எடையை குறைப்பது, தொப்பை குறைப்பது எப்படி, உடல் எடையை குறைப்பது, எடையை குறைக்க எளிய வழி, உடல் பருமன் குறைய என்ன செய்வது,

 இயற்கையான முறையில் உடல் எடையை எவ்வாறு குறைப்பது..

 

உடல் எடை

எனவே இயற்கையான முறையில் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை பார்ப்போம். உடல் எடை குறைப்பது என்பது குறித்துப் பார்க்கும் போது நிறைய பேருக்கு உடல் எடை உண்மையிலேயே குறையுமா என்று சிலர் சந்தேகமடைவார்கள். என்னிடம் வரும் நோயாளிகள் நான் ஆயுர்வேத மருந்து சாப்பிட்டேன், சித்த மருந்து சாப்பிட்டேன், உடல் எடையை குறைக்கக் கூடிய அழகு நிலையங்களுக்கு சென்றேன். பட்டினி கிடந்தேன். தினமும் 8 கி.மீ. நடந்தேன். எட்டு போட்டு நடந்தேன். ஆனாலும் எனக்கு உடல் எடை குறையவில்லை என்பார்கள். உடல் எடை குறைப்பு என்பது வளர்சிதை மாற்றத்தை பொருத்துதான் இருக்கிறது. Basic Metabolic Rate என்பது மிகவும் முக்கியமானதொன்று. இது எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ அதை பொறுத்துதான் நமது உடல் எடையும் பருமனும் இருக்கும்.

 

அடிப்படையான விஷயங்களைக் கூட பின்பற்றுவதில்லை

துரதிருஷ்டவசமாக Basic Metabolic Rate -ஐ நன்றாக வைத்துக் கொள்ளக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் நாம் செய்வது கிடையாது. உதாரணமாக உணவில் இருக்கக் கூடிய கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள், தியான பயிற்சிகள், குறிப்பாக நமது சமையலிலும் கூட பேசிக் மெட்டபாலிக் ரேட்டை அதிகப்படுத்தக் கூடிய வகையில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள், சீரகம், ஏலக்காய், பட்டை, சோம்பு, பெருங்காயம் இதையெல்லாவற்றையும் சேர்க்கிறோமா என்றால் இல்லை.

 

சூரிய ஒளி உடலில் பட வேண்டும்

சூரிய ஒளி உடலில் பட்டால், நாம் உணவில் சேர்க்கும் கார்போஹைட்ரேட்டில் உள்ள மாவு சத்துகள் பஸ்பம் ஆகிவிடும். இரண்டாவது வாழ்வியல் முறை, நாம் அனைவரும் சூரிய ஒளி நம் உடல் மீது படும்படியாக நாம் இருப்பதில்லை. இப்போது அதையெல்லாம் யாரும் செய்வதில்லை.

 

தண்ணீரே குடிப்பதில்லை

நாம் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பதால் சூரிய ஒளியினால் ஏற்படக் கூடிய வளர்சிதை மாற்றத்தின் விகிதம் குறைந்து போகிறது. அடுத்ததாக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமாக உணவை சாப்பிடுவோர் கூட குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீரை குடிப்பதில்லை. அப்படியெனில் நாம் எல்லாம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது போல் உடல் வியர்வை அதிகமாக வெளி வர வேண்டும். ஆனால் அதற்கும் நாம் முயற்சி எடுப்பது கிடையாது. இதெல்லாம் இல்லாததால் உடல் எடை கூடுகிறது.

 

சர்க்கரை நோய்

உடல் எடை கூடுவதனால் தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. இந்த நோய்களுக்காக நாம் சாப்பிடக் கூடிய மாத்திரைகளும் நமது உடல் எடையை கூட்டுகின்றன. 

 

ஆப்பிள் சீடர் வினிகர்-

இது உடலில் ஆல்கலைன் எனும் காரத்தன்மையை தூண்டுகிறது. காரத்தன்மையை தூண்டுகிற எல்லா விஷயங்களும் நம்முடைய உடல் எடையை குறைக்கக் கூடியதாகும். எனவே 30 மில்லி ஆப்பிள் சிடார் வினிகரை 200 மில்லி வென்னீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நிச்சயம் உடல் எடை குறையும். வழக்கமாக நீங்கள் சாப்பிடும் உணவுகளான அரிசி, கோதுமை, காய்கறிகள், அசைவம் என எதுவேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனுடன் இந்த ஆப்பிள் சிடார் வினிகரை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய கொழுப்பு விகிதங்கள் உடலுடைய பேசிக் மெட்டபாலிசம் ரேட்டில் ஏற்படக் கூடிய மாற்றம் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

