செயலூட்டம் பெற்ற கரியின் (Activated Carbon) நன்மைகள்


செயலூட்டம் பெற்ற கரியின் (Activated Carbon) நன்மைகள்




பிரண்டை உப்பு                          Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                           Bael Fruit
 




நாம் சாதாரணமாக நினைக்கும் கரி நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு பொருளாகும், ஆச்சரியமூட்டும் வகையில் கரியில் அளவில்லாத நன்மைகளும் பயன்பாடுகளும் உள்ளன.

பெரிய அளவில் செலவே இல்லாத இந்த கரி நம் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் மிகப்பெரிய அளவில் பயனளிக்கிறது.

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) சில சமயங்களில் நம் உயிரைக்கூட காப்பாற்றும், மற்றும் மேலும் நம் தோல் நலம், ஆரோக்கியம் மற்றும் பல விஷயங்களுக்கும் உதவுகிறது.

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) என்றால் என்ன? அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) என்பது மரங்களை எரித்தும், தேங்காய் சிரட்டை ஓடுகளை எரித்தும் கிடைக்கக் கூடியதாகும்.

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) பெரும்பாலும் விஷமுறிவாக பயன்படுகிறது எப்படி என்றால், தாவர நச்சுக்களும், விஷங்களும் இரசாயனங்களும் நம் உடலில் சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்துவதற்கு முன்னால் செயலூட்டம் பெற்ற கரி உறிஞ்சிக் கொள்கிறது.

ஒரு சதுர இன்ச் கனமுள்ள செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) 1,50,000 சதுர அடி அளவிலான நச்சுக்களை (Toxins) உறிஞ்சிக் கொள்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) நம் உடலில் நச்சுக்கள் சேர்வதை 60% வரை தடுக்கிறது. அதனால் தான் உலகமெங்கும் உள்ள அவசர சிகிச்சை மையங்களில் அனைத்தும் செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) வைக்கப்பட்டுள்ளது.

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) உணவு விஷமாதலில் (Food Poisoning) உயிர் காப்பான் (Life Saver) என்பதற்கும் மேலாக செயல்படுகிறது.

செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) நமது அன்றாட வாழ்க்கையில் கிட்டதட்ட 20 க்கும் மேற்பட்ட ஆரோக்கியத்திற்கும், தோல் நலத்திற்கும் தொடர்பான விஷயங்களை செய்கிறது.

பல் துலக்குவதற்கும், தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கும், தேனி கொட்டுதலுக்கு சிகிச்சை செய்வதற்கும், பல் தொற்றுகளுக்கும் பயன்படுகிறது.

இதன் மதிப்பு அளவில்லாதது…

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) எப்படி வேலை செய்கிறது?
செயலூட்டம் பெற்ற கரி நச்சுக்களை உறிஞ்சுவதில்லை (Absorbtion), மாறாக அவற்றை வேதியியல் முறையில் (Adsorbtion) தன்னுடைய பரப்பின் மீது ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. இதன் மீது உள்ள பல இலட்சக் கணக்கான நுண்ணிய துளைகளின் மீது ஒட்டிக் கொள்ளச் செய்கிறது.

செயலூட்டம் பெற்ற கரியின் (Activated Carbon) ஆரோக்கியத்திற்கான பயன்பாடுகள், அழகுக்கான பயன்பாடுகள் என்னென்ன உள்ளனவோ அவை அனைத்தும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன…

1. உணவு விஷமாதலில் கொடுக்கப்படும் முதலுதவியில்- செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) நிறைய இறப்புகளை தடுத்து விடுகிறது. இதனுடைய எடையை விட பல மடங்கு எடையுள்ள விஷங்களையும், நச்சுக்களையும் உறிஞ்சிக் கொள்வதினால் இது சாத்தியமாகிறது.
தேவையானபோது முதலில் அரை டீஸ்பூனில் ஆரம்பித்து பிறகு தேவைக்கேற்ப 2-3 மணி நேரங்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
செயலூட்டம் பெற்ற கரியை மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது தேவையான அளவிற்கு மேல் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமது குடலில் படிந்து விடும். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் கண்டிப்பாக மருத்துவரையும் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

2.  அவசரமாக நச்சுக்களை வெளியேற்றும் போது (Emergency Toxin removal): குடும்பத்தில் உள்ள யார் ஒருவராய் இருந்தாலும் (குழந்தைகள் உட்பட) தவறுதலாய் மருந்துகளையோ அல்லது கெமிக்கல்களை உட்கொண்டு விட்டாலும் செயலூட்டம் பெற்ற கரி உயிரைக் காப்பாற்றுகிறது.
நிறைய தாவர விஷங்களும், பாதரசம், பூச்சி மருந்துகள், உரங்கள் மற்றும் குளோரினையும் (பிளீச்) செயலூட்டம் பெற்ற கரி இழுத்து உறிஞ்சி நம் உடலை விட்டு விரைவாக கழிவாக வெளியேற்றுகிறது

மிச்சிகன் ஹெல்த் சிஸ்டம் யூனிவர்சிட்டி-யின் ஆராய்ச்சிப்படி ( University of Michigan Health System) பெரியவர்களுக்கு 50கிராமும், சிறியவர்களுக்கு 10 கிராமுக்கு மிகாமலும் கொடுக்க வேண்டும்.

