உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி, உடற்பயிற்சி இல்லாமல் எடை எப்படி குறைக்க

 உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி

 

உடல் பருமனை எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் குறைப்பதற்கு காலை உணவு பழ உணவாக இருக்க வேண்டும். பழ உணவு என்றால் பப்பாளி பழம், அன்னாசி பழம், ஏதாவது சில உலர் பருப்புகள் அதாவது முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு. இந்த மாதிரி பழங்கள், பருப்பு இம்மாதிரியான இயற்கையாக இருக்கக்கூடிய உணவுகளை காலை உணவாக எடுக்கக்கூடியவர்களுக்கு கண்டிப்பாக உடல் எடை குறையும். இதை ஒரு ஆறுமாத காலமாவது கண்டிப்பாக பழக்கப்படுத்த வேண்டும்.

 

காலையில் பழ உணவு, மதியத்தில் கீரை உணவாக மாறவேண்டும். ஏதாவது ஒரு கீரையை நிறைய மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அந்தக் கீரையைக் கடைந்து உண்ண வேண்டும். மதிய உணவில் கீரைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், பிரதான உணவு கீரையாக இருக்க வேண்டும். அதற்கு இணை உணவு கோதுமை கஞ்சியாக இருக்கலாம், கோதுமையில் செய்யக்கூடிய தோசையாக இருக்கலாம், சம்பா ரவை உப்புமாவாக இருக்கலாம். இம்மாதிரி பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு எடுக்கும்பொழுது குறைந்த கலோரி கிடைக்கும், அதே சமயத்தில் நிறைவான உணவும் கிடைக்கும். அடுத்து இரவு உணவு கஞ்சியாக இருக்கலாம். நொய்யரிசியை கஞ்சியாக செய்து சாப்பிடலாம், மிக மெதுவான அளவில் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளாக இருக்கலாம். அரிசியில் செய்யக்கூடிய உணவாக இருந்தால் இரவு நேரத்தில் கண்டிப்பாக கருவேப்பிலை துவையல், புதினா துவையல், கொத்தமல்லி துவையல், பூண்டு துவையல், நெல்லித்துவையல் இந்த ஐந்தில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 

உணவு சாப்பிடக்கூடிய நேரத்தை மேம்பாடு செய்யவேண்டும். காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டுப் பழக வேண்டும். மதிய உணவை 1 மணிக்குள் சாப்பிட்டுப் பழக வேண்டும். இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டுப் பழக வேண்டும். 7 மணிக்கு இரவு உணவு முடித்த பிறகு தண்ணீர் தவிர வேறு எவற்றையும் மறுநாள் பகல் வரும்வரை அருந்தக்கூடாது. இதற்கு யாராவது தயாராக இருந்தால் கண்டிப்பாக எடை குறையும்.

 

மூன்று வேளையும் நிறைய சாப்பாடு சாப்பிடுவது, காரசாரமான உணவுப்பொருட்களை சாப்பிடுவது, துரித உணவுகளான கேக், பப்ஸ், சிப்ஸ், சேன்ட்விச், சிக்கன் 65, நூடுல்ஸ், மற்றும் மூன்று நேரமும் மேகிநூடுல்சையே சாப்பிடக்கூடிய ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். குழந்தைகளை மட்டும் கெடுப்பது மட்டுமின்றி இவர்களும் இவை சுலபமாக இருக்கிறது என்பதற்காக இதையே சாப்பிடுபவர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

 

பிரிசர்வேட்டிவ் கலந்த உணவுகளை நிறைய எடுக்கும் பொழுது காரம் கலந்த உணவுகளை நிறைய எடுக்கும் பொழுது, புளி கலந்த உணவுகளை நிறைய எடுக்கும் பொழுது, கண்டிப்பாக இந்த உடல்பருமன் வரும். நோய் சார்ந்தும், உணவும் சார்ந்தும், பழக்கவழக்கம் சார்ந்தும் உடல்பருமன் வரும். இந்த உடல் பருமனுக்குத் தீர்வு என்னவென்றால் கண்டிப்பாக உணவுக் கட்டுப்பாடுதான். நான் கூறியது போல் காலை 9 மணிக்கு காலை ஆகாரம், மதியம் 1 மணிக்கு மதிய ஆகாரம், இரவு 7 மணிக்கு இரவு ஆகாரம் எடுத்தீர்கள் என்றால் 7 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணி வரை உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நேரம் என்பது கிட்டத்தட்ட 14 மணி நேரம். ஒரு நாளில் அதாவது இந்த 24 மணிநேரத்தில், 10 மணி நேரத்தில் 3 வேளை சாப்பிடுகிறோம், 14 மணி நேரம் நாம் எதுவுமே சாப்பிடவில்லை, தண்ணீர் மட்டும்தான் அருந்துகிறோம். இம்மாதிரியான பழக்கத்திற்கு உட்படுத்தினீர்கள் என்றால் மாதத்திற்கு 30 நாட்களில் கிட்டத்தட்ட உங்களால் 18 நாட்கள் பட்டினி போட முடியும். 18 நாட்கள் பட்டினிப்போடக்கூடிய நிலைக்கு நீங்கள் தயாராக இருந்தால் கண்டிப்பாக எடை என்பது முழுக்க முழுக்க குறையும்.

 

இன்று உடல்பருமனால் நிறைய பிரச்சினைகள் ஆணும் பெண்ணும் சந்திக்கக்கூடிய சூழல் இருக்கிறது. இருபது வயதிலேயே இருதயத்தை பிடித்துக்கொண்டு உட்காரக்கூடிய இளையதலைமுறைகள் நம்மில் எத்தனைபேர். அதற்கான காரணம் என்ன?. சாலைகளிலும், பூங்காக்களிலும் வறுமையில் உழலக்கூடிய மூன்றுவேளையும் உணவு கிடைக்காமல் இருக்கக்கூடியவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இதயநோய் வருவதில்லை. எவனொருவன் வேளாவேளைக்கு சாப்பிடுகிறானோ, எவனொருவன் ருசிக்கு அடிமைப்பட்டு கண்டதெல்லாம் தின்று உடம்பை குப்பைத் தொட்டிபோல் பாவிக்கிறானோ அவனுக்குத்தான் இதயநோய் வருகிறது. வளமையில் இருப்பவனுக்கு இதயநோய் வரும், வறுமையில் இருப்பவனுக்கு இதயநோய் வரவே வராது. ஆக வளமை இருந்தாலும் வறுமையை மறக்காமல் இருக்கிறவர்கள் கண்டிப்பாக உடல் பருமனிலிருந்து மீளலாம். எனவே இவற்றை கவனத்தில் வைப்பது நல்லது.

உடல் பருமனுக்கு வாழ்வியல் நியதிகளைப் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தோம். உடல்பருமனுக்கு என்று மருந்துகள் இருக்கிறதா என்றால் சித்தமருத்துவத்தில் எண்ணற்ற மருந்துகள் கொட்டிக்கிடைக்கிறது என்று சொல்லலாம்.

 

முறையற்ற மாதவிடாயால் உடல்பருமன் வரக்கூடிய பெண்கள், கருஞ்சீரகம் என்று ஒரு சீரகம் உண்டு. சீரகத்தில் சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் என்ற வகை உண்டு. இதில் கருஞ்சீரகத்தை சமையலில் பழக்கப்படுத்தலாம். அப்படி இல்லையென்றால் எந்த ஒரு பெண்ணுக்கு உடல் எடை குறையவேண்டுமோ, கறுப்பு எள், இஞ்சி, கருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், வெல்லம், இதை வைத்து துவையல் அரைக்க வேண்டும். இந்தத் துவையலை தினசரி ஒரு வேளை காலையிலோ அல்லது இரவு வேளையிலோ எந்தப் பெண் சாப்பிடுகிறாளோ கண்டிப்பாக மாதவிடாய் சுழற்சி ஒழுங்காகும், முறையாகும்.

