வெட்பாலை தைலம் பயன்கள், வெட்பாலை இலை எங்கு கிடைக்கும், வெட்பாலை செடி கிடைக்கும் இடம், வெட்பாலை மரம் எப்படி இருக்கும்

 வெட்பாலை-Psoriasis Cure Tree

 

இது தமிழகமெங்கும் காணப்படும் மரம். இதன் இலையை ஒடித்தால் பால் வரும். சிற்றூர்களில் இதை, ‘பாலாட்டாங் குலை’ என்று சொல்வதுண்டு. மலைக்காடுகள் தொடங்கும் இடங்களில் இவை அதிகமாகக் காணப்படும். மற்ற இடங்களிலும் பரவலாகப் புதர்களாகக் காணப்படும் குறுமரம் இது. அப்படியே வளரவிட்டால் மிக உயரமாக வளரும். என் அனுபவத்தில் 50 அடி உயர மரங்களைக்கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதனுடைய கட்டை மிகவும் வலுவற்றது. கடைசல் பொம்மைகள் செய்யப் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்ப, பல்வலி நீங்கும். ஆனால், இது நிரந்தரத் தீர்வல்ல. இதன் இலைகளைக் கிள்ளினால் வரும் பாலை, ஓரிரு துளிகள் பாலில் விட, பாலிலுள்ள வெண்ணெய் தனியாகப் பிரிந்துவிடும்.

திருச்சி மாவட்டத்தில் வாழும் இருளர் இன மக்களிடமிருந்து ஒரு மருந்துத் தயாரிப்பு முறை பெறப்பட்டு, இன்று சித்த மருத்துவர்களிடையே மிகவும் பயன்பட்டுவருகிறது.

அதுதான், ‘வெட்பாலைத் தைலம்.’ இதன் தயாரிப்பு மிகவும் எளிதானது. அடுப்பின் அருகிலேயே செல்லாமல் ‘சூரியப் புடம்’ என்று சித்த மருத்துவம் கூறும் முறையில் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. சூரியனின் வெம்மையான வெயிலால் மட்டுமே இந்த மருந்தைத் தயார் செய்ய முடியும். ‘காளாஞ்சகப்படை’ என்று சித்த மருத்துவம் வகைப்படுத்தியிருக்கும் ‘சோரியாஸிஸ்’ என்ற மிகவும் மோசமான தோல் நோய்க்கு இதுவும் ஒரு  சிறந்த மருந்து.

பலவிதமான ஆங்கில மேற்பூச்சு மருந்துகள் (Oinments) போட்டும் கட்டுப்படாத சோரியாஸிஸ் தோல்படைகள், இந்த எளிய தைலத்தில் அற்புதமாகக் குணமடைகின்றன.

வெட்பாலைத் தைலம் தயாரிப்பு முறை

ஒரு பெரிய அகலமான, சற்று ஆழமான சில்வர் தாம்பூலத்தட்டு ஒன்றை எடுத்து, அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த எண்ணெயில் மூழ்கும் அளவுக்கு புதிதாக பறித்த வெட்பாலை இலைகளைப் பரப்ப வேண்டும்.

பிறகு அதை அப்படியே நல்ல வெயிலில் பங்குனி, சித்திரை (மார்ச், ஏப்ரல், மே) மாதங்களில் வைக்க வேண்டும். மாலையில் அதை அப்படியே எடுத்து அறைக்குள் வைக்க வேண்டும். இரவில் பெய்யும் பனியில் வைத்துவிடக் கூடாது. இவ்வாறாக மூன்று முதல் ஐந்து நாள்கள் வைத்திருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கருநீல நிறமும் (வயலெட்), இளஞ்சிவப்பு நிறமும் கலந்த நிறத்தில் மாறிவிடும். இதுதான் வெட்பாலைத் தைலம். பின்னர் இலைகளை அப்படியே அரித்து எடுத்து விட்டு எண்ணெய்யை மட்டும் வைத்துக் கொள்ளவும். கண்டிப்பாக இலைகளைப் பிழியக் கூடாது. சரியான முறையில் தயாரிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரைகூடக் கெடாமலிருக்கும்.

