மாரடைப்பும், பக்கவாதமும்… ஒரு அவசர அலெர்ட்

 மாரடைப்பும், பக்கவாதமும்…ஒரு அவசர அலெர்ட்


30 வயதில் மாரடைப்பும், பக்கவாதமும்… ஒரு அவசர அலெர்ட்
 




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி             Bamboo Rice
வில்வம் பழம்              Bael Fruit
 

பக்கவாதத்தால் இன்று பரவலாக நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள், பக்கவாதத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இல்லை என்றாலும் பக்கவாதம் ஏற்படுத்திவிட்டு போகும் பாதிப்புகள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது அல்லது வாழ்க்கையையே முடக்கி போட்டு விடுகிறது. பக்கவாதம் முன்பு எல்லாம் வயதானவர்களை மட்டுமே பாதித்து கொண்டிருந்தது, ஆனால் தற்போதைய அவசர வாழ்க்கை முறை முப்பதுகளில் இருப்பவர்களை கூட பாதிக்கிறது, இப்படிப்பட்ட பக்கவாதம் நம்மை பாதிக்காமல் இருக்க நம் வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்வது என்பதையும், பக்கவாதம் வந்தவர்களுக்கு எந்த சிகிச்சை முறை சிறந்தது என்பது பற்றியும் பார்ப்போம்…

முதலில் ஒரு நோய் நம் உடலில் எவ்வாறு உருவாகிறது என்று தெரிந்தால் தான் அந்த நோயை வராமலும் தடுக்க முடியும்…
பக்கவாதம் என்பது இரத்தத்தை மூளைக்கு கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்பே ஆகும், இதனால் மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சரியான முறையில் உடலை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது, இதில் திடீர் அடைப்பு என்பதே ஒரு கேள்விக்குரிய விஷயம்தான், ஏனென்றால் இந்த அடைப்பு ஒரே நாளில் நடப்பதல்ல, பலகாலமாக நம் உடலில் நாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் கொழுப்பு படிப்படியாக நம் இரத்த நாளங்களில் படிந்து சிறிது சிறிதாக இரத்த ஓட்டத்தை குறைத்து, இரத்த அழுத்தம் அதிகமாகி அதற்குப் பிறகுதான் ஏற்படுகிறது, ஆனால் நாம்தான் ஏனோ ஒரே நாளிலேயே பக்கவாதம் பாதித்து விட்டதென நினைக்கிறோம்…
இதற்கு உதாரணமாக நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் Borewell water connection-யே எடுத்துக் கொள்ளலாம், வருடத்திற்கொரு முறை நம் வீட்டில் பைப் அடைத்துக் கொள்ளும், நாமும் Plumber-ஐ கூப்பிட்டு வேலை பார்க்க சொன்னால் அவர் வந்து அடைத்திருக்கும் பைப்பை மட்டும் வேலை பார்த்து விட்டு செல்வார், அப்போதைக்கு பிரச்சினை தீர்ந்து விடும்,
இப்போது உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி…
உப்பு அந்த குறிப்பிட்ட பைப்பில் மட்டும் படிந்திருக்குமா அல்லது நம் வீட்டில் உள்ள அனைத்து பைப் லைனிலும் படிந்திருக்குமா?
இதே மாதிரிதான் காலம்காலமாக நம் இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு எப்போது எந்த இடத்தில் அடைக்கும் என்பது தெரியாது…
அதன் வெளிப்பாடு Heart attack-ஆக இருக்கலாம், காலில் உள்ள இரத்த நாளம் அடைபடலாம், அல்லது பக்கவாதமாக இருக்கலாம்…

பக்கவாதமும் இருதய அடைப்பு இரண்டுமே Siamese twins போலதான், ஒன்றை விட்டு ஒன்று பிரியாது அல்லது ஒன்றுக்குப்பின் மற்றொன்று மறைந்திருக்கும்.
பக்கவாதம் மற்றும் இதய அடைப்பு இவை இரண்டும் வந்து நம் உடல் நிலை பாதிக்கப்படுவது முதல் பட்சமாக இருந்தாலும், இன்றைக்கு உள்ள மருத்துவ செலவுகள் நம்முடைய வாழ்நாள் சேமிப்பையே காலி செய்து நம்மை கடனாளியாக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது…

