இளநீரின் இன்றியமையாத பயன்கள்

 இளநீரின் இன்றியமையாத பயன்கள்

இளநீரின் இன்றியமையாத பயன்கள் !!

பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit


சித்திரை பிறந்து விட்டது, சூரியனும் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது, பள்ளிக்கூடங்கள் அனைத்தும் விடுமுறையும் விட்டாயிற்று, இந்த சமயத்தில்தான் வெயில் மற்றும் சூடு தொடர்பான அனைத்து வியாதிகளும் பெரியவர்களையும் குழந்தைகளையும் தாக்க தொடங்கும், இவற்றிலிருந்து நம் உடலை பாதுகாத்து வெப்ப கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். 

முதலில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அனைவரும் உச்சி வெய்யிலின் போது வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
உடல் சூடு அதிகமாவது என்பது நம் உடலின் Acidity தன்மை அதிகமாவதை குறிப்பிடுவதாகும், நம் உடலை குளுமைப்படுத்த நாம் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவதன் மூலமும் மற்றும் குடிப்பதின் மூலமும் நம் உடலை எளிதாக கோடை கால நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

முதலில் தவிர்க்க வேண்டிய உணவுகளை பார்ப்போம்.
கார்பன்-டை-ஆக்ஸைடு அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அனைத்தும் டீ, காபி மற்றும் வறுத்து பொரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும் உடலின் Acidity தன்மையை கூட்டி உடலை அதிக சூடுபடுத்தி விடும்.
உடலை குளிர்விக்க நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய உணவுகள் காரத்தன்மை (Alkaline based foods) உடைய உணவுகளே ஆகும், அனைத்து இயற்கையான பழங்கள் மற்றும் சமைக்காத காய்கறிகள் அனைத்துமே காரத்தன்மை உடையவைதான். மேலும் அதிகமான தகவலுக்கு Google-ல் Acid Alkaline Food Chart என்ற keywords use செய்து தேடவும்.

இவற்றில் முக்கியமானது இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கரும்புசாறு எலுமிச்சம்பழச்சாறு (உப்பு கலந்தது) மற்றும் பதப்படுத்தப்படாத அனைத்து பழச்சாறுகளும், இத்துடன் கூடுதலாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளின் வரிசையில் முதன்மையாக இருப்பது கடல்பாசி என்று அழைக்கப்படுகின்ற பாதாம் பிசின், சப்ஜா விதைகள் மற்றும் வெள்ளரி விதைகள், வெண்பூசணி விதைகள்.
 
மெத்தையில் படுப்பதுவும் மற்றும் A/C உபயோகப்படுத்துவதுமே உடல் சூட்டை கூட்டி விடும் விஷயங்களாகும்,
வெறும் தரையில் பாய், போர்வை விரித்து படுப்பதும், குளிர்சாதனபெட்டியை உபயோகித்தாலும் அந்த அறையை வெளிக்காற்று வந்து செல்லுமாறு ஏதாவது ஒரு ஜன்னலையாவது திறந்து வைப்பது நல்லது.

மற்றும் சுடுநீரில் குளிப்பவர்கள் வெயில் காலம் முடியும் வரை குளிர்ந்த நீரை மட்டும் குளிப்பதற்கு பயன்படுத்துவது உடலுக்கு நல்லது, குளிர்ந்த நீரையும் தலை வழியாக குளித்தால் மட்டுமே உடல் சூடு அனைத்தும் வெளியேறும்.

இவை அனைத்தையும் சரியாக பின்பற்றி வெய்யிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம். பின்வரும் Post-ல் இளநீரைப் பற்றி அதிகமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும். மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும்.

வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து அவை வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும். நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.

இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையைப் போக்குகிறது.

இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.

சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது.

மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப் படுத்தும். தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.

இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவுகிறது.

தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.

இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது.

இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பயன்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

அடிக்கடி இளநீர் பருகி நீண்டநாள் ஆரோக்கியம் பெற்று வாழ்க.