வெள்ளைப்பூசணி வெச்சு இந்த 10 நோய்களுக்கு வைத்தியம் பார்க்கலாம்..

வெள்ளைப்பூசணி வெச்சு இந்த 10 நோய்களுக்கு வைத்தியம் பார்க்கலாம்.. எதற்கு... எப்படி.. தெரிஞ்சுக்கலாம்!!

பல வகை நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் உணவுகளின் பட்டியலில் வெள்ளை பூசணியும் ஒன்று. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் வெப்பத்தை வெல்வதற்கும் உடலில் சக்தியை அளிக்கவும் உதவுகிறது.

வெள்ளை பூசணியில் வைட்டமின் சி மற்றும் பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், தயமின் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்தவை. மேலும் இதில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றையும் கொண்டுள்ளது. இதன் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சிறுநீர் பிரச்சினைக்கு வெள்ளைப்பூசணி :

சிறுநீரக கற்கள் இருந்தால் 50-6- பூசணி விதைகள் எடுத்து தோல் நீக்கி எடுத்து 200 மில்லி மோரில் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் சிறுநீரக கற்களுக்கு தீர்வாக இருக்கும்.

வெள்ளை பூசணி சாறு 100 மில்லி அளவு எடுத்து அதில் 10 கிராம் கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணப்படுத்தும்.
சிறுநீரகங்களில் இருக்கும் நச்சை வெளியேற்றுகிறது. மேலும் உடல் கழிவுகளை சாதாரணமாக வெளியேற்ற தூண்டுகிறது.

​ஆற்றல் அளிக்கும் வெள்ளை பூசணி :

ஞாபக மறதி பிரச்சினை இருந்தால் வெள்ளை பூசணியை சாறாக்கி 50 மில்லி அளவு எடுத்து அதில் 1 டீஸ்பூன் நெய் மற்றும் 1 சிட்டிகை அதிமதுரப்பொடி கலந்து 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி சரியாகும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெள்ளைபூசணி சாறு குடித்துவந்தால் அது அறிவாற்றலை மேம்படுத்தும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும். மன அமைதியை அளிக்கும்.

​முலைக்காம்பு புண்களுக்கு வெள்ளை பூசணி :

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு முலைக்காம்பு புண்கள் உண்டாகும். இதை போக்க வெள்ளைபூசணி பூக்களை எடுத்து அதை புளி இலைகளுடன் மசித்து மார்பு காம்புகளில் தடவினால் அழற்சி சரியாகும்.

​மூலநோய்க்கு வெள்ளைப்பூசணி :

வெள்ளைப்பூசணி சாற்றை சிறிதளவு உட்கொண்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உடலில் அதிக வெப்பம் கொண்டவர்கள் உடலை குளிர்ச்சிப்படுத்த இவை உதவும். குறிப்பாக மூலம், பைல்ஸ் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும்.

​வெள்ளைப்பூசணி சாற்றின் நன்மைகள் :

வெள்ளைப்பூசணி பழச்சாறு 10-20 மில்லி அளவு கற்கண்டு சேர்த்து நாள் ஒன்றுக்கு 2- 3 முறை குடித்து வரலாம். இது அமிலத்தன்மை, எரியும் உணர்வு, இரத்தப்போக்கு கோளாறுகள், சிறுகுடல் புண், சிறுநீர்ப்பை, உடல் முழுவதும் அரிப்பு, நரம்பு பிரச்சினை. அல்சர் போன்றவற்றை சரி செய்ய உதவும்.

வெள்ளைப்பூசணி பழச்சாறு மற்றும் விதைகள் தோல் நீக்கி தட்டி சாறு எடுத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குடிக்கவும். இது உடல் பருமன், வயிற்றுப்புண், அல்சைமர் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கு.

​இதயத்துக்கு வெள்ளைப்பூசணி :

இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வெள்ளைப்பூசணி உதவுகிறது. இந்திய உணவுகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் இது இதயத்துக்கு மற்றும் இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதய தசைகளின் செயல்பாட்டை உறுதி செய்கிறது.

​சுவாசத்துக்கு நன்மை செய்யும் வெள்ளைப்பூசணி :

பூசணிக்காய் உள்ளார்ந்த சளி சுரக்கும் தன்மையை கொண்டுள்ளது. உடலில் அதிகப்படியான சளி அல்லது சளி சுரப்புகளை உடனடியாக தளர்த்தவும் மற்றும் சுவாசக்குழாயிலிருந்து அவற்றை அகற்றவும் உதவுகிறது.

​மஞ்சள் காமாலைக்கு வெள்ளைப்பூசணி :

ஆயுர்வேத தீர்வில் வெள்ளைப்பூசணி இலையை தனியா விதைகளுடன் சேர்த்து அரைத்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்துகொள்வது மஞ்சள் காமாலைக்கு மருந்தாக இருக்கும்.

​மூட்டு நோய்களுக்கு வெள்ளைப்பூசணி :

மூட்டு நோய்கள் இருப்பவர்கள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மூன்று அத்தியாவசிய எலும்புகளை வலுப்படுத்தும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. இது எலும்பை வலுவாக வைத்திருக்க செய்கிறது. மேலும் தசைகள் மற்றும் மூட்டுகளில் நெகிழ்வான இயக்கத்தை பெற உதவுகிறது.

​தைராய்டுக்கு வெள்ளைப் பூசணி 

பூசணிக்காயில் அயோடின் உள்ளடக்கம் ஏராளமாக உள்ளது. இது உயர்ந்த தைராய்டு ஹார்மோன் அளவை குறைக்க இன்றியமையாதது. அதே போல் தைராய்டு செறிவுகளை மேம்படுத்தும் என்சைம் செயல்பாட்டை எளிதாக்குவதில் இதில் இருக்கும் துத்தநாகம் உதவும்.

வெள்ளைப்பூசணியை உணவாக எடுத்து வந்தாலே இந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.