கொழுப்பு கட்டி, கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய மருந்து, கொழுப்பு கட்டி அறிகுறிகள், கொழுப்பு கட்டி கரைப்பது எப்படி, கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை, கொழுப்பு கட்டி வர காரணம், கொழுப்பு கட்டியை கரைப்பது எப்படி

கொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம் சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. கொழுப்பு கட்டிகள் கரைவதற்கு இயற்கை மருத்துவம் சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும். இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் ம...