Posts

Showing posts with the label சோரியாஸிஸ் குணமாக

சோரியாஸிஸ் அறிகுறிகள்

  சோரியாஸிஸ் நோயின் சில அறிகுறிகள் தலையில் முதலில் பொடுகு போல் ஆரம்பிக்கும் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவும். அரிப்பு நமைச்சல் எரிச்சல் படைகள் உடல் முழுவதும் தோன்றும். செதில் செதிலாக தோல் உரிதல் சொரிந்தால் இரத்தம் வருதல் விரல்களை பாதிக்கும் விரல் நகங்கள் சொத்தையாகும் நகங்களில் சிறு குழிகள் தோன்றும் நிறம் மாறும் கொப்புளங்கள் ஏற்படுதல் நகங்கள் தடிப்படையும், நகங்கள் உருமாறுதல் தோலில் வெடிப்பை ஏற்படுத்தும் வலியால் உடல் ரணமாகும் உள்ளங்கை, உள்ளங்கால் வெடிப்பு நடக்கக் கூட முடியாமல் இருத்தல் தோல்கள் உறிந்து கொண்டே இருத்தல் இரத்தம் கெட்டுப்போய் இருத்தல் கரடு முரடான சருமம் சொறிந்தால் எரிச்சல் பிசுபிசு என்று தண்ணீர் கசிதல் நாற்றமுள்ள வியர்வை தோன்றும் இரத்தம் வரும்வரை சொறியத் தோன்றுதல் உள்ளங்கை உள்ளங்கால்களில் தோல் உதிரும் தலைமுடி கொட்டும், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும் தலையில் மீன் செதில் போன்று ஏற்படும் அழுகும் தன்மையுள்ள கொப்பளங்கள், நெறி கட்டுதல் காது பின்புறம் முட்டி மூக்குப்பகுதி நகங்கள் விரல்கள் கடினமாகவும் தோன்றும் சீழ் உள்ள கொப்புளங்களில் எறும்புகள் ஊர்வது போன

சோரியாசிஸ் நோய்க்கு சித்த மருத்துவம்

  சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை (Psoriasis) தோல் நோய்களில் ஒன்றான சோரியாசிஸ் (Psoriasis) எனப்படும் காளாஞ்சகப்படை நோய் மற்றும் செதில் உதிர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.   சோரியாசிஸ் நோய் எப்படி உருவாகிறது? தோல் செல்கள் 28 நாட்களுக்கு ஒரு முறை இயல்பான முறையில் புதியதாக தோன்றி மறையும் தன்மை கொண்டது. இயற்கைக்கு மாறாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தோன்றுவதால் பழைய தோல் செதிலாக உரியத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் தோலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, நுண்ணிய இரத்த குழாய்கள் தளர்ந்து, விரிவடைந்து, வீங்க ஆரம்பிக்கின்றன. இதனால் கடினமான, நிறமற்ற, பெரிய, நெய்ப்புத் தன்மையுடைய, வித்தியாசமான தோல் செல்கள் சோரியாசிஸ் நோயில் உண்டாகின்றன. உடலின் வளர்சிதை மாற்றம் வேறுபாட்டினால் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகரிக்கவோ அல்லது சிதைவடையவோ செய்கின்றன. இதனால் சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு உயிரிழந்த தோல் செல்கள் அதிகரித்து செதில்களாக மாறுகின்றன. நோயின் தன்மை: தோலில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான செதில்கள் போன்று உருவாகும் படைகள் தோன்றும். இந்தப் படைகளின் உருவமும், அளவும்

சொரியாசிஸ் பாட்டி வைத்தியம்

  சோரியாஸிஸ் எனும் தோல் நோய் குணமாக டிப்ஸ் மழைக்காலத்தில் சளி இருமல் மட்டுமல்ல, சில தோல் நோய்களும் அதிகம் வாட்டும். குறிப்பாக சோரியாஸிஸ் எனும் தோல் நோய் சிலருக்கு மழைக்காலத்தில் அதிகம் துன்பம் தரும். நன்கு குணமாகி,அப்பாடா ஒருவழியாய் ஓய்ந்து விட்டது சோரியாஸிஸ் என பெருமூச்சு விடுகையில், மடமடவென மீண்டும் தலைதூக்கும் இந்த நோய், சிலருக்கு குளிர்காலத்தில்/ பனிக்காலத்தில் பெரும் தொல்லை தருவதுண்டு. அவர்கள் இப்பருவத்தில் நோய் இல்லையென்றாலும் முன்பு வந்து போன இடங்களில் சித்த மருத்துவ தைலங்களைப் பூசுவதும், உணவில் புளிப்பை அறவே தவிர்ப்பதும் நல்லது. மீன், நண்டு, கோழிக்கறி-போன்றவர்றை மழைக்காலத்தில் சோரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பதும் நல்லதே. ஆனால், நல்ல உடலினருக்கு மழைக்காலத்தில் புளிப்பு நல்லது. சோரியாஸிஸ் குணமாக: சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் இரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்