உங்களுக்கு இருப்பது சாதாரண மூட்டு வலியா? அல்லது மூட்டு முடக்கு வாதமா? (Rheumatoid Arthritis)

உங்களுக்கு இருப்பது சாதாரண மூட்டு வலியா?
அல்லது மூட்டு முடக்கு வாதமா? (Rheumatoid Arthritis)பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit
  இன்றைய காலத்தில் எந்த ஒரு நோயும் விரைவில் உடலை தாக்குகிறது. அதிலும் சில நேரங்களில் அதிகமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்து விட்டால், ஆங்காங்கு வலிகள் ஏற்படும். இதற்கு உடலில் உள்ள எலும்புகளுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பது அர்த்தம். ஆகவே உண்ணும் உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அதிலும் சிலருக்கு மூட்டுகள் மட்டும் அதிக வலியுடன் இருக்கும். அவ்வாறு வலி ஏற்பட்டால், எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அப்படி உங்களுக்கு நீண்ட நாட்கள் வலி இருந்தால், மூட்டு முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) உள்ளது என்று அர்த்தம்.
மூட்டு முடக்கு வாதம் என்பது நாள்பட்ட மூட்டுவலி. அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும். அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, மூன்று மடங்கு அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த முடக்கு வாதம் நுரையீரல், இதயத்தை சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளியூரா, கண்ணின் வெள்ளை பகுதியான ஸ்கிளிரா போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த முடக்கு வாதத்தை சோதனை செய்ய நிறைய சோதனை முறைகள் உள்ளன.
சரி, இப்போது அந்த முடக்கு வாதம் எந்தெந்த இடங்களை எல்லாம், தாக்குமென்று பார்ப்போமா!!!

முழங்கால்கள்
முழங்கால்களில் வீக்கம் ஏற்பட்டால் நடக்கவே முடியாது. இவை அடிக்கடி ஏற்படுவதற்கு அந்த இடத்தில் உள்ள மூட்டுகளுக்கான திரவம் அதிக அளவில் சுரப்பதால் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலி வருகிறது. அதிலும் இது அடிக்கடி முட்டியில் இடித்தாலோ அல்லது முட்டிக்கால் போடுவதால், அதிகம் ஏற்படுகிறது.

தோள்பட்டை மற்றும் முழங்கை
எப்போதும் முடக்கு வாதத்தில் பாதிக்கப்படும் இடங்களில் முக்கியமான ஒரு பகுதி தான் தோள்பட்டை. இந்த வலி ஏற்பட்டால், எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஏன் கையை கூட அசைக்க முடியாத நிலையில் நீண்ட நாட்கள் வலி ஏற்படும்.

கண்கள்
முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். மேலும் மற்ற கண் பிரச்சனைகளான கருவிழியில் வீக்கம் அல்லது கண்ணின் வெள்ளை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் வீக்கம் போன்றவையும் இதற்கு காரணங்களாகின்றன. அந்த வீக்கம் கண்களில் சிவப்பு நிறத்தில் வீக்கத்துடன் காணப்படும்.

கழுத்து மற்றும் தாடை
சில நேரங்களில் கழுத்து நிறைய வலியுடன் இருக்கும். இவ்வாறு வலியானது நீண்ட நாட்கள் ஏற்பட்டால், கழுத்துடன் இணைந்துள்ள தாடையிலும் வலி ஏற்படும்.

நுரையீரல் மற்றும் இதயம்
இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டால், சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, அவையே அனீமியாவை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு சரியான இரத்த ஓட்டமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது.
கைகள் மற்றும் மணிக்கட்டு
முடக்கு வாதம் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் கூட அதிகம் ஏற்படும். அதிலும் அந்த வலி வந்தால், கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளை சுழற்றவோ முடியாது. அதிலும் இது ஏற்படுவதற்கு கைகள் எப்போதும் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தால், சரியான இரத்த ஓட்டம் இல்லாமல், அந்த இடத்தில் புண் அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும்.