நம் உடலை ஆரோக்கியமாக வைத்து, நம் சேமிப்பையும் காத்துக் கொள்ள ஒரே வழி நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது மட்டுமே…
நான் பிறப்பிலிருந்தே மதுரையை சார்ந்தவன், 90களில் ஒரு 5 வருடங்கள் பணி சூழ்நிலை காரணமாக சென்னையில் இருக்க வேண்டி வந்தது, எப்போது மதுரைக்கு திரும்பி நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ்வோம் என்ற எண்ணம் தான் அந்த 5 வருடங்களும் எனக்குள் இருந்தது…
90 களிலேயே அப்படிப்பட்ட நெருக்கடி என்றால் தற்போதுள்ள சூழ்நிலை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை…
சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மக்கள் எதை நோக்கி அல்லது எதை தேடி இவ்வளவு அவசரமான நெருக்கடியான வாழ்க்கை முறை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை…
அல்லது இதைப் போன்றதொரு வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டு விட்டார்களா என்றும் புரியவில்லை…
வள்ளலார் கூறியதைப் போல் அனைவரும் வாழ்க்கையில் பணத்தை தேடி ஓடுகிறார்கள், கடைசியில் சேர்த்த பணம் அனைத்தையும் மருத்துவத்திற்காக செலவிட்டு விட்டு கடனாளி ஆகிறார்கள்.

பக்கவாதமோ, மாரடைப்போ அல்லது இதைப் போன்ற பெரிய நோய்களோ எதுவும் நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் தற்போதுள்ள இயந்திரத்தனமான மற்றும் கெமிக்கல் வாழ்க்கை முறையிலிருந்து வெளியே வர வேண்டும்… (வெளியே வர முடியாது என்பவர்கள் கண்டிப்பாக அதற்குரிய விலையை கொடுத்து தான் ஆக வேண்டும்)
அதற்காக பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு மறுபடியும் ஊருக்கு செல்ல எல்லோராலும் முடியாது…
நாம் இருக்கும் இடத்திலேயே, வாழும் சூழ்நிலையிலேயே முடிந்த அளவிற்கு நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்…

நம் அடிப்படை ஆரோக்கியம் நம் உணவு முறையிலிருந்தே ஆரம்பிக்கிறது, ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நினைப்பு என்னவென்றால் உணவு வேளையை ஒரு சடங்காக மட்டுமே நினைத்து கடந்து விடுகிறோம்…
ஆனால் உணவுதான் உடம்பை வளர்க்கிறது, ஆரோக்கியத்தை வளர்க்கிறது என்பதை நாம் என்று புரிந்து கொண்டு உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அன்றுதான் நம் ஆரோக்கியத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும்…
மால்களில் விற்கப்படும் பீட்சா, பர்கரிலும் ரெடிமேட் உணவுகளிலும் கண்டிப்பாக உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியாது…
நம் வீட்டில் செய்யப்படும் அனைத்து உணவுகளுமே ஆரோக்கியமான உணவு தான், அது பழைய சோறாக இருந்தாலும் சரி, சுடச் சுடச் சாப்பிடும் இட்டிலியாக இருந்தாலும், நேற்று வைத்த மீன் குழம்பாக இருந்தாலும் இவை ஆரோக்கியம் மட்டுமே தரும், கண்டிப்பாக நோயை தருவதில்லை…
உணவைத் தவிர்த்து நாம் கவனிக்க வேண்டிய விஷயம், தினசரி ஒரு அரை மணி நேரமாவது உடல் பயிற்சி அல்லது குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகள் கண்டிப்பாக செய்வது நோய்களை சற்று தூரத்தில் தள்ளி வைக்கும்…
A/C அறையில் இருப்பதை முடிந்த அளவு தவிர்ப்பதும், அனைவர் வீட்டிலும் இருக்கக்கூடிய (இருக்க தேவையில்லாத) குளிர்சாதன பெட்டியையும் முடிந்த அளவு தவிர்ப்பது நம் வாழ்நாளை கண்டிப்பாக நீட்டிக்கும்…
அமிலத்தன்மையுள்ள (Acidic Foods) உணவுகளை குறைத்து காரத்தன்மையுள்ள (Alkaline Foods) உணவுகளை எடுத்துக் கொள்வது உடம்பை குண்டாக்காமல் மெலிவாகவும் கொழுப்பு சேராமலும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது…

மேற்கண்ட அனைத்தையும் பின்பற்றும்போது பக்கவாதமும், மாரடைப்பும் கண்டிப்பாக வராமல் தடுக்க முடியும்…
பக்கவாதமும், மாரடைப்பும் வந்தவர்கள் வெறுமனே இரத்தத்தை நீர்மை படுத்தும் மருந்துகளையும், வீக்கத்தை வற்ற வைக்கும் தற்காலிகமான மருந்துகளை மட்டுமே நம்பியிராமல், எந்த மருத்துவத்தில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் இதனை நிரந்தரமாக குணப்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளன என்பதை கண்டறிந்து மருந்துகள் சாப்பிட்டு உங்களுக்கு வந்த நோயை வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திடாமல், விரைவில் உங்களை விட்டு நோயையும் மருந்து மாத்திரைகளையும் விரட்டி விட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்…