குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க…
பிரண்டை உப்பு Pirandai Salt
சீந்தில் சர்க்கரை Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி Bamboo Rice
வில்வம் பழம் Bael Fruit
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கக்கூடிய ஆரோக்கியமே அவர்களுக்கு நாம் கொடுக்கும் உண்மையான சொத்தாகும், 15 வயது வரை நாம் அவர்களுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்துகளும் உணவுகளும் மட்டுமே அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.
குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு செல்லம் கொடுப்பதாக எண்ணி நாம் அவர்களுக்கு கொடுக்கும் நூடுல்ஸ் போன்ற உணவுகளும், கடைகளில் விற்கும் காற்றடைத்த பாக்கெட்டுகளில் வரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற வகைகளும், மற்றும் பிரபல கம்பெனிகளின் பெயரில் கிடைக்கும் பீட்சா, பொரித்த சிக்கன் போன்ற வகைகளும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கூட்டுவதற்குப் பதில் அவர்களை இளமையிலேயே நோயாளிகளாக மாற்றுகின்றன.
உங்களின் பிள்ளைகளுக்கு நீங்கள் உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் முதலில் கடைகளில் விற்கப்படும் எந்த தயார் (Readymade and Fastfood) உணவுகளையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். குழந்தைகள் எந்த உணவை சாப்பிட விரும்பினாலும் அவற்றை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
உங்களின் குழந்தைகளுக்கு எந்த ஒரு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உங்களின் பொறுப்புகளை தட்டிக் கழிக்க நினைக்காதீர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் வயிற்று செரிமானப் பிரச்சினைகளுக்கும், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு வீட்டு மருத்துவம் செய்யுங்கள், அதுவே போதுமானது. மருத்துவமனை அதிகம் இல்லாத காலகட்டத்தில் உங்களை எப்படி வளர்த்திருப்பார்கள் என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சளி மருந்துகளும், காய்ச்சல் மருந்துகளும், வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்காக கொடுக்கும் மருந்துகளும் அவர்களுடைய நோயை உடம்பிலேயே இருக்க வைத்து பிற்காலத்தில் பெரிய அளவில் உடல் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தையின் எந்த ஒரு உடல் பிரச்சினைகளுக்கும் இயற்கை மருந்துகள் மட்டுமே உண்மையிலேயே நோயை சரி செய்தும், எந்த ஒரு கழிவுகளையும் உடலில் தங்க விடாமல் செய்தும் உண்மையிலேயே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
எந்த ஒரு விளம்பரங்களையும் கண்ணை மூடி நம்பிக்கொண்டு பொருட்களை வாங்காதீர்கள், எந்த ஒரு பெருநிறுவனங்களுக்கும் உண்மையிலேயே நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கிடையாது, அவர்களின் பொருள் எப்படியாவது விற்க வேண்டும் அவ்வளவே.
பாலில் கலக்கி கொடுக்கும் ஒரு டீஸ்பூன் அளவுள்ள ஆரோக்கிய பொடிகளினால் எந்த குழந்தையும் உடனே வளர்ந்து விட முடியாது, மூளை வளர்ச்சியும் உடனே கிடைத்து பெரிய புத்திசாலிகளாகவும் ஆகி விட முடியாது. நீங்கள் உங்கள் வீட்டில் செய்து கொடுக்கும் ஆரோக்கியமான உணவுகளினால் மட்டுமே ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் வளர்க்க முடியும்.
20, 30 வருடங்களுக்கு முன்பு கிடைத்த உணவுப்பொருட்கள் போல இப்போது வரும் உணவு தானியங்கள் கிடையாது. அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு உரம், பூச்சி மருந்துகளை போடும் விவசாயிகளும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கலப்படம் செய்யும் வியாபாரிகளும், யாரொருவரின் உயிரின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை இல்லாத பெருநிறுவன முதலாளிகளும் வாழும் இந்தச் சமுதாயத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடிந்த அளவிற்கு கலப்பிடமில்லாத பொருட்களையும், உரம் பூச்சி மருந்து இல்லாத தானியங்களையும் வாங்கி வந்து, நம் வீட்டில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மட்டுமே, சுற்றுப்புற தீமைகளிலிருந்து காப்பாற்றி நம் குழந்தைகளை மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆகாமல் காப்பாற்ற முடியும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்வியல் முறை, நாம் வாழும் சூழ்நிலை எனப் பல காரணங்களை கூறினாலும், இன்றைய மருத்துவர்கள் சொல்கின்ற அடிப்படை காரணங்களில் முதன்மையானது உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி என்ற உடனேயே அனைவராலும் சொல்லப்படுவது கிருமிகளே. விளம்பரங்களில் சொல்லப்படுவது போல் கிருமிகள் ஒன்றும் வில்லன்கள் அல்ல, உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நம் உடலை நோய்களிலிருந்து பாதுகாத்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருப்பவைகளே இந்தக் கிருமிகள் தான்.
நம் உள்ளும் புறமும் இருக்கும் இந்தக் கிருமிகளை அழிப்பதன் மூலம்தான் நாம் நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம். நம் உடலின் வெளிப்புறம் இருக்கும் கிருமிகளை சோப்புகளின் மூலமாகவும், நம் உடலின் உள்ளே இருக்கும் கிருமிகளை கெமிக்கல் உணவுப்பொருட்கள், பூச்சி மருந்துகள் கலந்த குளிர்பானங்கள், போஸ்டர் ஒட்ட மட்டுமே தகுதியான மைதா பொருட்களினால் தயார் செய்யப்பட்ட புரோட்டா, பீட்சா மற்றும் பேக்கரி உணவுகள் மூலம் நல்ல பாக்டீரியாக்களை (GUT BACTERIA) கொன்று கெட்ட கிருமிகளை மட்டும் வளர்த்து நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம்.
குழந்தைகளை மண்ணில் விளையாட அனுமதியுங்கள், கிடைக்கும் எல்லா குடிநீரையும் குடிக்க அனுமதியுங்கள், தினமும் சிறிது நேரம் கண்டிப்பாக வெளியில் சென்று விளையாட விடுங்கள். வெறுமனே ஆரோக்கிய பானங்களும், உணவுகளும் , நோய் தடுப்பு ஊசிகளும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து விடாது.
குண்டுக் குழந்தைகள் கண்டிப்பாக ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகளாக இருக்க முடியாது. எனவே குண்டுக் குழந்தைகளை அப்படியே விட்டு விடாமல் தேவையில்லாத ஜங்க் உணவுகளை சாப்பிட விடாமல் தடுத்து, உடலுக்கு சிறு சிறு வேலைகள் கொடுத்து விளையாட விட்டு ஆரோக்கியமானவர்களாக மாற்றுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில் நிறைய உடல், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள்.
குழந்தைகளுக்கு போதுமான தூக்கம்…
உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் சரியாக நடைபெற தூக்கம் மிகவும் அத்தியாவசியமானதாகும். நன்றாக படிக்கவும், நன்கு வளரவும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகவும் நல்ல தூக்கம் தேவை.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவே இயற்கையான மருந்தாக இருக்கிறது. எளிமையாகவும், எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாத வகையிலும், அதிக செலவு வைக்காமலும் உள்ள இந்த உணவு வகையை பின்பற்றி நாம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். சிறந்த மற்றும் தரமான உணவை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாகவும் நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கு பால் உணவுகள் கொடுங்கள்…
தயிர், மோர் , நெய் போன்ற பாலின் உபபொருள்களில் 'ப்ரோபயாட்டிக்' என்று சொல்லப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை குடலில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. (மேற்கண்ட தயிர், மோர் , நெய் போன்றவை வீட்டில் தயார் செய்யப்பட்டவையாக இருந்தால் நல்லது, ஏனென்றால் பால் என்ற பெயரில் யூரியா, சோப் பவுடர் கலக்கப்பட்ட கலவைகளும், தயிர், மோர், நெய் என்ற பெயரில் கலப்படங்களும் மட்டுமே கடைகளில் கிடைக்கின்றன)
காய்கறிகளும், கீரை வகைகளும் அதிகமாக கொடுங்கள்
இவைகளில் மட்டுமே குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். பூண்டும், சிறிய வெங்காயமும் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டது.
ஆன்டி-பயாடிக் மஞ்சள்
வீட்டில் தயாரிக்கப்பட்ட மஞ்சள்பொடியை தினமும் சுத்தமான பசும்பாலில் கலந்து கொடுப்பது குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களை வர விடாது.
கொட்டை வகைகள்
பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் காணப்படும் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. மேலும் உடலின் நல்ல கொழுப்பையும் அதிகரிக்கிறது.
முளை கட்டிய தானியங்கள்
முளை கட்டிய தானியங்களில் சத்துகள் எல்லாம் பல மடங்கு அதிகரிக்கிறது. அதாவது ஒரு தானியம் முளைத்து வெளியே வரும் போது அதில் உள்ள சத்துகள் எல்லாம் ஊட்டம் மிக்க ஒன்றாக மாறி விடுகிறது. இந்த சத்துகளை உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதுபோல் முளைகட்டிய தானியங்களை நீங்கள் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எளிதாகவே கிடைக்கும். முளை கட்டிய தானிய வகைகளில் இருந்து நீங்கள் சத்துமாவு தயார் செய்து கொள்ளலாம். மேலும் முளை கட்டிய கேழ்வரகில் இருந்து பொடி செய்து அதனையும் குழந்தைகளுக்கு தரலாம்.
மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் பின்பற்றி சிறந்த ஒரு எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவோம்…
தொடர்புக்கு...
For Contact...