Posts

பலவீனமானவர்களை பலசாலியாக்கும் பஞ்சமுட்டி கஞ்சி.

பலவீனமானவர்களை பலசாலியாக்கும் பஞ்சமுட்டி கஞ்சி.. எப்படி தயாரிப்பது.. பலன்கள் என்ன... யாருக்கு நல்லது? பாரம்பரியமான உணவுகள் நோய்களை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மிகச்சிறப்பாக உதவும். அப்படியான ஒன்று பஞ்சமுட்டி கஞ்சி. நோயுற்ற காலங்களில் என்றில்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு முறையில் மென்மையான திரவ உணவுகளை தான் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். இவை உடலுக்கு வலுவூட்டவும் உதவும். அதில் ஒன்று பஞ்சமுட்டி கஞ்சி. அதன் தயாரிப்பு மற்றும் பலன்கள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவ நிபுணர் மரு.வி.விக்ரம்குமார்.,MD(S). பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையை குறிக்கும். ஐந்து வித மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் இது பஞ்சமுட்டி கஞ்சி என்றழைக்கப்படுகிறது. நவீன உணவுகள் வந்தாலும் கூட இன்றும் விட்டு பெரியோர்கள் இதை செய்கிறார்கள். பஞ்சமுட்டி கஞ்சி மிகுந்த ஊட்டத்தை கொடுக்கும். உடல் மெலிவு இருப்பவர்களுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து குறைபாடுகளால் அதாவது போதுமான அளவு ஊட்டம் இல்லாதவர்கள் இதை எடுத்துகொள்ளலாம். டிபி, புற்றுநோய் போன்ற நோய்களால் உடல் மெலிவு கொண்டிருப்பவர்களுக்கு போஷாக்கு அளிக்க இந்த பஞ்சம