எடை குறைய முத்திரை, உடல் எடை குறைய முத்திரைகள்

 உடல் எடையை குறைக்கும் எளிமையான முத்திரைகள் 

 

இந்த முத்திரைகளைச் செய்தால் போதும், உடல் பருமன் உள்பட ஏராளமான நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

உடலில் தேவையான
  அளவிற்கும்  அதிகமாகக்  கொழுப்பு  சேர்வதால்  உடல் பருமன் உண்டாகிறது.  உடல் பருமன் அதிகரிப்பதால்  உடலில்  புற்று நோய்த்  திசுக்களை எதிர்த்துச் சண்டையிடும் ஒரு வகையான அணுக்கள் தேவையற்ற கொழுப்புகளால் அடைக்கப்பட்டு செயலற்றுப் போய்விடுகின்றன. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

உடல் பருமனாவதற்குக் காரணங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகள் பற்றிக் காண்போம். 

காரணங்கள் :

உடல் உழைப்பின்றி நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது.

தேவைக்கு அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வது.

ஈஸ்ட்ரோஜன், ப்ரோஸ்டெஸ்டின், ஸ்டிராய்ட், இன்சுலின் போன்றவற்றை எடுத்துக் கொள்வது.

பெண்கள் பருவமடையும் காலங்களிலும்,  மெனோபாஸ்  மற்றும்  கர்ப்ப காலங்களிலும்  ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகளால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தூக்கமின்மை, மன அழுத்தம், அதீத சிந்தனை, இரவு நீண்ட நேரம்  வரை  கண்விழிப்பது, நேரம்  தவறி  உண்பது, மது மற்றும் புகைப் பழக்கங்கள்.

பாதிப்புகள் :

நீரழிவு நோய், ஹைப்போ தைராய்ட், இனப்பெருக்க இயக்கக் குறைபாடு, மார்பக புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய், கீழ் வாதம், இரத்தக் கொதிப்பு, இடுப்பு வலி, மூட்டு வலி, இருதய நோய்கள், கருத்தரிக்காமல் இருப்பது போன்ற பல பாதிப்புகள் நேரிடும்.

 பி.எம்.ஐ அளவு :    

மாதம் ஒரு முறையேனும் உங்கள் பி.எம்.ஐ-யை சரி பார்த்துக்கொள்வது நல்லது. 

பி.எம்.ஐ : உயரம்(மீட்டர்)/ எடை (கிலோ கிராம்)

உங்கள் பி.எம்.ஐ அளவு ,

18 – 25 என்றால் = நார்மல்

25- 30 என்றால் = அதிக எடை

30 -35 என்றால் = உடல் பருமனின் முதல் கட்டம்

36- 40 என்றால் = உடல் பருமனின் இரண்டாம் கட்டம்

40-க்கு மேல் என்றால் – உடல் பருமனின் மூன்றாம் கட்டம்.

ஆரோக்கியமான உணவு முறைகள், சரியான வாழ்வியல் முறை மற்றும் உடற் பயிற்சி மிகவும் அவசியம். யோகா, நடைப்பயிற்சி, முத்திரைகள் நம் உடல் எடை குறைவதற்கு பெரும் அளவிற்கு கை கொடுக்கும்.

 

உடல் பருமன் குறைக்கும் முத்திரைகள் :

முதலில் முத்திரை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

நம் ஐந்து விரல்களும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.

1.      பெரு விரல் – நெருப்பு

2.      ஆள்காட்டி விரல்- காற்று

3.      நடு விரல் – ஆகாயம்

4.      மோதிர விரல் – மண்

5.      சுண்டு விரல் – நீர்

இவையனைத்தும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நம்  உடலில்  ஏற்படும் நோய்களை பொறுத்து, எந்த விரலைப் பிற விரல்களோடு இணைத்தால் நோய்கள் குணமாகும் என்பதுதான் முத்திரையின் அடிப்படை.

1.சின்முத்திரை

கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் மடக்காமல் நேராகவும், உள்ளங்கை மேலே பார்த்தது போலவும் இருக்க வேண்டும்.

இம்முத்திரை பிட்யூட்டரி, தைராய்டு, கணையம் ஆகிய உறுப்புகளைத் தூண்டுவதால் ஹார்மோன்கள்  சீராக  சுரக்கத்  துணை புரிகிறது.

 மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமின்மை, குழப்பம், கோபம், மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவை குறைந்து மனம் தெளிவு பெரும். உடல் தசைகள் வலுவடையும்.

 

2. வாயன் முத்திரை:

கட்டை விரல், ஆட்காட்டிவிரல், நடுவிரல் நுனிகள் மூன்றும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நேராகவும் இருக்க வேண்டும்.

இம்முத்திரை செரிமான கோளாறுகளைச் சரி செய்து, உடல் எடையைக்  குறையச்  செய்யும். உற்சாகம், எண்ணங்கள் மற்றும் உணர்வை மேம்படுத்தும்.

நரம்பு சோர்வு மற்றும் நரம்பு முறிவுக்குச் சிறந்த நிவாரணமாக அமைகின்றது.

தூக்கமின்மை மற்றும் அதீத தூக்கம் இவற்றைச் சமன்படுத்தி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது. அதிகமாகத் தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது  போன்றவற்றைக்  குணப்படுத்துகின்றது.

மாதவிடாய்க் காலங்களில் அதிகமான உதிரப்போக்கைக்  கட்டுப்படுத்துகிறது.

 

3. சூரிய முத்திரை :

கட்டைவிரலின் அடிப்பாகத்தில், மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும். பின்பு கட்டை விரலினால், மோதிர விரலை மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது. தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, உடல் வளர் சிதையை  அதிகரிக்கின்றது.  செரிமான மண்டலங்கள்  சீராக  இயங்குவதற்குத் துணை புரிகிறது.

அத்துடன் உடல் எடை அதிகரிக்கக் காரணமாக இருக்கும், ஹைப்போ  தைராய்டைச் சரி செய்கிறது.

கருவுற்ற பெண்கள், கருத்தரிக்கத் திட்டமிடுபவர்கள் மற்றும் மாதவிடாய்க் காலங்களில் இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.   

 

 4.கபா முத்திரை

கட்டைவிரலின் அடிப்பாகத்தில், மோதிர விரலின் நுனியையும், சுண்டு விரல் நுனியையும் வைக்க வேண்டும். பின்பு கட்டை விரலினால், மோதிரம் மற்றும் சுண்டு விரல்கள் மீது மிதமாக அழுத்தம் தரவேண்டும்.

உடல் பருமன் குறையும்.

வியர்வை நன்கு வெளியேறும்.

தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் வலிமையை அதிகரிக்கின்றது.

*சின்முத்திரையைத் தவிர, மற்ற மூன்று முத்திரைகளை வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின்பே செய்ய வேண்டும். கருவுற்ற பெண்கள், ஹைப்பர்  தைராய்டு  இருப்பவர்கள்  இம்முத்திரைகளைச்  செய்வதைத் தவிர்க்கலாம்.

இந்த முத்திரைகளை 20-30 நிமிடங்கள் செய்யவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொன்றாகக் கூட செய்யலாம். அமர்ந்து கொண்டு செய்யுங்கள்.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page