பாதம் மற்றும் கணுக்கால்
இந்த நோய் வந்தால், முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று தான் பாதம் மற்றும் கணுக்கால். இந்த இடத்தை தான் முதலில் முடக்கு வாதம் தாக்கும். இவை வந்தால், அதிக வலியுடன், நடக்கக்கூட முடியாமல் இருக்கும்.

மூட்டு முடக்கு வாதத்தால் (Rheumatoid Arthritis) பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையையே முடக்கும் அளவிற்கு மிகவும் கொடுமையானதாகும். பாதிக்கப்பட்டவருக்கு நடமாட்டமும் குறைந்து விடும், ஒவ்வொரு நாளின் பாதிப்பின் அளவுகள் கூடிக் கொண்டே மட்டும் தான் இருக்கும். இதற்கு இன்று வரை நவீன மருத்துவத்தில் எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், வாழ்க்கை முழுவதற்கும் வலி நிவாரணிகளும் அப்படி இல்லாத பட்சத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கும் மட்டுமே நோயாளிகள் பரிந்துரை செய்யப் படுகிறார்கள்.

மூட்டு முடக்கு வாதத்தால் (Rheumatoid Arthritis) பாதிக்கப்பட்டவருக்கு நிரந்தரமான குணம் கிடைக்க வேண்டுமென்றால் சித்த, ஆயுர்வேத சிகிச்சைகளினால் மட்டுமே முடியும். பாதிப்பிற்கேற்றவாறு 3-6 மாதங்களில் 75% க்கு மேல் உறுதியான குணம் கிடைக்கும்.

மூட்டு வாதக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள்: For Rheumatic Fever
1.அயவீரச் செந்தூரம்
2.ஆனந்த பைரவம்
3.சண்டமாருதம்
4.குங்குமப்பூ மாத்திரை
5.இராஜ ராஜேஷ்வரம்
6.திரிதோஷ மாத்திரை
7.விஷ்ணுச் சக்கரம்
8.வாதராட்சசன்

மூட்டு வாதக் காய்ச்சலுக்கு ஆயுர்வேத மருந்துகள்: For Rheumatic Fever
1.சதுர்முக ரஸ
2.தசமூல கடுத்ரயாதி க்வாத சூரணம்
3.கந்தர்வ ஹஸ்தாதி க்வாத சூர்ணம்
4.காலாக்னி ருத்ர ரஸ
5.மஹா ராஸ்னாதி க்வாத சூர்ணம்
6.ராஸ்னாதி க்வாத சூர்ணம்
7.ஸமீரபன்னக ரஸ
8.ஸ்வர்ண வாதராக்ஷஸ
9.வாத கஜாங்குஸ ரஸ
10.வாத ராக்ஷஸ
11.வாத வித்வம்ஸினி ரஸ

மூட்டு வாதக் காய்ச்சலுக்கு யுனானி மருந்துகள்: For Rheumatic Fever
1.அரக்-எ-முஸாஃப்பி
2.ஹப்-எ-அஸராகி
3.ஹப்-எ-புகார்
4.ஹப்-எ-ஃபீல்பா
5.ஹப்-எ-அயாரிஜ்
6.ஹப்-எ-மதனி
7.ஹப்-எ-கரன்ஃபல்
8.ஹப்-எ-ஸூரஞ்சான்
9.ஹப்-எ-வஜ் வர் ரேஹம்
10.மாஜூன்-எ-ஸூரன்ஜான்
11.குர்ஸ்-எ-மதனி
12.ஸூபூஃப்-எ-ஸூரஞ்சான்

இணைப்புத் திசுக்களில் ஏற்படும் வலி, விறைப்புத் தன்மை மற்றும் அழற்சி/ மூட்டுவாதம், உள்ளுக்குள் கொடுக்கும் சித்த மருந்துகள்- For Rheumatism –For oral use
1.அயவீரச் செந்தூரம்
2.ஆறுமுகச் செந்தூரம்
3.சண்ட மாருதம்
4.கௌரி சிந்தாமணி
5.மகாவீர மெழுகு
6.மெருகுள்ளித் தைலம்
7.நந்தி மெழுகு
8.நவவுப்பு மெழுகு
9.இரசகெந்தி மெழுகு
10.வாத ராட்சசன்
11.வெள்ளையெண்ணெய்