 

மதிய உணவு

இரண்டாவது சிம்பிள் ஆப்பிள் டயட், காலை உணவிற்கு முன்பு ஒரு ஆப்பிள், மதிய உணவிற்கு முன்பு இரு ஆப்பிள்கள், இரவு உணவுக்கு முன்பு ஒன்று அல்லது இரு ஆப்பிள்கள் சாப்பிடலாம். இந்த சிம்பிள் ஆப்பிள் டயட் சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நல்ல ஒரு குணம் என்னவென பார்த்தீர்களேயானால், கிரேவிங் இருக்காது. இட்லி பிடிக்காதவங்க இட்லி வச்சா 2தான் சாப்பிடுவாங்க. ஆனால் தோசை செய்தால் 5 சாப்பிடுவாங்க. இந்த கிரேவிங் உடல் எடையை அதிகரிக்க மிகப் பெரிய காரணமாகும். இதை குறைக்க அருமருந்து இந்த சிம்பிள் ஆப்பிள் டயட்தான்.

 

வெந்நீர்

இதை செய்வதால் மிகப் பெரிய அளவில் உங்கள் எடை குறையும். மூன்றாவது மிக முக்கியமானது, வெந்தயபால், பொதுவாக இந்த வெந்தயபால் சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய பரிந்துரை செய்துள்ளேன். உடல் எடை அதிகமாக இருந்தும் சர்க்கரையும் அதிகமாக இருந்து இன்சுலின் போட்டுக் கொள்பவர்களுக்கு வெந்தயம் அல்லது வெந்தயப்பால் மிகவும் சிறந்தது. 50 கிராம் வெந்தயத்தை எடுங்கள், மூன்று இரவு ஈரத்துணியில் சுற்றி முளை வந்த பிறகு அந்த வெந்தயபாலை எடுத்து அப்படியே வெந்நீரில் போட்டு அரைத்து வடிக்கட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் 50 மில்லி எடுத்து சூடாக குடியுங்கள்.

 

பழங்கள் சாப்பிட்டால்

ஆற வைத்து குடித்தால் சளிபிடிக்கும். எனவே சூடாக குடியுங்கள். பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும். ஆனால் பழங்களை சாப்பிட்டுவிட்டு வெந்நீர் குடித்தால் போதும். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும். ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு வெந்நீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. வெந்தயப் பாலை குடித்தால் சர்க்கரை குறையும், உடல் எடை குறையும், உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வீர்கள்.

 

40+ கிலோ குறையும்

நான்காவது மிகவும் முக்கியமானது. 6 மாதத்தில் 40+ கிலோ கூட குறைவதற்குக் கூட உதவி செய்வதற்கு சிறந்த மருந்து சீரகம், சோம்பு , கறிவேப்பிலை, மஞ்சள், ஆளிவிதை, கடுக்காய்- ஒவ்வொன்றும் 2 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 100 மில்லி சுடுதண்ணீரில் நன்றாக கலந்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு குடியுங்கள். இதை சாப்பிட்டாலே கொழுப்பு சம்பந்தப்பட்ட விகிதங்கள் மாறி போகும்.

 

வேகமாக குறையும்

15 நாட்கள் இதை எடுத்து ஏழரை கிலோ குறைந்திருந்தார் ஒரு நோயாளி. அந்தளவுக்கு வேகமாக உடல் எடையை குறைக்கும். எதுவும் என்னால் செய்ய முடியாது என்கிறீர்களா, கவலைவிடுங்கள், 100 மில்லி தண்ணீரை எடுங்கள், 5 கிராம் சோம்பை அதில் போடுங்கள். அதை 50 மில்லியாக குறையுங்கள். அதை வடிகட்டி உணவுக்கு அரை மணி நேரம் முன்பு, 3 வேளை குடியுங்கள், மிகப் பெரிய அளவில் எடையும் தொப்பையும் குறைந்து கொண்டே வரும். 5ஆவதாக இன்டர்மீடியட் பாஸ்டிங் என்ற முறையாகும். ஒரு வாரத்திற்கு காலை உணவை தவிருங்கள், இன்னொரு வாரம் மதிய உணவு, இன்னொரு வாரம் இரவு உணவு தவிருங்கள், இதை ஒரு 6 மாதம் செய்யுங்கள். இதுவும் உங்கள் எடையை குறைக்க உதவும் என்றார்.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page