை பார்த்து கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும்.
உணவுகள், உணவு சாப்பிடும் முறை,
இயற்கையான உடல் குறைப்பு பொருட்கள் இவை அனைத்தையும் சரியாகச் செய்தாலும் சூரிய
வெளிச்சமும், அளவான உடற்பயிற்சியும் கண்டிப்பாக தேவை. மேற்கண்ட அனைத்து
விஷயங்களையும் சரியான முறையில் பின்பற்றினால் உடல் எடை குறைவது நிச்சயம்.
உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147
உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்
உடல் எடை குறைய Home Page