சொரியாசிஸ் என்றால் என்ன, சொரியாசிஸ் எதனால் வருகிறது

 சோரியாஸிஸ் ( PSORIASIS ) என்றால் என்ன?

 

இன்றைய மாறிவரும் சூழலில் சோரியாஸிஸ் நோய் பரவலாக காணப்படுகிறது. ஆனால் இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது.

சோரியாஸிஸ் எனும் தோல் நோய் தற்போது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் வந்தால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறட்சி கண்டு செதில் செதிலாக உறிந்து கொண்டு வரும்.

வரலாற்று காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன. எகிப்தின் மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த காலகட்ட மக்களுக்கும் இந்த சோரியாஸிஸ் இருந்ததை அறிய முடிகிறது.

 “மருத்துவத்தின் தந்தை” எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாஸிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார்.

கிபி 2-ம் நூற்றாண்டில் கேலன் எனும் மருத்துவர் சோரியாசிஸிற்கு மருந்தாக வைபர் எனும் பாம்பின் சூப்பை தடவ வேண்டும் என்று கூறியுள்ளார். பின்பு இந்த இருபது நாற்றாண்டுகளில், இந்த சோரியாஸிஸ்-க்கு பல மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன.

நாய் மற்றும் பூனையின் சாணம், வாத்து எண்ணெய், விந்தணுவை பூசுவது, சிறுநீருடன் வெங்காயம் மற்றும் உப்பை கலந்து பூசுவது போன்ற பல மருத்துவ நம்பிக்கைகள் உலவி வந்தன.

 

 

ந்த நோய்க்கான காரணம் தெள்ளத்தெளிவாக இன்னும் அறியப்படவில்லை.

  • ஜீன்களில் ஏற்பட்ட கோளாறுகள் அந்த கோளாறுகளை உருவாக்கும் சூழலியல் மாறுபாடுகள்
  • கிருமித்தொற்றுகள் (infection)
  • மனஅழுத்தம் (psychological stress)

இவைதான் இப்போதைக்கு அறியப்பட்ட காரணங்கள்.

சோரியாசிஸில் பல வகைகள் உண்டு அவற்றுள் முக்கியமானவை :

1. செதில் வகை (plague எனப்படும் psoriasis vulgaris ) இந்த வகைதான் 90%
2. Guttate psoriasis
3. Inverse psoriasis ( செந்நிற திட்டுகள் தோன்றும்)
4. Pustular – கொப்புளம் கொப்புளமாக வரும்
5. Erythrodermic psoriasis ( உடல் முழுவதும் சிவப்பு நிற படை வருவது)

இந்த செதில்கள் பொதுவாக தலைப்பகுதியிலும், முன்னங்கையின் பின்பகுதி, காலின் முன்பகுதி போன்றவற்றில் இருக்கும்.

ஏன் செதில்கள் தோன்றுகின்றன ?

தோலின் மேல்பகுதியான எபிடர்மிஸ் (epidermis) எனும் பகுதி அதிகமான அளவில் வளர்ச்சி அடைவதால் உருவாகிறது.

நன்றாக இருக்கும் தோலின் எபிடர்மிஸில் உள்ள செல்கள் புதிதாக மாற்றப்பட 28 முதல் 30 நாட்கள் ஆகும்.

ஆனால் சோரியாஸிஸ் பாதிக்கப்பட்ட தோலின் செல்கள் புதிதாக மாற்றப்பட 3 முதல் 5 நாட்களே எடுத்துக்கொள்கின்றன. அதனால்தான் இத்தனை வளர்ச்சி அடைந்து செதில்கள் தோன்றுகின்றன.

சோரியாசிஸிற்கு இருக்கும் மருத்துவ முறைகள் என்ன ?

  • பாதிக்கப்பட்ட தோலின் மீது வறட்சியை போக்கும் க்ரீம்கள் (emollients)
  • ஸ்டீராய்டு கிரீம்கள்
  • விட்டமின் டி(vitamin-D) நிரம்பிய கிரீம்கள்
  • நோய் முற்றிய நிலையில் இருந்தால் அல்ட்ரா வயலெட் லைட் தெரபி (UV-B therapy) – PUVA therapy

அதனினும் முற்றிய நிலை இருப்பின் தோலின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சைக்லோஸ்போரின், மெத்தோட்ரெக்சேட் போன்ற மருந்துகளை எடுக்கலாம்.

சோரியாசிஸை முழுவதுமாக குணப்படுத்த இயலுமா ?

ஆட்டோ இம்யூன் வியாதிகள் அனைத்துக்கும் மூலம் நமது ஜீன்கள் செய்யும் தகராறு. ஆதலால் நம்மால் அந்த நோய்களை கட்டுப்படுத்ததான் முடியும். முழுவதும் குணப்படுத்த முடியாது

சரி.. ஜீன்கள்தான் காரணம் என்றால் அவற்றிற்கு உகந்தவாறு நமது வாழ்வியலை அமைத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கலாம்தானே??

நிச்சயம் முடியும். சோரியாசிஸை நமது வாழ்வியல் மாற்றங்களை கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

சோரியாசிஸை கட்டுப்படுத்துவது எப்படி ?

1. தானியங்கள் நமது ஜீன்களின் எதிரிகள். அதிலும் க்ளூடன் அடங்கிய கோதுமை நமது ஜீன்களுக்கும் , குடலுக்கும் ஒவ்வாத உணவு. ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

2. குடலின் ஆரோக்கியம் சரியாக இருந்தால் சோரியாஸிஸ் நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது ஆய்வுகள்.

Gut health என்பது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை பொறுத்து இருக்கிறது. ஆகவே, நல்ல பாக்டீரியாக்களை சரியாக பராமரிப்பதும், leaky gut இல்லாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.

ரீபைன்டு எண்ணெய், எண்ணெயில் பொறித்த பண்டங்கள், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள், மைதா/ ஆட்டா/ சிறுதானியம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்

3. பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டுக் கறி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை எடுப்பது நல்லது.

5. இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் எடுப்பது நல்லது.
தக்காளி, பெப்பர், மிளகாய், உருளை போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

6. தினமும் நண்பகல் சூரிய வெயிலில் 20 நிமிடம் நிற்பது நல்லது. அது நமது உடலின் விட்டமின்-டி அளவுகள் உயர வழி வகுக்கும். விட்டமின் டி நிரம்பிய மாத்திரைகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுக்கலாம்.

7. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிரம்பிய மீன்களை ( மத்தி போன்ற சிறிய வகை மீன்கள் ) அதிக அளவில் உண்ணலாம். முடியாதவர்கள் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுக்கலாம்.

8. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துதல் நல்லது. வெட்பாலை எண்ணெயை பாதிக்கப்பட்ட தோலில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

9. மது, புகை போன்ற பழக்கங்களை அறவே விட்டு விட வேண்டும்.
காபி, டீ போன்றவற்றை நிறுத்துவது நல்லது. தேவைப்படின் கிரீன் டீ பருகுவது நல்லது.

10. இவையனைத்துடன் தங்களின் தோல் நோய் சிறப்பு மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து வர வேண்டும்.

சோரியாஸிஸ் தொற்று வியாதி அல்ல. அதனால் சோரியாஸிஸ் வந்தவரை மனதளவில் ஊனப்படுத்தாமல் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

சோரியாசிஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இயன்றால் முடியாதது எதுவுமில்லை !


 சோரியாஸிஸ் சிகிச்சையை மேற்கொள்ள சித்த, ஆயுர்வேத முறையில் முழுமையாக சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147