Posts

வெள்ளைப்பூசணி வெச்சு இந்த 10 நோய்களுக்கு வைத்தியம் பார்க்கலாம்..

வெள்ளைப்பூசணி வெச்சு இந்த 10 நோய்களுக்கு வைத்தியம் பார்க்கலாம்.. எதற்கு... எப்படி.. தெரிஞ்சுக்கலாம்!! பல வகை நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் உணவுகளின் பட்டியலில் வெள்ளை பூசணியும் ஒன்று. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் வெப்பத்தை வெல்வதற்கும் உடலில் சக்தியை அளிக்கவும் உதவுகிறது. வெள்ளை பூசணியில் வைட்டமின் சி மற்றும் பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், தயமின் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்தவை. மேலும் இதில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றையும் கொண்டுள்ளது. இதன் நன்மைகள் குறித்து பார்க்கலாம். சிறுநீர் பிரச்சினைக்கு வெள்ளைப்பூசணி : சிறுநீரக கற்கள் இருந்தால் 50-6- பூசணி விதைகள் எடுத்து தோல் நீக்கி எடுத்து 200 மில்லி மோரில் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் சிறுநீரக கற்களுக்கு தீர்வாக இருக்கும். வெள்ளை பூசணி சாறு 100 மில்லி அளவு எடுத்து அதில் 10 கிராம் கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணப்