உடல் எடை குறைய கொள்ளு

 ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? 

அதற்கு கொள்ளு தானியத்தை இந்த மாதிரி பயன்படுத்துங்க...

 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு நாம் நமக்கு பிடித்த பல வகையான உணவுகளை சாப்பிடாமல் மொத்தமாக ஒதுக்கி விடுவோம். மேலும், பல வகையான கடினமான பயிற்சிகளையும் செய்து உடல் எடை குறைய வேண்டும் என போராடுவோம். ஆனால், இதில் அவ்வளவும் பெரிய அளவில் பலன் கிடைக்காமல் இருக்கும்.

ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைக்க, கொள்ளு ஒன்றே போதுமே..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க... பிறகு எப்படித்தான் உடல் எடையை குறைப்பது என்று கேட்டால், அதற்கு மிக சிறந்த வழி ஒன்று உள்ளது. அது தான், "கொள்ளு". தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என உணவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். எப்படி என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

 

அபரிமித வளர்ச்சியா..?

உடல் பருமன் கூடியவர்கள் பல்வேறு முறையில் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுவார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற ஒரு சில முறைகள் தான் தவறாக இருக்கிறது. எடையை குறைக்க தேவையற்ற டயட் முறை மிக ஆபத்தானதாம். எனவே, உடலின் அதிக எடையை குறைக்க எளிதாக நாம் வழி செய்யலாம்.

 

அற்புத குணம் கொண்ட கொள்ளு...!

இந்த கொள்ளு" ஒரு சிறுதானிய வகையை சார்ந்த உணவு பொருளாகும். பெரும்பாலும் இது குதிரைக்கு மிகவும் பிடித்த உணவாகும். இப்போதெல்லாம் சிறுதானிய வகை உணவுகளே அதிக பெயரால் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஏனெனில், இதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

 

ஒரே மாதத்தில் 5 கிலோ..!

இந்த கொள்ளுவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் உள்ளன. குறிப்பாக

புரதம்-22%

நார்சத்து 5.3%

கால்சியம்-287 mg

பாஸ்பரஸ்-311 mg

இரும்புசத்து-6.77 mg

வைட்டமின்கள் தாதுக்கள் இப்படி பல நலன்கள் இதில் நிறைந்துள்ளது.

 

கொள்ளு ரசம்..!

இந்த கொள்ளு ரசத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதனை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தாலே உடல் எடையை குறைத்து விடலாம்.

தேவையனவை :-

சீரகம் 1 ஸ்பூன்

கொள்ளு 1/2 கப்

தனியா 1/2 spoon

மிளகு 1 ஸ்பூன்

பூண்டு 5

புளி தண்ணீர் 1/4 கப்

 

செய்முறை :-

கொள்ளு ரசம் தயாரிக்க, முதலில் கொள்ளை வேக வைத்து கொண்டு, நீரை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு மிளகு, சீரகம், தனியா, பூண்டு, ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு புளியை நீரில் கரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். கொள்ளு நீரை கொதிக்க விட்டு இந்த அரைத்த பேஸ்டை சேர்த்து, சிறிது உப்பு கலந்து ரசம் போல தயாரித்து குடித்து வரலாம்.

 

உங்களுக்கு ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..?

அப்போ இந்த குறிப்பு கட்டாயம் உங்களுக்கு உதவும்.

தேவையானவை :-

கொள்ளு 1/2 கப் சீ

ரகம் 1 ஸ்பூன்

தனியா 1 spoon

மிளகு 1 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் 3

கைப்பிடி அளவு கருவேப்பிலை

புளி 2 கொட்டை

தக்காளி 2

பூண்டு 10 பல் 

 

செய்முறை :-

முதலில் கொள்ளை வேக வைத்து கொண்டு, நீரை தனியாக வடிகட்டி கொள்ளவும். மேற்சொன்ன தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளுங்கள். பிறகு இதனுடன் மீண்டும் வேக வைத்த கொள்ளை சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொண்டால், கொள்ளு பருப்பு ரெடி. இதனை தினமும் செய்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ எடையை குறைந்து விடலாம்.

 

கலோரிகள் எவ்வளவு..?

அதிகமான அளவு கலோரிகள் கொண்ட உணவுகள் சாப்பிட்டால் தான் உடல் பருமன் கூடும். எனவே, குறைந்த அளவுடைய இந்த கொள்ளுவை சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை கூட வாய்ப்பு இல்லை. மேலும், இது நன்றாக உங்களது செரிமானத்தை தூண்டி விடுகிறது.

 

கொலஸ்ட்ராலை கரைக்கிறதா..?

இந்த கொள்ளுவை கொண்டு தயாரித்த உணவை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் கரைந்து விடும். மேலும், உடலின் எடையும் எளிதில் குறைந்து விடும். ஒரு மாதம் முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவில் இந்த கொள்ளுவை சேர்த்து கொண்டால் 5 கிலோ எடையை குறைத்து விடலாம்.

 

விந்தணு குறைபாட்டை குணப்படுத்த...

நீங்கள் கொள்ளு சாப்பிட்டு வருவதால் மேலும், பல வகையான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. குறிப்பாக ஆண்களின் மிக பெரிய பிரச்சினைகளில் ஒன்றான விந்தணு குறைப்பாட்டை இது சரி செய்கிறது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புசத்து, கால்சியம் போன்றவை விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

 

மாதவிடாய் வலிகளுக்கு

பெண்களின் மாதவிடாய் காலங்களில் வர கூடிய மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு இனி தேவையற்ற மருந்துகளை சாப்பிட வேண்டியதில்லை. மாறாக இந்த கொள்ளுவை சாப்பிட்டாலே போதும். மேலும், இது இரத்தத்தின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.

 

கிட்னி கற்களை நீக்க...

கிட்னியில் கற்களை சேராமல் இருப்பதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. அதற்கு இந்த கொள்ளு அருமையான முறையில் உதவும். கொள்ளுவை சாப்பிடுவதால் கிட்னியில் சேரக்கூடிய கால்சியம் ஆக்ஸலேட் கற்கள், கரைக்கப் படுகிறது.

 

தசை வளர்ச்சி

கொள்ளுவில் அதிக படியான புரதச்சத்துக்கள் உள்ளன. எனவே, 100g அளவு கொள்ளுவில் 20g அளவு புரதசத்து இருக்கிறதாம். இதனால், உடலின் தசைகள் புத்துணர்வு பெறும். மேலும், அதிக ஆற்றலுடன் நீங்கள் இருப்பீர்கள்.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page