இலவங்கப்பட்டை மருத்துவப் பயன்கள்


உடல் எடையைக் குறைக்கும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் இலவங்கப்பட்டை




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit
 



பொதுவாக இலவங்கத்தின் (cinnamon) பயன் அதை உணவு வகைகளில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிப்பதற்கே எனப் பலர் நினைக்கலாம். ஆனால், இலவங்கத்திற்கு இதைவிட முக்கியமான மருத்துவப் பயன்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.இலவங்கத்தில் பலவிதங்கள் உண்டு. குறிப்பாக  பயிரிடப்படும் இலவங்க மரத்திலிருந்து எடுக்கப்படும் உள்பட்டை வெகுமணமானதாகும் மற்றும் இலவங்கம் சீனா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. வாங்கும்போது எந்தவகை இலவங்கம் உங்களுக்கு நல்லது என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

மருத்துவப் பயன்கள்:

அஜீரணம், வாயு, வயிறுஉப்பிசம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு இலவங்கப்பட்டை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமீபகாலமாக நவீன மருத்துவ ஆய்வுகள் அவற்றின் பார்வையை இலவங்கத்தின் மீது செலுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து ஆர்வத்தைத் தூண்டும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலவங்கப்பட்டைக்கு ஒரளவிற்கு (anti-inflammatory) இயல்பு உள்ளது. வேறோர் ஆய்வில் இலவங்கப்பட்டையின் வாசத்தை நுகர்வது ஞாபகச்சக்தியை அதிகரிக்கின்றது என்பதை சில மாணவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இத்தகைய ஆய்வுகளுக்கும் அப்பால் இலவங்கத்துக்கு வேறு முக்கியமான தன்மைகள், அதாவது குளுக்கோஸ் மற்றும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் தன்மைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

சர்க்கரை வியாதி

உலக மக்களுள் பலர் இன்று சர்க்கரை வியாதியினால் அவதிப்படுகின்றனர், அதாவது இதை இன்சுலின் மறுப்புநிலை எனக்கூறுவர். ஆனால், இலவங்கப் பட்டைத்தூளை ஓர் அரைத் தேக்கரண்டியளவு உட்கொண்டாலும் இன்சுலின் உணர்வுத்திறன் அதிகரிப்பு மற்றும் இரத்த   குளுக்கோஸ் கட்டுப்பாடு உருவாவது தெரியவந்துள்ளது. மேலும், இலவங்கப்பட்டையை உட்கொள்வது ஜீரணத்தையும் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கின்றது மற்றும் இருதயநோயை ஒரளவுக்கு கட்டுப்பாட்டிற்கும் கொண்டு வரக்கூடியது. ஆராய்ச்சிகள் முழுமை பெறாவிட்டாலும், இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகள் இலவங்கத்தின் நற்பயன்களை ஓரளவிற்கு வெளிப்படுத்தியுள்ளன. முக்கியமாக இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்தும் அதேவேளை இரத்தஅழுத்தம், மற்றும்  LDL கொழுப்பு வகைகளையும் இலவங்கம் கட்டுப்படுத்துகிறது  என்பதை ஆய்வுக் குறிப்புகள் காட்டுகின்றன.

மேற்கொண்டு இலவங்கத்தின் நன்மைகளுள் சில:

ஒரு தேக்கரண்டி அளவே இலவங்கப் பட்டைத்தூளில் 28மி.கி. கால்சியம், 1மி.கி. இரும்புச்சத்து, விட்டமின் C, விட்டமின் K ஆகியவைஉள்ளன.
இரத்த குளுக்கோஸை முறைப்படுத்தி டைப் -2 சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது.
ஈஸ்ட் (yeast) தொற்றைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.
லூக்கேமியா மற்றும் லிம்ஃபோமா (leukemia & lymphoma) புற்றணுக்களின் பரவலைக் குறைக்கும்  ஆற்றல்பெற்றது.
இரத்த உறைவை தடுக்கும் சக்தி பெற்றது
தினசரி காலையில் அரைத்தேக்கரண்டி இலவங்கப் பட்டைத்தூளை ஒரு மேஜைக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவாதநோய் ஒரேவாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைத்து ஒரு மாதத்தில் நோய் கண்டவர்கள் வலியின்றி நடக்கவும் முடிந்துள்ளது.
உணவில் சேர்க்கப்படும் போது அது கிருமி நாசினியாக செயல்பட்டு  உணவு கெட்டுப் போகாமல் தடுக்கின்றது.
சில பழச்சாறு வகைகளில் கலக்கப்படும்போது அது E.coli கிருமிகளை உருவாக்கத்தைத் தடுக்கின்றது.
உணவில் பூஞ்சனம் (பூசானம்) ஏற்படாமல் தடுக்கின்றது.

இலவங்கப்பட்டையை சமையலில் அதன் மகத்துவம் தெரியாமலேயே உபயோகித்திருக்கிறோம்..
அஞ்சறைப்பெட்டி அருமருந்துகளின் பெட்டகம்..
சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்தியசாலையையே வைத்திருந்தார்கள்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற  கோட்பாடு தலை தூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்து வருகின்றனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நம் முன்னோர்கள்.

கருவாப்பட்டை என அழைக்கப்படும் இலவங்கப்பட்டை செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.
தமிழில் இலவங்கப்பட்டை
ஆங்கிலத்தில்- Cinnamon
மலையாளத்தில் கருவாப்பட்டை
தெலுங்கில் லங்கப்பட்டா
Sanskrit - Twak
Hindi - Dalchini
BotanicalName – Cinnamomumverum என்றும் அழைக்கப்படும் அருமருந்து..
இதன்பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

அகத்தியர்குணபாடம்

தாதுநட்டம்பேதிசருவவிஷம்ஆகியநோய்
பூதகிரகஞ்சிலந்திப்பூச்சிவிடஞ்-சாதிவிடம்
ஆட்டுமிரைப்போடிருமல்ஆகியநோய்க்கூட்டமற
ஓட்டுமிலவங்கத்துரிசன்னலவங்கப்பட்டைதான்குளிர்ச்சியுண்டாக்கும்
இன்னுமிரத்தக்கடுப்பையீர்க்குங்காண்-முன்னமுறும்
உந்திக்கடுப்பகற்றும்உண்மூலப்புண்போக்கும்கந்தமிகுபூங்குழலே! காண் -- என்றுரைக்கிறது...

இலவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிகசுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

நீரிழிவுநோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் இலவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது. வாய்துர்நாற்றம் நீங்க வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய்துர்நாற்றம் நீங்கும்.

செரிமானசக்தியைத்தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக்கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலாவில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து  சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

இருமல், இரைப்பு

சளித் தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காசநோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்ற வைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப்பூச்சிகள் தாக்கினால் இலவங்கப் பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும்.   வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக் கொண்டு அதனுடன் தேன்கலந்து காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சிறந்த மருந்தாக. கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் வெகுவிரைவில் சாதாரண நிலைக்கு வருவார்கள்..

இலவங்கபட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால்பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவுநோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்துவிடும்.

அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான். இலவங்கப் பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.
நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளிகளுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை இலவங்கப் பட்டையை கொடுத்து வந்தனர். 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் இரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.
* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
* இதயநோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத் துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்துமையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு இலவங்கபட்டைப் பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான்கிரேவ்ஸ் என்பவரும் இலவங்கப் பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது இலவங்கபட்டை என்கிறார் அவர்.
நம்நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் இலவங்கப்பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்புசத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆகபட்டையைஉணவில்சேர்த்துபட்டையைக்கிளப்புவோம்!


 மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...