 

ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் எல்லாமே சரியாகும். ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் சரியாவதால் உடல் எடை சீராகும். பதற்றம், தளர்ச்சி இருக்காது, முழுமையான பெண்ணாக, ஒரு குழந்தையை சுமக்கக்கூடிய பெண்ணாக மாறக்கூடிய சூழல் உண்டாகும். ஏனென்றால் இன்றைய உடல் பருமனால், நவீன மருத்துவர்களிடம், “நான் ஒன்பது மாதமாக தங்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் குழந்தை இல்லை” என்று சொல்லும் பெண்களுக்கு மருத்துவர்கள் தப்பிக்கக்கூடியதற்கு மிக எளிய வழி எடையை 12 கிலோ குறையுங்கள் குழந்தை நிற்கும். என்ற சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். எனவே அந்த மாதிரியான சிக்கல்கள், இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த கருஞ்சீரகத்தை உணவாக, அதாவது நான் கூறிய கருஞ்சீரகத் துவையலை நீங்கள் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் கண்டிப்பாக எடை குறையும்.

அதே போல் மாதவிடாய் சார்ந்த பிரச்சினையினால் உடல் பருமன் அதிகம் இருக்கக்கூடியவர்கள் அசோகபட்டை, லோத்திரபட்டை இவையிரண்டும் மருந்துக் கடைகளில் கிடைக்கும். இந்த அசோகபட்டையையும், லோத்திரப்பட்டையையும் தலா 50 கிராம் வாங்கி அதை பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியை இரண்டு தம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உடல்பருமன் குறையும், இது பெண்களுக்கு.

இன்னும் சில பெண்களுக்கு கருப்பை சார்ந்த சில நோய்கள் இருக்கும். அதனடிப்படையில் உடல்பருமன் உண்டாகலாம். அவர்களெல்லாம் விடாமல் இம்பூரல் என்ற இலை உண்டு, அதனையும் பச்சரிசியையும் சேர்த்து கூடவே மிளகு, சீரகம் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆட்டி, அந்த மாவை தோசைக்கல்லில் தட்டி ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை போட்டு நன்றாக அடை மாதிரி சுடவேண்டும். சுட்டு எடுத்து தினசரி 2 அடையை சாப்பிட வேண்டும். இம்பூரல் அடையை தொடர்ந்து சாப்பிடக்கூடிய பெண்களுக்கு உடல் எடை குறையும்.

 

சர்க்கரை வியாதி இல்லை ஆனாலும் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று ஏங்கக்கூடிய ஆண்கள் நிறைபேர் உண்டு. சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் சாதாரணமாக வெளியில் கிடைக்கக்கூடிய கரும்புச்சாறை வாங்கிவந்து அதில் சீரகத்தை முழுக்க ஊறவைத்து இந்த சீரகத்தில் கரும்புச்சாறு எல்லாம் உள்ளே போய்விடும். பின் அந்த சீரகத்தை காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு காலையிலும், இரவிலும் தொடர்ந்து விடாமல் சாப்பிட்டுப்பாருங்கள் உடல் எடை முழுமையாக குறையும்.

 

உடல்பருமன் அதிகமாக இருக்கிறது, உடம்பில் கொலஸ்டிரால் அதிகமாக இருக்கிறது என்றால் அதையும் சரிசெய்யலாம். நாட்டுமருந்துகடைகளில் ஒமம் என்று ஒரு பொருள் கிடைக்கும். இந்த ஓமத்தை வாங்கி நன்றாக வறுத்து தூள் செய்து காலையிலும் இரவிலும் ஆணும் சாப்பிடலாம், பெண்ணும் சாப்பிடலாம். உடல் எடை கண்டிப்பாக குறையும்.

 

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்லுவோம். குதிரைக்கு மிகச்சிறந்த ஆகாரம் கொள்ளு. இந்தக் கொள்ளு சாப்பிடக்கூடிய குதிரை நல்ல எலும்பு வலுவோடு இருக்கும். ஒரு பந்தயத்தில் ஓடவேண்டும் என்றால் கூட வேகமாக ஓடும். அதனுடைய உடல்வாகு ஏற்றஇறக்கத்தோடு செதுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அதற்குத்தான் குதிரைக்கு கொள்ளு தண்ணீர் ஊற்றுவது. கொள்ளை அவித்து தண்ணீரைத்தான் ஊற்றுவார்கள். கொள்ளில் மாவுச்சத்து இருக்கும். எனவே கொள்ளை அவித்து அந்தத் தண்ணீரை தொடர்ந்து 60 மில்லி அளவுதான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடும் பொழுது சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் கரப்பான் போன்ற நோய் வர வாய்ப்பு உண்டு. கொள்ளை நிறைய சாப்பிடுவதால் உடம்பில் அரிப்பு அதிகமாகக்கூடிய சில சூழல் உண்டு. எனவே அந்தக் கொள்ளை 60 மில்லி அளவிற்கு தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தீர்கள் என்றால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.