3.வயிற்றில் வாயு மற்றும் உப்புசத்திற்கு நிவாரணம்: செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) கெட்ட வாயுக்களை உருவாக்கும் உணவிலிருக்கும் பொருட்களை உறிஞ்சிக் கொண்டு வாயுவிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சாப்பிடும் அளவு: வாயுவை உருவாக்கும் உணவுகளை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) 500Mg அளவிற்கு ஒரு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட வேண்டும். மற்றொரு 500Mg சாப்பாட்டிற்கு பின்பும் சாப்பிட நன்றாக வேலை செய்யும்.

4.பல்லில் ஏற்படும் தொற்று மற்றும் கட்டிகள்: செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) பல்லில் ஏற்படும் தொற்றுகளையும் மற்றும் கட்டிகளையும் வீட்டிலேயே சரி செய்ய முடியும்.
பல்லில் ஏற்படும் தொற்றுகளை சரி செய்ய செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை Oil Pulling செய்ய சரியாகும்.

5.பற்களை வெண்மையாக்க மற்றும் பற்குழிகளை தடுக்க: உலகிலேயே பற்களை வெண்மையாக்கும் இயற்கையான பொருட்களில் செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) முக்கியமான சிறந்த பொருளாகும்.
செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) வாயின் PH Balance-ஐ சரி செய்து பற்குழிகள் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. கெட்ட சுவாசத்தையும் சரி செய்கிறது.
குறைந்தது வாரத்திற்கு 2 முறையாவது செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) வைத்து பல் துலக்கி வர, பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

6. கொசுக்கடிகள் மற்றும் தேனி கொட்டலுக்கு நிவாரணம்: தோராயமாக 500Mg அளவுள்ள செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கடிபட்ட இடத்தில் தடவ வேண்டும். வலி தீரும் வரை ½ மணிக்கொரு முறை தடவ வேண்டும்.
அல்லது கடிபட்ட இடத்தில் செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) கறை விழும் அளவிற்கு கட்டுப் போட்டு வைக்க வேண்டும்.

7. விஷ சிலந்திகள் கடிக்கு: கடிபட்டு வீக்கமாக உள்ள இடத்தை விட 2 மடங்கு பெரிய துணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) தேங்காய் எண்ணெயுடன் நன்கு கலந்து மேலே சொல்லப்பட்ட அளவுள்ள துணியில் தடவி போல்டிஸ் போல போட வேண்டும். இதை 2-3 மணி நேரத்திற்கு ஒரு தடவை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் திரும்ப போடுவதற்கு முன்பு கடிபட்ட இடத்தை நன்கு கழுவ வேண்டும்.

8. முகப்பரு: செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) பருவிலிருக்கும் toxins மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுத்து விடுகிறது.  500Mg அளவில் எடுத்து 2 டீஸ்பூன் அளவுள்ள சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது தேனுடன் கலந்து போட்டு 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

9. செரிமான உறுப்புகளை சுத்தம் செய்ய: Oxidative damage அலர்ஜி ஏற்படுத்தும் Toxin-களை செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) அகற்றுகிறது.

நம் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் கெமிக்கல்களை சுத்தம் செய்து நமது உடல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.
Toxin-களை நம் உடலை விட்டு வெளியேற்றும் போது நமது உடலில் உள்ள மூட்டு வலியிலிருந்து மூளை வரை நன்றாக வேலை செய்ய வைக்கிறது.

செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) உபயோகப்படுத்தி நமது உடலை Cleanse செய்ய ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் 90 நிமிடங்களுக்கு முன்பும் 10 கிராம் அளவிற்கு 2 நாட்களுக்கு சாப்பிட்டால் போதுமானது.

10. கொலஸ்டிராலை குறைக்க: செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) சாப்பாட்டிற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு 8 கிராம் அளவில் 1 நாளைக்கு 3 முறை அளவில் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வர (குறைந்தது 1 மாதத்திற்காவது) LDL அளவுகள் நன்றாக குறைந்து HDL அளவு கூடுகிறது.
நீங்கள் மற்ற ஏதாவது மருந்துகள்  சாப்பிடுபவராக இருந்தால் செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) எந்த ஒரு மருந்தும் சாப்பிடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு எடுக்கக் கூடாது. மருந்தின் தன்மையை செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) உறிஞ்சி விடும்.

