அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல்…

 அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல்…






பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 


மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்!

'மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிதுஎன்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை... எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர்.


புல் வகைகளின் அரசன்!

அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள்.

'அருகே... புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுகஎன்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.


அபார சக்தி கொடுக்கும் அருகு!

'அருகன்' என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம்.

இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். 'அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை 'விஷ்ணு மூலிகைஎன்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை 'பால வாகடம்' என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குருமருந்து' எனவும் அழைக்கிறார்கள்.


அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய்!

காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது.
இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். 'பால் அரிசி வைத்தல்என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.


இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!

தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும்.  


கிரீன் பிளட்..!

அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

'ஆல்போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... ஆரோக்கியமாய் வாழ்வோம்.


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...