இணைப்புத் திசுக்களில் ஏற்படும் வலி, விறைப்புத் தன்மை மற்றும் அழற்சி/ மூட்டுவாதம், உள்ளுக்குள் கொடுக்கும் ஆயுர்வேத மருந்துகள்- For Rheumatism –For oral use
1.A)க்ஷீரபலா தைலம் மற்றும்                                                B).தான்வந்த்ர தைலம் கேப்சூல் & துளிகள்                                   (101 முறை ஆவர்த்தித்தது)
2.லோஹ ஸௌவீரம்
3.மஹா ராஸ்னாதி க்வாத சூர்ணம்
4.மஹா யோகராஜ குக்குலு
5.பஞ்சதிக்த குக்குலு க்ருதம்
6.ராஸ்னாதி க்வாத சூர்ணம்
7.ஸ்வர்ண வாத ராக்ஷஸ
8.த்ரதயோதசாங்க குக்குலு
9.வாத கஜாங்குஸ ரஸ
10.வாத ராக்ஷஸ
11.வாத வித்வம்ஸினி ரஸ
12.யோகராஜ குக்குலு

இணைப்புத் திசுக்களில் ஏற்படும் வலி, விறைப்புத் தன்மை மற்றும் அழற்சி/ மூட்டுவாதம், உள்ளுக்குள் கொடுக்கும் யுனானி மருந்துகள்- For Rheumatism –For oral use
1.அரக்-எ-முஸாஃப்பி
2.ஹப்-எ-அம்பர்
3.ஹப்-எ-ஸூரன்ஜான்
4.இத்ரிஃபல்-எ-அஃப்திமூன்
5.இத்ரிஃபல்-எ-முகில்
6.மாஜூன்—எ-அஸராகி
7.மாஜூன்-எ-ஃபலாஸிபா
8.மாஜூன்-எ-ஸூரன்ஜான்
9.மாஜூன்-எ-உஷ்பா

இணைப்புத் திசுக்களில் ஏற்படும் வலி, விறைப்புத் தன்மை மற்றும் அழற்சி/ மூட்டுவாதம், வெளியுபயோகத்திற்கு சித்த மருந்துகள்- For Rheumatism –For External use
1.சுக்குத் தைலம்
2.குந்திரிகத் தைலம்
3.லகு விஷமுஷ்டித் தைலம்
4.மயனத் தைலம்
5.உளுந்துத் தைலம்
6.வாதகேசரித் தைலம்

இணைப்புத் திசுக்களில் ஏற்படும் வலி, விறைப்புத் தன்மை மற்றும் அழற்சி/ மூட்டுவாதம், வெளியுபயோகத்திற்கு ஆயுர்வேத மருந்துகள்- For Rheumatism –For External use
1.ஆமவாதத் தைலம்
2.தான்வந்த்ர தைலம்
3.க்ஷீரபலா தைலம்
4.குப்ஜப்சாரணீ தைலம்
5.மஹா மாஷத் தைலம்
6.நாராயணத் தைலம்
7.ப்ரபஞ்சன விமர்த்தன தைலம்
8.விஷ முஷ்டித் தைலம்

இணைப்புத் திசுக்களில் ஏற்படும் வலி, விறைப்புத் தன்மை மற்றும் அழற்சி/ மூட்டுவாதம், வெளியுபயோகத்திற்கு யுனானி மருந்துகள்- For Rheumatism –For External use
1.ரௌகன்-எ-காஸ்
2.ரௌகன்-எ-மஸ்தகி
3.ரௌகன்-எ-மோம்
4.ரௌகன்-எ-குஸ்த்
5.ரௌகன்-எ-ஸீர்
6.ரௌகன்-எ-ஸூர்க்


மேற்கண்ட மூலிகைகள் மற்றும் மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...