சோரியாஸிஸ் இயற்கை மருந்து

இந்தத் தைலத்தைச் சொரியாசிஸுக்கு மட்டுமல்லாமல் கரப்பான், ஊறல், சிரங்கு முதலான அனைத்து தோல்நோய்களுக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்பூச்சாகப் பூசிவர நல்ல குணம் கிடைக்கும். மிகவும் தீவிரமான நிலைகளில் 2-3 மி.லி அளவு தைலத்தை பால், காபி, தேநீரில் கலந்தும் குடித்துவரலாம். தலையில் சொரியாசிஸ் பாதிப்புகள் இருந்தாலும், தலைப்பூச்சுத் தைலமாக இதைப் பூசிவரலாம்.

வெட்பாலை மரத்தை அடையாளம் காணும் முறை

பத்து மரங்கள் இருக்கும் இடத்தில் வெட்பாலை மரம் மட்டும் இளம் கிளிப்பச்சை நிறத்தில் தனியாக தெரியும். வெட்பாலை மரங்கள் மொத்தமாக வெண்ணிறத்தில் பூத்துக் குலுங்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். கொல்லிமலையில் தரை மட்டத்திலிருந்து செம்மேடு வரை மலை முழுவதும் அதிகமான வெட்பாலை மரங்கள் உள்ளன. இவை பூக்கும் காலத்தை ’கொல்லிமலையின் தேன் காலம்’ என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு நிறைய தேன் கிடைக்கும். தேன்கூடு பெட்டி வைத்திருப்பவர்கள் தங்களின் இருப்பிடத்தைச் சுற்றி வெட்பாலை மரங்களை நட்டு வளர்ப்பது மிகவும் பயனுள்ளது.

இவை பூத்த பிறகு காய்க்கத் தொடங்கும். இரண்டிரண்டு காய்களாக முதலில் பச்சை நிறத்திலும், முதிர முதிரக் கருமை நிறத்திலும் காணப்படும். காய்களினுள்ளே பஞ்சுடன் கூடிய விதைகள் இருக்கும். நன்கு முதிர்ந்த பிறகு, காய்ந்து, பஞ்சுடன் விதைகள் காற்றில் பரவத் தொடங்கும். இதன் விதைகளை ‘அரிசி’ என்றே மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சித்த மருத்துவத்தில் வெட்பாலை அரிசி, விளாவரிசி, கார்போக அரிசி, ஓமவரிசி, உருளையரிசி, அருணாவரிசியென மொத்தம் ஆறு வகையான அரிசிகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் வெட்பாலை அரிசி பேதியை நிறுத்தும் மருந்துகளிலும், வயிற்றுப் பொருமல் தொடர்பான மருந்துகளிலும் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இது வடமொழி மற்றும் மலையாளத்தில் ‘தந்தபாலா’ என்று அழைக்கப்படுகிறது.

 வெட்பாலை மரம், செடி, இலை எங்கு கிடைக்கும்

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாகவே கிடைக்கிறது. சிறுமலை அடிவாரப் பகுதிகளிலும், எல்லா மலைகளின் அடிவாரங்களிலும் கிடைக்கிறது.

 மதுரை To வாடிப்பட்டி 4 வழிச் சாலைகளின் ஒரங்களிலேயே வெட்பாலை நிறைய கிடைக்கிறது. மதுரை To மேலூர் ரோட்டில் நரசிங்கப்பட்டி  அருகிலும் நிறையவே கிடைக்கிறது.

வெட்பாலை தைலம் ஆரம்பநிலை சோரியாஸிஸ்-ற்கு நன்கு குணம் கிடைத்தாலும் சற்று முற்றிய நிலையாக இருந்தாலும் முழுமையாக குணமடைவதில்லை. 

சோரியாஸிஸ் என்ற காளாஞ்சகப்படையை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் உள்ளுக்குள் கொடுக்கும் சித்த, ஆயுர்வேத மருந்துகளால் மட்டுமே முழுமையாக குணப்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட நோயாளியின் நிலையைப் பொறுத்து 6 முதல் 12 மாதங்கள் உள்ளுக்குள்ளும் மருந்துகள் எடுத்துக் கொண்டு, வெளிப்பூச்சு மருந்துகளையும் தடவி வந்தால் முழுமையாக குணமாகும்.

 சோரியாஸிஸ் சிகிச்சையை மேற்கொள்ள சித்த, ஆயுர்வேத முறையில் முழுமையாக சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147