உடல் எடை குறைய மருத்துவம், உடல் எடை குறைய வீட்டு மருத்துவம், உடல் எடை குறைக்க மருத்துவம், உடல் எடையை குறைக்க மருத்துவம், உடல் எடையை குறைக்கும் மருத்துவம், உடல் எடை குறைய இயற்கை மருத்துவம், உடல் எடை குறைய மூலிகை மருத்துவம்

உடல் எடையை குறைக்க உதவும் மூலிகைகள்!

 

பழங்காலத்தில் நமது முன்னோர்கள், உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க, மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும் விதைகளைப் பயன்படுத்தினர். சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளைக் கண்டுபிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மூலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுர் வேத மருத்துவத்தில் 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்போது இது நடைமுறையில் உள்ளது.

 

நம் நாடு முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு ஈடாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல், நறுமணமிக்க மஞ்சள் வரை இந்த நாட்டில் கொட்டிக் கிடக்கிறது. நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவனவாகவும், உணவின் தரத்தை மேம்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விசயமே அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைகளை பயன்படுத்தினாலே போதும். அந்த மூலிகைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

 

சோம்பு

சோம்பு உண்ட உணவை செரிப்பதற்கும், பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது .

 

இஞ்சி

இஞ்சியானது நமது உடலில் உள்ள இரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக் கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது.

 

தேங்காய் எண்ணெய்

உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு

 

கடுகு

 உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.

 

கருப்பு மிளகு

நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.

 

சீரகம்

ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது.

 

வரமிளகாய்

வர மிளகாயில், கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

 

மஞ்சள்

மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

 

ஏலக்காய்

ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.

 

இலவங்கப்பட்டை

 உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்ததொரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை ஆகும். ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page