உடல் எடை குறைக்க பாட்டி வைத்தியம், உடல் எடை குறைய பாட்டி வைத்தியம், உடல் எடை குறைக்கும் பானம், உடல் எடையை குறைக்கும் பானம்

 உடல் எடை குறைய பாட்டி வைத்தியம்

 

உடல் எடையை வீட்டிலேயே குறைக்கும் சில பானங்கள்

உடல் எடையை குறைக்க நீங்கள் சிலவகை பானங்களை பின்பற்றினாலே 

நன்மையை பெற முடியும். இந்த பானங்கள் உங்க வளர்சிதை மாற்றத்தை 

அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அது எப்படி என்பதை பார்க்கலாம். 

திருமணத்திற்கு பிறகோ அல்லது ஒரு குழந்தையை பெற்ற பிறகோ பெண்களின் உடல் எடையானது அதிகரிக்க ஆரம்பித்து விடும். பெண்கள் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஏகப்பட்ட முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு பலன் கிடைப்பதில்லை. தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. வீட்டு வேலைகளுக்கு இடையில் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அவர்களால் முடிவதில்லை. எனவே தான் அவர்களுக்கு எளிய வகையில் உடல் எடையை குறைக்க சில வீட்டு பான முறைகளை இங்கே வழங்குகிறோம். இந்த எடை இழப்பு பானங்கள் உங்கள் எடையை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான எடை இழப்பு என்பது படிப்படியான செயல்முறையாகும்.

 30 நாட்களில் உடல் எடையை எல்லாம் குறைக்க முடியாது. ஆனால் உங்களுடைய உடல் எடையில் படிப்படியான மாற்றத்தை கொண்டு வர முடியும். எனவே உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க இந்த எளிய வழி முறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

​அன்னாசி பழச்சாறு

அன்னாசி பழச்சாற்றில் புரோமலைன் என்ற பொருள் காணப்படுகிறது. இது ஜீரண சக்திக்கு உதவுகிறது. அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு வீக்கத்தையும் குறைக்கிறது. அன்னாசி பழச்சாறு பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகளை எளிதாக்கும். இது வீக்கம் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை குறைக்கும். இந்த சாற்றில் சிலோன் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது. இது பசியை அடக்க உதவுகிறது, இரத்த குளுக்கோஸைக் குறைக்கிறது மற்றும் லிப்பிட் அளவை மேம்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

  • 11/2 கப் அன்னாசிபழம்
  • 21/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
  • 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்
  • கருப்பு உப்பு (சுவைக்கேற்ப)

செய்முறை

அன்னாசிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பிளண்டரில் போட்டுக் கொள்ளுங்கள். அதை நன்றாக அரையுங்கள்

இப்பொழுது அன்னாசி பழச்சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் இலவங்கப்பட்டை பொடி, லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலக்குங்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல சுவையை தரும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள், இது உங்களுக்கு நல்ல எடை இழப்பை கொடுக்கும்.

 

​வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய், எலுமிச்சைகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. இவை உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • 1 வெள்ளரிக்காய்
  • 1 லெமன் நறுக்கியது
  • 1 மீடியம் வடிவ திராட்சை பழங்கள்
  • 1கப் /250 மி. லி தண்ணீர்

தயாரிக்கும் முறை

வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் திராட்சைப் பழங்களையும் மிக்ஸியில் போட்டு அரையுங்கள். அதை நன்றாக ஸ்மூத்தாக அரையுங்கள். நன்கு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். தேவைப்பட்டால் மட்டும் இனிப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு சேர்க்காமல் குடிப்பது தான் அதிக பலன்களைத் தரும்.

 

​லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி டயாபெட்டிக் தன்மைகள் நிறையவே உள்ளன. இதில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. விட்டமின் சி உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது இரத்த நாளங்களுக்கு எதிர்ப்பு தன்மையை தருகிறது. எலும்பு பலவீனம் மற்றும் பற்கள் முறையற்று வளர்வதை தடுக்கிறது. தொற்று நோய்களுக்கு எதிராகவும் காயங்களை ஆற்றவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • 1/2 கிளாஸ் தண்ணீர்
  • 1 லெமன் ஜூஸ்
  • 2 பேஷன் பழ ஜூஸ்கள்
  • இனிப்பு (விரும்பினால்)

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் மற்றும் மாலையில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குடியுங்கள்.

 

​சூடான நீரை குடியுங்கள்

எடை இழப்பை பெற சூடான நீரை நீங்கள் குடித்து வரலாம். இது உங்க உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. எனவே உணவுக்கு முன்னும் பின்னும் தவறாமல் சுடுநீரை குடிக்கவும். சூடான நீர் உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது, இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். இதனால் உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. உணவு முடிந்த உடனேயே சூடான நீரை குடிக்க வேண்டாம்.

 

​மூலிகை டீ மற்றும் க்ரீன் டீ குடியுங்கள்

க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. மூலிகை டீயில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. க்ரீன் டீ உடலில் உள்ள நைட்ரஜன் கழிவுகளை மற்றும் நச்சுக்களை உடலிருந்து அகற்ற உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.

 

​பார்லி பானங்கள்

ஒரு கப் பார்லியில் 2 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்க வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இது நீங்கள் அதிகமாக உணவை எடுப்பதை தவிர்க்கிறது.

தேவையான பொருட்கள்

  • 1 கிளாஸ் தண்ணீர்
  • 1 கப் பார்லி
  • லெமன் ஜூஸ்
  • 1 டீ ஸ்பூன் வினிகர்
  • 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1 டீஸ்பூன் பட்டை பொடி

தயாரிக்கும் முறை

இதை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை படுக்கைக்கு முன்பு குடித்து வாருங்கள் உங்க உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும்.

​காப்பி

காப்பி உங்களுடைய பசியை அடக்கி உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. காபி உங்களுக்கு ஆற்றலை தருவதோடு கொழுப்பை எரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 1 -2 கப் வரை மற்றும் உடல் எடையை குறைக்க காபியை பருகி வரலாம். இது உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page