Posts

Showing posts with the label சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் சிறுநீர்

Image
  சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா சிறுநீரக பாதிப்பு என்று அர்த்தம்...   உடலில் இரத்த ஓட்டம், உடலின் கன அளவு (body volume), இரத்த அழுத்தம் இவற்றை சீராக வைத்துக்கொள்ளவும், இரத்த அணுக்கள் உற்பத்தியிலும், அசுத்தங்களை நீக்கவும் சிறுநீரகம் உதவுகிறது. மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அத்தனையும் நடைபெற வேண்டும். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் தங்கள் சிறுநீரகங்கள்மேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.   இன்சுலின் உற்பத்தி நீரிழிவின் வகைகள் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் இருக்கும், வகை 1 நீரிழிவு பாதிப்புள்ளோரில் 30 சதவீதத்தினரும், வகை 2 என்ற, போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நீரிழிவு பாதிப்புள்ளோரில் 10 முதல் 40 சதவீதத்தினரும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்படுகிறார்கள்.   சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் சிறுநீரக கோளாறு ஏற்படுமாயின் உடல் எடை கூடும்; கணுக்கால் வீக்கம் ஏற்படும். இரவில் அதிகமுறை சிறுநீர் கழிக்க நேரிடும். இரத்த அழுத்தம் அதிகமாக உயரும். உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்தம

பெண்களுக்கு சர்க்கரை நோய்

Image
  பெண்களும் சர்க்கரை நோயும்!   ஆணும் பெண்ணும் சமம் என்ற காலம் மாறி ஆணை விட எல்லாத் துறைகளிலும் பெண்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலை உருவாகி வருகிறது. பெண்களின் உடற்கூறு அமைப்பு மற்றும் அகச்சுரப்பியியல் மாற்றங்கள், உடலியல் மாற்றங்கள் ஆண்களை விட மாறுபட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழ் பண்பாட்டின்படி ஒரு குடும்பத்தில் ஆண்களின் பங்களிப்பை விட பெண்களின் பங்களிப்பே அதிகம். தந்தையின் இழப்பை விட தாயின் இழப்பில் குடும்பத்திற்கு அதிகம் பாதிப்பு வருகிறது. சர்க்கரை நோய் பெண்களை பலநிலைகளில் பாதிக்கிறது. குழந்தை பருவத்தில் மற்றும் பதின்ம வயதுகளில் 'டைப் 1' சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அன்றாடம் இன்சுலின் ஊசி போடுவது பெண்களுக்கு சற்று சிரமம்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களின் வளர்பருவத்தில் மாதவிடாய் கோளாறுகள், இரத்தசர்க்கரையின் அளவில் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதனால் இன்சுலின் தேவையிலும் கூடுதல் மற்றும் குறைவு ஏற்படலாம். 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோடு நோயை வெற்றிகொள்ள வேண்டும். இன்சுலின் தினமும் எடுத்துக் கொண்டால், அவர்களும் சராசரி பெண்களைப் போல திரும