 

அதே போல் நிலாவரை. நிலாவரை என்பது அமெரிக்காவிற்கே சென்று கேட்டால் கூட திருநெல்வேலி நிலாவரைக்கு ஒரு சிறப்பு உண்டு. திருநெல்வேலியை ஒட்டியிருக்கக்கூடிய கிராமங்களில் விளையக்கூடிய நிலாவரை நல்ல மலமிளக்கியாக செயல்படும், உடலில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ராலை முழுமையாக கரைக்கும், உடல்பருமனை குறைக்கக்கூடிய தன்மை உண்டு. உடல்பருமன் என்பது ஒரு நாளிலேயோ, ஒருவாரத்திலேயோ, ஒரு மாதத்திலேயோ உண்டாவது கிடையாது. சிறிதுசிறிதாக ஏறக்கூடிய உடல்எடையை சிறிது சிறிதாகத்தான் குறைக்கமுடியும். 90 கிலோ நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் முதல் ஆறுமாத காலத்திற்கு இந்த 90 கிலோவை தக்கவைக்க வேண்டும். 90 கிலோவை தக்கவைத்தப்பிறகு அதன்பிறகு சிறிதுசிறிதாக குறைக்கக்கூடிய வேலைகளில் ஈடுபடவேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ குறைத்தால் கூட பத்து மாதத்திற்கு பத்து கிலோ குறைக்கலாம். சிறிதுசிறிதாக குறைத்து வரக்கூடியதுதான் உடல் எடையை குறைக்குமே ஒழிய, சடாரென்று குறையும் எடை வேகமாக ஏறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனென்றால் நம் உடம்பில் 67 சதவிகிதம் நீராலானது, சில மருந்துகளை கொடுக்கும் பொழுது அதாவது பேதி மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, கொழுப்பைக் குறைக்கக்கூடிய மருந்துகளைக் கொடுக்கும் பொழுது சடாரென்று 4 கிலோ, 5 கிலோ குறையும், மறுபடியும் 10 கிலோ ஏற ஆரம்பித்துவிடும்.

 

எனவே அந்த மாதிரியெல்லாம் குறைக்காமல் பசியோடு இருந்து பழகுங்கள் அதாவது உணவு என்பது பசிக்கு மருந்தாக இருக்க வேண்டும், அந்தப் பசி இருக்கும் பொழுதே அரை வயிறாக சாப்பிடுவது, ஓரளவு சாப்பிடுவது, வயிறு முட்ட சாப்பிடாமல் இருப்பது இவற்றையெல்லாம் நாம் பழக்கப்படுத்தும்பொழுது உடல்பருமனிலிருந்து முழுமையாக மீளக்கூடிய சூழல் உண்டாகும். எந்த அளவிற்கு இன்றைக்கு இருக்கக்கூடிய பட்டை தீட்டிய அரிசியைக் குறைத்துவிட்டு, நார்ச்சத்துள்ள சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி இவற்றையெல்லாம் பிரதான உணவாக மாற்றும் பொழுதும், கூடவே மக்காச்சோளம் போன்ற உணவை அதிகமாக எடுத்துக்கொள்வதனால் கண்டிப்பாக உடல்பருமனிலிருந்து விடுபடமுடியும். மிக எளிமையான விசயம் ஆனால் பழக்கப்படுத்துவதில்தான் எடைகுறைவதும், ஏறுவதும் இருக்கிறது. ஆக நான் சொன்னதைத் தொடர்ந்து செய்து வாருங்கள், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள், சித்தர்கள் கூறிய மருந்துபொருட்களையும் விடாமல் முறையோடு தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வாருங்கள். உடல்பருமன் என்பதை குறைப்பது சாத்தியமே.

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page