கருத்தரித்தல் பரிசோதனை

கர்ப்பிணிக்கு என்ன என்ன பரிசோதனைகள்? தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல். நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது. இக்காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் என்ன? 1. சிறுநீரில் கர்ப்பம் அறியும் பரிசோதனை (Pregnodex test): வழக்கமாக வரும் நாளிலிருந்து ஒரு வாரம்வரை மாதவிலக்கு தள்ளிப் போனாலோ, அந்த காலத்தில் லேசாக தலைச்சுற்றல் இருப்பது போல் உணர்ந்தாலோ, கரு உருவாகி இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதிகாலைச் சிறுநீரைப் பரிசோதிப்பது நல்லது. ஆனால், கட்டாயமில்லை. சிறுநீரில் ‘ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஹார்மோன்’ (Human Chorionic Gonadotropic Hormone-...