11. கண் தொற்றுகளுக்கு: கண் சிவப்பு மற்றும் மற்ற கண் தொற்றுகளுக்கு செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) சிறந்த மற்றும் விரைவான சிகிச்சை முறையாகும். எந்த அளவுக்கு விரைவாக சிகிச்சையை ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு விரைவான நிவாரணம் கிடைக்கும்.
மேலும் இந்த சிகிச்சை முறை கண்ணிற்கு மிகப் பாதுகாப்பான ஒரு முறையாகும்.
கண்ணிற்கு சிகிச்சை அளிப்பதற்கு, ஒரு டிப்-டீ பவுச்சை காலி செய்து அதற்குள் செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) போட்டு அந்த பையை ஈரப்படுத்தி கண்ணின் மீது 20 நிமிடங்கள் போட்டு வைக்க வேண்டும்.
கண் குணமாகும் வரை 2 மணிக்கொரு முறை திரும்ப திரும்ப செய்து வர வேண்டும்.

12. வலி நிவாரணத்திற்கு: எந்த மாதிரியான வலியாக இருந்தாலும், அது மூட்டு வலியாக இருந்தாலும் அல்லது மாதவிலக்கிற்கான வலியாக இருந்தாலும் மேலும் எந்த வலியாக இருந்தாலும் செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) இரவு முழுவதும் போல்டிஸ் போல போட்டு வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வலி நிவாரணத்திற்கு மிக எளிதான வழி செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) குளிக்கும் வெந்நீரில் ஒரு கப் அளவு கலந்து குளித்தால் வலி பறந்தோடி விடும்.

மற்றொரு வழிமுறை, செயலூட்டம் பெற்ற கரியுடன் (Activated Carbon) அரைத்து வைத்த ஆளி விதைகளை சமமாக கலந்து வலி உள்ள இடத்தில் போட்டு விட்டு, கலவை நகலாமல் இருக்க கட்டு போட்டு விட வேண்டும்.
4 மணிக்கு ஒரு முறை கட்டை மாற்ற வேண்டும்.

13. தீப்புண்கள்: செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) தீப்புண்களின் வலியை மிக வேகமாக சரி செய்கிறது. செயலூட்டம் பெற்ற கரியுடன் (Activated Carbon) அரைத்து வைத்த ஆளி விதைகளை சமமாக கலந்து அத்துடன் சிறிது நீரும் கலந்து போல்டிஸ் போல போட வேண்டும்.

14. தலையில் முடியுள்ள பகுதி (Scalp) சிவப்பாக இருப்பது, பொடுகு, அதிக எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் தலை அரிப்பு போன்றவற்றிற்கு செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) மிகச் சிறந்த நிவாரணம் தருகிறது.

நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பூ செய்வதற்கு முன்போ அல்லது ஷாம்பூவுடன் கலந்தோ உபயோகப்படுத்தலாம். செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) தலைபகுதியிலிருக்கும் Toxin-களை உள்ளேயிருந்து உறிஞ்சி தலையின் தோல் பகுதியை சுத்தம் செய்கிறது.

15. நீரை சுத்தப்படுத்துதல்: செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) நீரிலிருந்து நச்சுக்களை உறிஞ்சி எடுக்க வாட்டர் ஃபில்டர்களில் பயன்படுத்தப் படுகிறது.
செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) உங்கள் முகத்திலும், தலையிலும் தடவுவது பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம், நீங்கள் அதனால் கிடைக்கக்கூடிய ஆச்சரியப்படத்தக்க பயன்களை பார்க்கும்வரை…

இந்த சொரசொரப்பான பொடி உங்கள் தலைமுடி மற்றும் தோலை இயற்கையான முறையில் சுத்தம் செய்கிறது. செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) டியோடரன்ட்கள், சோப், க்ரீம் மற்றும் ஃபேஸ் மாஸ்க் போன்ற நிறைய அழகு சாதன பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) பற்களின் கறைகள், துர்நாற்றம், தோலின் கரும்புள்ளி, எண்ணெய் பசையுள்ள சருமம், தழும்புகள் மற்றும் முகப்பருக்களுக்கு சிறப்பான தீர்வு அளிக்கிறது.

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) எவ்வாறு முகம், முடி மற்றும் தோலில் செயல்படுகிறது என்பதனை பற்றிய முழு பட்டியல் இங்கே:

1. தோலில் உள்ள நுண்துளைகளை சுத்தப்படுத்துதல்: செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) ஃபேஸ் மாஸ்க்-களில் பயன்படுத்தப் படும்போது உள்ளிருக்கும் அழுக்குகளை உறிஞ்சி வெளியே கொண்டு வருகிறது, அழுக்குகளை பார்வைக்கு தெரியாத அளவிற்கு மங்கலாக்குகிறது…
நல்ல முடிவுகளுக்கு ஸ்கிரப்-உடன் சேர்ந்து பயன்படுத்தவும்.

2. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கான சிகிச்சை: க்ளன்ஸர் அல்லது ஃபேஸ் மாஸ்கில் இருக்கக் கூடிய செயலூட்டம் பெற்ற கரியானது (Activated Carbon) தோலிற்கு உள்ளிருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை வெளியே இழுத்து கொண்டு வருகிறது, தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது.
செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) ஒரு வாரத்திற்கு 2 முறைக்கு மேல் உபயோகப்படுத்தினால் தோல் வறண்டு விடும்…

3. தலைமுடியிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முடியின் அளவை அதிகப்படுத்தவும்: செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) ஷாம்பூ-வுடன் கலந்து உபயோகப் படுத்தும்போது உள்ளிருக்கும் கெமிக்கல்களையும் மறைந்திருக்கும் அழுக்கையும் தலைப்பகுதியை விட்டு வெளியே கொண்டு வருகிறது. மிக மெலிதாக இருக்கும் முடியில் இதை உபயோகிக்க வேண்டாம்.

உங்கள் தலைமுடி மிகவும் கனமாகவும், தொய்வாகவும் உணரும்போது செயலூட்டம் பெற்ற கரியினால் (Activated Carbon) ஒரு முறை டீப்-க்ளன்சிங்க் செய்தால் உங்கள் முடியின் அளவை அதிகப்படுத்திக் காட்டும்.

4. ஐ-லைனர் மற்றும் மஸ்காரா: செயலூட்டம் பெற்ற கரிதான் (Activated Carbon) வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஐ-லைனர் மற்றும் மஸ்காராவிற்கு முக்கியமான மூலப்பொருளாக உள்ளது.

5. செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) மட்டும் உபயோகப்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செயல்முறை: இந்த செய்முறையை 1 வாரத்தில் இருமுறை பயன்படுத்தி பளபளக்கும் மிருதுவான முகத்தை பெறுங்கள்.
முதல் நிலை: 1 டேபிள் ஸ்பூன் அளவுள்ள செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) 1 டேபிள் ஸ்பூன் அளவுள்ள தேங்காய் எண்ணெயுடன் கலந்து பிறகு தேவையான அளவு பதத்திற்கு வரும் வரை சொட்டு சொட்டாக நீர் கலக்கவும்..
    இரண்டாம் நிலை: இந்தக் கலவையை முகத்தில் தடவி விட்டு காயும் வரை காத்திருக்கவும்.
மூன்றாம் நிலை: இதைத் தொடர்ந்து மாய்ஸரைசரையோ அல்லது உங்களுக்கு பிடித்தமான எண்ணெயையோ பயன்படுத்தலாம்
   
6.  சோப்: செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) சோப்பில் சேர்க்கும்போது அதற்கு சிறப்பு சேர்க்கிறது. இது சற்று சொரசொரப்பாக இருந்தாலும் கூட தோலிலிருந்து toxins-ஐயும் மற்றும் அழுக்கையும் எளிதாக விலக்குகிறது.

7. செயலூட்டம் பெற்ற கரியால் (Activated Carbon) செய்யப்படும் சோப் தோலில் ஏற்படும் வயதான தோற்றத்திற்குரிய அடையாளங்களை குறைக்கிறது

இப்போது முடிவாக நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் வரும், உண்மையிலேயே செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) நமது உபயோகத்திற்கு பாதுகாப்பானது தானா?

செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) பொதுவாக பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் சுற்றுப்புறத்திற்கும் நன்மை மட்டுமே செய்கிறது. செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் பார்க்க முடியும். உணவிற்கு நிறமூட்டுதல், தண்ணீரை சுத்தப்படுத்துதல் மற்றும் சிறுநீரக டயாலிஸிஸ் மெஷின்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.  

செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்:
A.   அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
B.   மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உற்சாக பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு கண்டிப்பாக செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) சாப்பிட்டிருக்கக் கூடாது..
C.  செயலூட்டம் பெற்ற கரி (Activated Carbon) பயன்படுத்தும்போது உங்கள் வீட்டின் தரை மற்றும் ஆடைகளில் கறை படியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
D.  செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) தொடர்ச்சியாக மருந்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
E.   எப்போதுமே மிகவும் சுத்தமான, உயர்ந்த தரம் வாய்ந்த தேங்காய் சிரட்டை ஓடுகளினால் செய்யப்பட்ட செயலூட்டம் பெற்ற கரியை (Activated Carbon) உபயோகப்படுத்துவதே சிறந்தது.

நன்கு பாதுகாப்பான காற்று புகாத புட்டிகளில் வைத்திருக்கும் போது ஆக்டிவேட்டட் கார்பன் -க்கு (Activated Carbon) Expiry Date என்பது கிடையாது.

www.k7herbocare.com



 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...