உடல் எடை குறைய குடம்புளி

 உடல் எடை வேகமா குறைய கொடாம் புளியை இப்படி ட்ரை பண்ணுங்க, 

சீக்கிரம் ஒல்லியாயிடுவீங்க!

 

உடல் எடை குறைவதற்கு பலவிதமான டயட் வகைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அவை எல்லாமே உண்மையிலேயே பலன் தருவதில்லை.


பலரும் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குக்குள் வைக்க தவறிவிடுகிறார்கள். அதிகப்படியான உடல் பருமனை அடையும் போது தான் தீவிரம் உணர்ந்து உடல் எடையை குறைக்க படாதபாடு படுகிறார்கள். பலரும் சொல்லும் பல டயட்டையும் பின் தொடர்ந்தாலும் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் உடல் எடை குறையாமல் கூடி கொண்டு செல்கிறது என்று சொல்பவர்களே அதிகம். சரியான திட்டமிட்ட உணவு முறை, உடல் உழைப்பு என்பவற்றோடு இப்போது குறிப்பிடப்படும் பானம் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இவற்றில் ஒன்று உடல் எடை குறைப்பில் சிறப்பாக உதவுகிறது. அதுதான் கொடாம்புளி பானம் ஆகும்.


கொடாம்புளி

ஆறுவகை சுவையில் முக்கியமானது புளிப்பு. உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சைக்கு மாற்றாக புளியைதான் அதிகம் பயன்படுத்துகிறோம். புளியைக் காட்டிலும் அதிக மகத்துவம் கொண்டது கொடாம்புளி.

கொடாம்புளி மிதமான புளிப்புச்சுவை கொண்டது. இவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் புளியைக் காட்டிலும் அதிக மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. இதை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தாலும் இன்று வரை கேரள மக்கள் இந்த வகை புளியைத்தான் கொண்டிருக்கிறார்கள். விளைச்சல் அதிகமில்லாத இந்த புளி மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும். நாட்டு மருந்துகடைகளில் இவை கிடைக்கும். இந்த கொடாம்புளி தரும் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாமா?

​கொடாம்புளி மருத்துவ குணங்கள்

கொடாம்புளி மருத்துவ புளி என்று அழைக்கப்படுகிறது. இதில் 30% அளவு ஹைட்ராக்ஸி சிட்ரிக் ஆசிட் உள்ளது. இவை பல ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். இதயப்பாதிப்பு நேராமல் காக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிக புளி சேர்க்ககூடாது .

ஆனால் இந்த கொடாம்புளி உபாதையை அதிகரிக்காது மாறாக செரிமானத்துக்கு உதவும். நீரிழிவு, ஆர்த்ரைட்டீஸ், வீக்கம் இருக்கும் இடங்களில் பற்று போட என பலவிதமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் தருகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் வயிற்றுபோக்கை குணப்படுத்த கொடாம்புளி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கொடாம்புளி ஆயுர்வேத மருந்து.

​உடல் எடை குறைய

கொடாம்புளியை சிறு எலுமிச்சை அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் ஊறவிடவேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேர்த்தால் இரத்தம் உறைதல் தொந்தரவு பிரச்சனை ஏற்படும் என்பதால் அளவுக்கு மீறி பயன்படுத்த வேண்டாம். மறுநாள் ஒரு டம்ளர் கொடாம்புளி நீருக்கு மூன்று டம்ளர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இறக்கவும்.

ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் காலை உணவுக்கு முன் ஒரு டம்ளர் நீரை எடுத்து குடிக்க வேண்டும். மதிய உணவு மற்றும் இரவு நேர உணவுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். தினமும் தவறாமால் மூன்று வேளையும் மூன்று டம்ளராக குடித்து வர வேண்டும். தினமும் தவறாமல் குடிக்க வேண்டும்.

​எப்படி குறைகிறது

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வைப்பதோடு கொழுப்புகளை உடலிலும் தங்காமல் வெளியேற்றுகிறது. உடலில் எந்த இடத்தில் கொழுப்பு இருந்தாலும் அதை வெளியேற்றும் குறிப்பாக இடுப்பு, தொடை, வயிறு, புட்டம் பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்கும்.

எடை குறைப்பில் இந்த புளி சிறப்பான பலன்களை அளிக்க கூடும் என்கிறார்கள். எடை குறைப்புக்கு பயன்படுத்தப்படும் ஆய்வு ஒன்றில் இவை நிறைவான பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொடாம்புளி சாறுகளை பசி குறைக்க பயன்படுத்துகிறார்கள். இந்த நீரை குடிக்கும் போதே பசி அதிகமாகும் பிரச்சனையை குறைக்கும். ஹார்மோனை சமன்படுத்துவதால் அதிகமாக பசி உணர்வு எடுக்காது.

உடல் சூட்டையும் தவிர்க்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும் என்பதால் ஆரோக்கியமான உடல் குறைப்பு சாத்தியமே.

​உணவுகளிலும் கவனம்

இந்த கொடாம்புளி பானம் உங்கள் உடல் எடையை குறைக்க நிச்சயம் உதவும். அதே நேரம் நீங்கள் உங்கள் உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். இந்த பானம் குடிக்கும் போது உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை குறைப்புக்கு முயற்சிக்கும் போது போதுமான உறக்கம், திட்டமிட்ட உணவு, உடல் உழைப்பு போன்றவையும் இணைந்தால் வெகு சீக்கிரம் உடல் எடை குறையும். கொடாம்புளியை கொண்டு உடல் எடை குறைப்பில் ஈடுபடும் போது பலன் நிச்சயமாக கிடைக்கும். நாட்டு மருந்துகடைகளில் இவை கிடைக்கும். வாங்கி பயன்படுத்துங்கள்.

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page