சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு, சிறுநீரக பிரச்சனைக்கு மருந்து, சிறுநீரக பிரச்சனை தீர, சிறுநீரக பிரச்சனைக்கு சித்த மருத்துவம்
நெருஞ்சில் என்ற திருதண்டம், கோகண்டம், காமரசி: வகைகள்: சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக் குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும். இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும் பயன்தரும் .நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும், இத்தூளை கொதி நீரில் போட்டு காபி போல சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு சிறந்த ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும். தமிழகமெங்கும் சாலையோர