சோரியாசிஸ் நோய்க்கு சித்த மருத்துவம்

 சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை (Psoriasis)

தோல் நோய்களில் ஒன்றான சோரியாசிஸ் (Psoriasis) எனப்படும் காளாஞ்சகப்படை நோய் மற்றும் செதில் உதிர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

 

சோரியாசிஸ் நோய் எப்படி உருவாகிறது?


தோல் செல்கள் 28 நாட்களுக்கு ஒரு முறை இயல்பான முறையில் புதியதாக தோன்றி மறையும் தன்மை கொண்டது. இயற்கைக்கு மாறாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தோன்றுவதால் பழைய தோல் செதிலாக உரியத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் தோலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, நுண்ணிய இரத்த குழாய்கள் தளர்ந்து, விரிவடைந்து, வீங்க ஆரம்பிக்கின்றன.
இதனால் கடினமான, நிறமற்ற, பெரிய, நெய்ப்புத் தன்மையுடைய, வித்தியாசமான தோல் செல்கள் சோரியாசிஸ் நோயில் உண்டாகின்றன. உடலின் வளர்சிதை மாற்றம் வேறுபாட்டினால் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகரிக்கவோ அல்லது சிதைவடையவோ செய்கின்றன. இதனால் சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு உயிரிழந்த தோல் செல்கள் அதிகரித்து செதில்களாக மாறுகின்றன.

நோயின் தன்மை:

தோலில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான செதில்கள் போன்று உருவாகும் படைகள் தோன்றும். இந்தப் படைகளின் உருவமும், அளவும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடும். இது உடலில் எந்த இடத்திலும் தோன்றலாம். பெரும்பாலும் தலை மற்றும் உடலில் தோன்றும், சிலருக்கு நகங்களை பாதித்து நகத்தில் பள்ளங்களும், குத்தியது போன்ற குழிகளும் தோன்றும்.

சிலருக்கு இந்நோய், மூட்டுகளையும் பாதித்து மூட்டுவலியை உண்டாக்கும் (Psorisatic Arthritis).

இந்நோய் ஏன் ஏற்படுகிறது?

பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் பரம்பரை காரணி உள்ளது. தாய் அல்லது தந்தையில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால் அவர்களின் வாரிசுக்கு இந்நோய் வருவதற்கு 25% வாய்ப்புள்ளது. இருவருக்கும் இந்நோய் இருந்தால் வாரிசுக்கு 50% வாய்ப்புள்ளது.

தோலில் பல அடுக்குகள் உள்ளன. கீழே உள்ள அடுக்கில் உள்ள செல்கள் (Keratinocyte) முதிர்ந்து, அடுத்த அடுக்காக மாறும். இவ்வாறு இறுதியில் மேலே உள்ள அடுக்கில் உள்ள செல்கள் துகள்காக உதிர்ந்து விடும். இந்த நிகழ்வுகள் இயற்கையாக தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

இந்த மொத்த நிகழ்வும் ஒருமுறை நடைபெறுவதற்கு 28 நாட்கள் ஆகும். அதாவது கீழ் அடுக்கில் உள்ள செல்கள் முதிர்ந்து கடைசி அடுக்கிற்குச் சென்று உதிர்வதற்கு 28 நாட்கள் ஆகும். ஆனால் சொரியாசிஸ் நோயில் இவை 5 நாட்களில் நடந்து விடுகிறது. எனவே முறையாக முதிர்ச்சி அடையாமல் தோல் செல்கள் உதிர ஆரம்பிக்கின்றன. இவர்களுக்கு நகங்களும் இதேபோல முதிர்ச்சி அடையாமல், வேகமாக வளர்வதால் நகங்களும் குழிகள் விழுந்து காணப்படும்.

சோரியாசிஸை அதிகப்படுத்தும் காரணிகள்:

 • காயங்கள்
 • சில தொற்றுக் கிருமிகள்
 • சிலருக்கு வெயில்
 • சில மருந்துகள்
 • மன அழுத்தம்

எந்த வயதினருக்கு இந்நோய் ஏற்படுகிறது:

 • எல்லா வயதினருக்கும் வரலாம். ஆனால் பொதுவாக 5 வயதுக்குள் உள்ள சிறுவர்களுக்கு வருவதில்லை.
 • பொதுவாக பதின்வயது மற்றும் வாலிப வயதில் ஆரம்பிக்கும்.
 • அதற்கடுத்து 50 மற்றும் 60களில் ஆரம்பிக்கலாம்.
 • எவ்வளவு குறைந்த வயதில் ஆரம்பிக்கிறதோ, அவ்வளவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மருத்துவம்:

சித்த மருத்துவத்தில் சிறப்பாக குணப்படுத்தக்கூடிய நோய்களில் இந்த நோயும் ஒன்று. பொதுவாகவே தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை ஏற்கனவே கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மனதை சாந்தப்படுத்தக்கூடியதும், தோல் செயல்பாட்டை சரிசெய்யக்கூடியதுமான உள் மருந்துகளுடன், புற மருந்துகளும் தொடர்ந்து முறையாக எடுப்பதன் மூலம் இந்நோயை முற்றிலும் சரி செய்யலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

 • அசைவம்
 • கம்பு
 • தினை
 • வரகு
 • சாமை
 • கிழங்கு வகைகள்
 • கொய்யா
 • முட்டை
 • மீன்கள்
 • கருவாடு
 • கத்தரிக்காய்
 • மாங்காய்

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் நோயினை அதிகரிக்கலாம். அதை அறிந்து தவிர்ப்பது நல்லது.

 

சோரியாசிஸ் நோயை சித்த மருத்துவத்தில் முழுமையாக குணப்படுத்த முடியுமா?


நீண்ட நாள் சிகிச்சை, உணவுக்கட்டுப்பாடு மற்றும் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் நோயை கட்டுப்படுத்த முடியும். நீண்ட நாட்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சோரியாசிஸ் நிச்சயமாக குணமாகும். செதில்கள் முழுவதும் மறைந்து தோலின் கருப்பு அல்லது சிவப்பு தழும்புகள் மாறி இயற்கையான நிறம் வரும் வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு   அதிக கால அளவு சிகிச்சை தேவைப்படலாம். நோயின் தன்மை, நோயாளியின் வேலை, மனதிடம், உடல்வாகு, நோய் எதிர்ப்பு சக்தி, ஆகியவற்றை பொறுத்து நோய் குணமாகும். கால அளவு கூடவோ, குறையவோ ஆகலாம். நோயின் மறுதாக்குதல் வரும் வரை காத்திருக்காமல் தொடர் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.


 சோரியாஸிஸ் சிகிச்சையை மேற்கொள்ள சித்த, ஆயுர்வேத முறையில் முழுமையாக சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147