புது இரத்தம் ஊற வைத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள்…


புது இரத்தம் ஊற வைத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள்…
பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit
 
உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

என்ன தான் இரத்தம் உடலில் இயற்கையாக சுத்திகரிக்கப் பட்டாலும், நாம் உண்ணும் சில உணவுகளால் அசுத்தமாகத் தான் செய்கிறது. இதனைத் தவிர்க்க இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உடலில் இருக்கும் இரத்தத்தை ஒருசில உணவுப் பொருட்கள் சுத்தம் செய்யும். இப்படி இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்முறையின் போது நோயெதிர்ப்பு மண்டலமும் மேம்பட்டு, சரும ஆரோக்கியமும் ஊக்குவிக்கப்படும்.

இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து ஒரு வாரம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தை விரைவில் சுத்தம் செய்ய முடியும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று பார்ப்போமா!


ஆப்பிள்

மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படும் ஆப்பிள் சளியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, அசிடிட்டியைக் குறைக்கும் மற்றும் இரத்தத்தையும் சுத்தம் செய்யும். இப்பழத்தினுள் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் ஆப்பிளை தோலுடன் தான் (மெழுகு தடவிய ஆப்பிள் கிடையாது) சாப்பிட வேண்டும். அதில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது தான் உடலில் இருந்து கனமான மெட்டல் பொருட்களை அகற்றும்.

பூண்டு

 பூண்டில் இவ்வளவு தான் நன்மை அடங்கியுள்ளது என்றில்லை. இதன் மருத்துவ குணத்தால், இதனைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அப்படிப்பட்ட பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யாதா என்ன? இதற்கெல்லாம் முக்கிய காரணம் பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள் தான். ஆகவே இரத்தத்தை சுத்தம் செய்ய பூண்டுகளை உணவில் சேர்ப்பதோடு, தினமும் ஒன்றை பச்சையாக சாப்பிடுங்கள்.


பீட்ரூட்

 பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான , சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட பீட்ரூட் பீட்டாசையனின் நிறமியால் தான், அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த நிறமி, கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுவதோடு, இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் சிறப்பாக ஓடவும் உதவி புரியும். மேலும் இதில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.


ப்ராக்கோலி

 காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவைகள் அதிகம் உள்ளது. அதோடு இதில் சல்போராபேன் என்னும் பைட்டோகெமிக்கலும் உள்ளது. இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி, இரத்தத்தை சுத்தம் செய்து, கார்சினோஜென்களை வெளியேற்றும்.


திராட்சைப்பழம்

  இந்த அற்புதமான பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் சுத்தமாவதோடு, இரத்தமும் சுத்தமாகும். மேலும் இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், ஒட்டுமொத்த உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இத்தகைய பழத்தை அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தால், அது கல்லீரல் நொதிகளை ஊக்குவித்து, டாக்ஸின்கள் மற்றும் கார்சினோஜென்களை வெளியேற்றும்.மஞ்சள் தூள்

 மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் இரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.

 
செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு  தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.


முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர  இரத்தம் விருத்தியாகும்.


நாவல் பழம்

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.


இலந்தைப் பழம்

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும்  தன்மை கொண்டது.


நெல்லிக்காய்

நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.


புதினா இலை மற்றும் வேப்பிலை

புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும்  வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.


சித்த ஆயுர்வேத மருந்துகளின் மூலமாக ஹீமோகுளோபினை எளிதாக உயர்த்திக் கொள்ள முடியும். வெறும் 2 மாதங்களில் 10 அளவிலிருந்து 15 அளவிற்கு உயர்த்த முடியும். அதற்கான மருந்துகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட IMPCOPS Store-ல் வாங்கி உபயோகித்து பயன் பெறுங்கள்.

சித்த மருந்துகள்

1.   அன்னபேதிச் செந்தூரம் நெ.1 & நெ.2
2.   அயச் செந்தூரம்
3.   அய பிருங்கராஜ கற்பம்
4.   அய காந்தச் செந்தூரம் நெ1. & நெ.2
5.   ஆறுமுகச் செந்தூரம்
6.   காந்தச் செந்தூரம்
7.   கரிசாலை லேகியம்
8.   க்ஷயகுலாந்தகச் செந்தூரம்
9.   உலோக மண்டூரம்
10. மண்டூரச் செந்தூரம்
11. சுயமக்கினிச் செந்தூரம்

ஆயுர்வேத மருந்துகள்

1.   சிஞ்சாதி லேஹ்யம்
2.   தாத்ரீ லோஹம்
3.   காந்த பஸ்ம
4.   காந்த வல்லப ரஸ
5.   காஸீஸ பஸ்ம
6.   குமார்யாஸவ
7.   லோஹாஸவ
8.   லோஹ பஸ்ம
9.   லோஹ ரஸாயனம்
10. மண்டூர பஸ்ம
11. மண்டூர வடகம்
12. நவாயஸ சூர்ணம் & மாத்திரை
13. ப்ராணதா குடிகா
14. ரஜதலோஹ ரஸாயனம்
15. சிலாஜத்வாதி லோஹம்
16. தாப்யாதி லோஹம்

யுனானி மருந்துகள்

1.   அனோஷ்தாரு லுலூயி
2.   அனோஷ்தாரு ஸாதா
3.   தவா-உல்-மிஸ்க் மோததில் பாஜவாஹிர்
4.   தவா-உல்-மிஸ்க் மோததில் ஸாதா
5.   ஜவாரிஷ்-எ-ஜாலினூஸ்
6.   குஷ்டா-எ-ஃபவ்லாத்
7.   ஷர்பத்-எ-அனார் ஷிரீன்இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை  வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம்  ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.

மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...